1 00:00:10,135 --> 00:00:11,178 பூஸான் 2 00:00:12,888 --> 00:00:14,640 (கொரிய மொழியில்) கண்டிப்பாகத் தெரியுமா? 3 00:00:14,723 --> 00:00:17,351 நிஜமாகவே இதற்கு புதியது அளவுக்கு செலவாகும். 4 00:00:19,937 --> 00:00:21,355 (ஜப்பானிய மொழியில்) திரு. கோ! 5 00:00:21,438 --> 00:00:22,689 சரியான நேரத்திற்கு வந்திருக்கிறீர்கள். 6 00:00:22,773 --> 00:00:24,483 உங்களுடைய புதிய சூட் தயாராகிவிட்டது. 7 00:00:26,068 --> 00:00:27,611 காத்திருங்கள் வருகிறேன். 8 00:00:28,904 --> 00:00:31,323 பாஸ்டருக்கு பிறகு என்னிடம் வாருங்கள். 9 00:00:34,117 --> 00:00:35,494 எனக்கு அவசரமில்லை. 10 00:00:37,538 --> 00:00:38,539 சரி. 11 00:00:42,417 --> 00:00:44,294 வெளிப்படையாக தெரிகிறது என்பதை உணரவில்லை. 12 00:00:45,087 --> 00:00:47,881 நான் நிஜமாக அந்த அளவுக்கா பாஸ்டரைப் போல தெரிகிறேன்? 13 00:00:53,929 --> 00:00:56,640 இங்கு என்ன நடக்கிறது என்பதை அறிவதை என் வழக்கமாக வைத்திருக்கிறேன். 14 00:00:58,100 --> 00:01:00,352 நோயோடு ஒரு புதியவர் வருவதை அறிந்தால்… 15 00:01:01,603 --> 00:01:03,814 நான் கவனம் செலுத்துவேன். 16 00:01:08,527 --> 00:01:10,070 இப்போது நன்றாக இருக்கிறேன். 17 00:01:10,153 --> 00:01:12,030 கவலைப்பட வேண்டியதில்லை. 18 00:01:12,114 --> 00:01:13,365 கேட்க நன்றாக இருக்கிறது. 19 00:01:20,122 --> 00:01:21,915 உங்கள் ஆடை உங்களுக்கு பொருத்தமாக இல்லை. 20 00:01:23,834 --> 00:01:24,918 அப்படித்தான் தெரிகிறது. 21 00:01:27,296 --> 00:01:29,173 இந்த சூட் இறந்துவிட்ட என் அண்ணனுடையது. 22 00:01:34,344 --> 00:01:36,763 அவரும் இதே நோயால்தான் இறந்தாரா? 23 00:01:39,183 --> 00:01:40,184 இல்லை. 24 00:01:41,101 --> 00:01:42,394 என் அண்ணன், சமோயல், 25 00:01:43,145 --> 00:01:44,897 தன் வாழ்வில் ஒருநாள் கூட நோய்வாய்ப்பட்டதில்லை. 26 00:01:50,903 --> 00:01:52,154 சுதந்திர போராட்டம். 27 00:01:54,031 --> 00:01:55,782 நான் அப்போது சிறுவனாக இருந்தேன். 28 00:01:58,702 --> 00:02:00,495 கைது செய்யப்பட்டவர்களில் அவரும் ஒருவர். 29 00:02:04,583 --> 00:02:06,710 நாங்கள் அவரை திரும்ப பார்க்கவே இல்லை. 30 00:02:08,002 --> 00:02:09,295 அப்படியென்றால் அவர் தியாகியா? 31 00:02:13,050 --> 00:02:15,010 எனக்கு, வெறும் அண்ணன் தான். 32 00:02:19,848 --> 00:02:22,601 ஒருவர் தன்னை இந்த உலகிற்கு எப்படி வெளிபடுத்துகிறார் என்பதுதான் முக்கியம். 33 00:02:23,352 --> 00:02:25,604 அந்த முதல் பதிவுதான் நினைவில் இருக்கும். 34 00:02:27,439 --> 00:02:29,066 எனக்கு அனுபவத்திலிருந்து தெரியும். 35 00:02:30,359 --> 00:02:32,653 இந்த உலகம் இப்போது என்னை எப்படி பார்க்கிறது? 36 00:02:33,487 --> 00:02:35,030 ஒரு பொருட்டே அல்ல என்பதுபோல. 37 00:02:37,199 --> 00:02:39,201 உங்களுக்குப் பொருந்தாத ஆடையை ஏன் அணிகிறீர்கள்? 38 00:02:40,327 --> 00:02:44,623 கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்தால், பரிதாபகரமானதாக தோன்றலாம். 39 00:02:48,418 --> 00:02:51,338 நிச்சயமாக நாம் இன்னும் சூட் குறித்துதான் பேசுகிறோமா? 40 00:02:58,262 --> 00:02:59,680 புதிய ஒன்றை வாங்குங்கள், பாஸ்டர். 41 00:03:00,180 --> 00:03:01,348 நான் அதற்கு பணம் தருகிறேன். 42 00:03:24,705 --> 00:03:26,456 உங்களுக்கு கவலை வேண்டாம். 43 00:03:27,958 --> 00:03:29,918 என் சூட்டிற்கு என்னால் பணம் செலுத்த முடியும். 44 00:03:30,502 --> 00:03:32,129 காக்கவைத்ததற்கு மன்னிக்கவும். 45 00:03:32,796 --> 00:03:34,965 தையல்களை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க விரும்பினேன். 46 00:03:35,048 --> 00:03:37,426 இது சரியாக பொருந்துகிறதா என்பதை உறுதி செய்யுங்கள். 47 00:03:42,139 --> 00:03:43,473 திரு. கினோஷிடா, 48 00:03:44,183 --> 00:03:45,726 நான் புதிய சூட் வாங்க முடிவெடுத்திருக்கிறேன். 49 00:03:46,226 --> 00:03:48,061 எனக்கு உடனே அது தேவைப்படும். 50 00:03:48,145 --> 00:03:50,272 வரவிருக்கும் திருமணத்திற்கு நான் அதை அணியப் போகிறேன். 51 00:03:50,355 --> 00:03:52,482 அருமையான விஷயம். 52 00:03:52,566 --> 00:03:56,195 வாழ்த்துகள்! அது நீண்ட காலத்திற்கு நீடிக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். 53 00:03:56,695 --> 00:03:59,281 தயவுசெய்து, இதை மீண்டும் சரிசெய்யுங்கள். 54 00:03:59,990 --> 00:04:01,450 இது எனக்குப் பொருந்தவில்லை என்றாலும் கூட, 55 00:04:01,533 --> 00:04:02,576 யாருக்குத் தெரியப்போகிறது. 56 00:04:02,659 --> 00:04:04,703 என் மகனுக்கு ஒருநாள் இது பொருத்தமாக இருக்கலாம். 57 00:04:04,786 --> 00:04:05,829 அருமையான யோசனை. 58 00:04:06,413 --> 00:04:09,458 முதலில் உங்கள் திருமண சூட்டை தயார் செய்கிறேன். 59 00:04:09,541 --> 00:04:10,751 மூன்று நாட்கள். 60 00:04:12,044 --> 00:04:13,587 அப்போது வருகிறேன். 61 00:05:30,038 --> 00:05:31,790 மின் ஜின் லீ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 62 00:05:54,855 --> 00:05:58,025 இதன் விளைவுகளை நீ புரிந்துகொண்டாயா? 63 00:05:59,526 --> 00:06:02,946 திருமணமாகாமல் கர்ப்பமான பெண்ணுக்கு, 64 00:06:03,030 --> 00:06:05,699 இது ஒரு இழுக்கு. 65 00:06:06,909 --> 00:06:10,287 பிறகு வேறொருவரின் குழந்தைக்கு உரிமை கொண்டாடுவதா? 66 00:06:12,039 --> 00:06:15,584 இந்த விஷயத்தில் நான் நிறைய யோசித்து பிரார்த்தனை செய்திருக்கிறேன். 67 00:06:16,668 --> 00:06:19,129 பாஸ்டர் ஷின், இந்த பெண்கள் என்னை காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர், 68 00:06:20,547 --> 00:06:22,508 நான் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 69 00:06:34,728 --> 00:06:35,979 எழுந்திரு. 70 00:06:44,112 --> 00:06:45,489 என்னைப் பார். 71 00:06:50,953 --> 00:06:54,831 நீ உனக்கும் உன் குழந்தையின் பெயருக்கு மட்டும் களங்கம் ஏற்படுத்தவில்லை, 72 00:06:55,415 --> 00:06:56,750 உன் குடும்பத்திற்கும், 73 00:06:57,584 --> 00:07:01,088 அதோடு இந்த நல்லவரின் நற்பெயருக்கும் தான். 74 00:07:01,171 --> 00:07:02,256 உனக்குப் புரிகிறதா? 75 00:07:03,841 --> 00:07:07,135 பாஸ்டர், இது தேவையா? 76 00:07:08,178 --> 00:07:11,682 இதுபோன்ற விஷயங்களைச் சொல்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை, 77 00:07:12,266 --> 00:07:15,561 ஆனால் நாம் கஷ்டமான, இரக்கமற்ற காலத்தில் வாழ்கிறோம். 78 00:07:16,937 --> 00:07:20,190 நல்லவர்கள் கூட மற்றவர்களின் 79 00:07:21,400 --> 00:07:24,778 பலவீனத்திற்கு இரையாகிறார்கள். 80 00:07:30,492 --> 00:07:33,287 உன் பாவத்தின் தன்மை என்னவென்று உனக்குப் புரிகிறதா? 81 00:07:39,459 --> 00:07:40,794 என்னை மன்னியுங்கள். 82 00:07:41,962 --> 00:07:43,297 உன்னை மன்னிப்பதா? 83 00:07:43,797 --> 00:07:46,341 மன்னிக்கக் கூடியவன் நான் அல்ல. 84 00:07:47,050 --> 00:07:51,430 உன் பிரார்த்தனைகளை நீ கடவுளிடம்தான் செலுத்த வேண்டும். 85 00:07:54,349 --> 00:07:59,271 நீ கடவுள் நம்பிக்கையுடைய குடும்பத்தில் இருந்து வரவில்லை என்பது எனக்குத் தெரியும், 86 00:08:00,522 --> 00:08:01,732 இருந்தாலும் உன்னால் நிஜமாக 87 00:08:02,774 --> 00:08:04,985 கடவுள் மீது நம்பிக்கைவைக்க முடியுமா? 88 00:08:12,910 --> 00:08:13,911 முடியும். 89 00:08:19,458 --> 00:08:22,794 இருவரும், நெருக்கமாக நில்லுங்கள். 90 00:08:36,015 --> 00:08:37,476 பரம பிதாவே, 91 00:08:39,977 --> 00:08:44,316 இவர்கள் இருவருக்கும் இடையிலான ஒற்றுமையை ஆசீர்வதிக்குமாறு உங்களிடம் வேண்டுகிறேன். 92 00:08:47,069 --> 00:08:51,156 உங்கள் கருணையின் மூலம் 93 00:08:51,823 --> 00:08:55,327 இந்தச் சந்தர்ப்பத்தை விமோசனம் பெற இவர்கள் பயன்படுத்திக்கொள்ள பிரார்த்திக்கிறேன். 94 00:08:57,955 --> 00:09:00,165 கணவன் மனைவியாக 95 00:09:00,249 --> 00:09:05,212 அவர்களை இணைக்கும் ஆன்மீக பந்தம் அசைக்க முடியாததாக இருக்க வேண்டும் என்பதை 96 00:09:06,338 --> 00:09:08,131 அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். 97 00:09:09,925 --> 00:09:15,514 அதோடு ஒருவரையொருவர் எப்படி மதித்து நடக்க வேண்டும் என்பதைக் காட்டுங்கள். 98 00:09:17,391 --> 00:09:23,230 உண்மையான, ஆழமான காதல் மலரட்டும். 99 00:09:24,982 --> 00:09:31,405 கர்த்தரின் பெயரால் பிரார்த்திப்போம். 100 00:09:33,532 --> 00:09:34,992 ஆமென் 101 00:09:51,925 --> 00:09:52,926 சார். 102 00:09:54,136 --> 00:09:55,345 ஹலோ. 103 00:09:56,096 --> 00:09:59,516 வாடகை வீடு உன்னை பரபரப்பாக வைத்திருக்க வேண்டும். 104 00:10:00,142 --> 00:10:01,602 சந்தித்து நீண்ட காலம் ஆகிவிட்டது! 105 00:10:01,685 --> 00:10:02,853 ஆம் 106 00:10:02,936 --> 00:10:05,439 நான் இங்கே வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது, 107 00:10:05,981 --> 00:10:08,066 இங்கே வரும் பாதை கூட நினைவில் இல்லை. 108 00:10:08,150 --> 00:10:12,529 அங்கே தங்குபவர்கள் கொடுக்கும் காசுக்கு நல்ல வசதிகளை பெறுகிறார்கள். 109 00:10:13,071 --> 00:10:15,866 போன வாரம் தானே இரண்டு மூட்டை பார்லியை உன் மகளிடம் கொடுத்து அனுப்பினேன்? 110 00:10:15,949 --> 00:10:17,701 அதற்குள் தீர்ந்துவிட்டதா? 111 00:10:17,784 --> 00:10:19,203 கூடுதலாக எவ்வளவு வேண்டும்? 112 00:10:20,829 --> 00:10:22,414 வெள்ளை அரிசி வாங்க வந்தேன். 113 00:10:24,333 --> 00:10:25,792 நான் நிறைய கேட்கவில்லை. 114 00:10:27,753 --> 00:10:28,795 இரண்டும் கிண்ணங்கள் போதும். 115 00:10:30,380 --> 00:10:32,049 தேவைப்பட்டால் மேலும் பணம் கொடுக்கிறேன். 116 00:10:32,132 --> 00:10:36,011 நான் எல்லோருக்கும் அந்த அரிசியை விற்க முடியாது. 117 00:10:36,094 --> 00:10:39,181 ஒரு அதிகாரி இங்கே வந்து 118 00:10:39,264 --> 00:10:42,142 ஜப்பானிய வாடிக்கையாளர்களுக்கு போதுமான அளவு இல்லை என்பதை பார்த்தால், 119 00:10:42,226 --> 00:10:44,269 நான் சிக்கலில் மாட்டிக்கொள்வேன். 120 00:10:44,853 --> 00:10:46,522 எனது மற்ற தானியங்கள் உயர் தரமானவை. 121 00:10:50,108 --> 00:10:52,194 என் மகளுக்கு இன்று திருமணம் நடந்தது. 122 00:10:52,277 --> 00:10:53,278 சுன்ஜாவிற்கா? 123 00:10:53,362 --> 00:10:54,988 நிஜமாகவா? 124 00:10:55,614 --> 00:10:57,449 நீ ஏன் சொல்லவில்லை? 125 00:10:58,992 --> 00:11:01,912 அவளுக்கு திருமணமானது உனக்கு பெரும் நிம்மதி கொடுத்திருக்கும். 126 00:11:01,995 --> 00:11:03,747 மாப்பிள்ளை நல்ல மனிதர். 127 00:11:04,831 --> 00:11:06,250 நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம். 128 00:11:06,917 --> 00:11:08,043 அப்படியென்றால், 129 00:11:08,126 --> 00:11:10,587 இன்று காலைதான் சிறுதானியம் வந்தது. 130 00:11:10,671 --> 00:11:14,258 நான் அதை உனக்கு பார்லியின் விலைக்கே தருகிறேன். 131 00:11:18,971 --> 00:11:19,972 விரைவில், 132 00:11:21,056 --> 00:11:23,350 அவள் தன் கணவரோடு ஜப்பான் போய்விடுவாள். 133 00:11:24,726 --> 00:11:28,105 வரதட்சணையாக கொடுக்க என்னிடம் வேறு எதுவும் இல்லை. 134 00:11:29,523 --> 00:11:32,442 ஆனால் அவள் வீட்டிலிருந்து கிளம்பும் முன்பு தன் தாய்நாட்டின் சுவையை… 135 00:11:35,195 --> 00:11:37,155 அதை அவளுக்கு கொடுக்க விரும்புகிறேன். 136 00:12:08,645 --> 00:12:10,063 மூன்று கிண்ணங்கள். 137 00:12:11,106 --> 00:12:12,482 நன்றி. 138 00:12:12,566 --> 00:12:14,401 ஒருவேளை இதன் சுவை 139 00:12:15,485 --> 00:12:18,989 உன் வருத்தத்தையும் கொஞ்சம் குறைக்கலாம். 140 00:14:59,107 --> 00:15:00,400 பிரார்த்தனை செய்வோமா? 141 00:15:09,409 --> 00:15:10,744 பரமபிதாவே, 142 00:15:12,037 --> 00:15:14,039 இந்த உணவை ஆசிர்வதியுங்கள், 143 00:15:16,333 --> 00:15:17,835 அதோடு இந்த வீட்டையும் இதில் வாழும் 144 00:15:18,710 --> 00:15:20,879 நல்லவர்களையும் ஆசிர்வதியுங்கள். 145 00:15:25,759 --> 00:15:27,678 அவர்களுக்குத் தேவையான நேரங்களில், 146 00:15:28,971 --> 00:15:30,264 அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள். 147 00:15:32,599 --> 00:15:36,228 யேசுநாதர் மூலமாக. ஆமென். 148 00:15:54,788 --> 00:15:57,457 உன் அம்மாவின் சமையல் இன்றி நாம் எப்படி வாழப்போகிறோம்? 149 00:16:01,545 --> 00:16:04,923 ஒருவேளை இது உன் ஆரோக்கியத்துக்கு காரணமாக இருக்கலாம், சுன்ஜா. 150 00:16:08,260 --> 00:16:10,387 உங்கள் அண்ணி நன்றாக சமைப்பாரா? 151 00:16:14,141 --> 00:16:17,978 கியுங்கீ சமைப்பதை நினைக்கவே வினோதமாக இருக்கிறது. 152 00:16:18,562 --> 00:16:20,355 அவரது குடும்பம் ஒரு காலத்தில் செல்வ செழிப்போடு இருந்தது. 153 00:17:14,701 --> 00:17:16,578 அமெரிக்காவில், 154 00:17:16,662 --> 00:17:20,165 மக்கள் தங்கள் திருமணத்திற்கு பெரியவர்களிடம் அனுமதி கேட்பதில்லை என திருமதி. ஜாங் சொன்னார். 155 00:17:20,958 --> 00:17:22,459 உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? 156 00:17:23,794 --> 00:17:24,920 எங்களை பொறுத்தவரை, 157 00:17:25,002 --> 00:17:28,549 நாங்கள் ஆதரவற்றவர்கள் என்பதால் எங்களை திருமணம் செய்பவர்கள் சுன்ஜாவின் அம்மாவிடம் 158 00:17:29,132 --> 00:17:30,342 கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். 159 00:17:32,010 --> 00:17:35,138 என் திருமண நாளன்று அரிசி சாப்பாடு கிடைக்கும் என நம்புகிறேன். 160 00:17:36,640 --> 00:17:37,850 அதை யாருடன் சாப்பிடுவாய்? 161 00:17:37,933 --> 00:17:39,643 கண்டிப்பாக உன்னுடன் தான். 162 00:17:39,726 --> 00:17:41,353 போக்கியும் உடன் இருப்பாள். 163 00:17:41,436 --> 00:17:43,897 அதோடு உன் அம்மா, சங் சகோதரர்கள், 164 00:17:45,023 --> 00:17:46,275 என்னைப் பிடிக்காதவனும் கூட. 165 00:17:47,818 --> 00:17:49,570 அவர் எல்லோரிடமும் அமைதியாக இருக்கிறார். 166 00:17:49,653 --> 00:17:51,613 அவர் மிகவும் வயது முதிர்ந்தவர். 167 00:17:52,322 --> 00:17:56,410 நான் அவரது புகைக்கும் குழாயை கீழே போட்டதால் நேற்று என்னை மிகவும் கோபமாக பார்த்தார். 168 00:17:56,493 --> 00:17:57,911 அதற்கு எதுவும் ஆகவில்லை, 169 00:17:58,412 --> 00:18:00,289 இருந்தாலும் நான் அழுதுவிட்டேன். 170 00:18:02,416 --> 00:18:05,460 ஆனால் அவரை விட்டுவிட்டு இரு சகோதாரர்களையும் அழைப்பது நல்லதாக தெரியவில்லை. 171 00:18:07,004 --> 00:18:08,630 அதோடு மருந்தாளர் சூவும். 172 00:18:09,381 --> 00:18:10,924 அவர் நல்லவராக தெரிகிறார். 173 00:18:11,008 --> 00:18:12,509 இந்த அபத்தமான பேச்சை நிறுத்துகிறாயா! 174 00:18:13,635 --> 00:18:15,679 உனக்கு எப்போது புத்தி வரப்போகிறது? 175 00:18:17,347 --> 00:18:19,933 உனக்கும் எனக்கும் குடும்பமே இல்லை. 176 00:18:21,894 --> 00:18:23,353 பெயர் கிடையாது, வரதட்சணை கிடையாது. 177 00:18:25,147 --> 00:18:28,984 பணமில்லாத ஒருவனை திருமணம் செய்வதுதான் நமக்கு ஒரே வழி. 178 00:18:31,862 --> 00:18:33,071 பிறகு என்ன நடக்கும் தெரியுமா? 179 00:18:34,615 --> 00:18:36,283 நம்மால் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது. 180 00:18:43,790 --> 00:18:44,958 நமக்கு குழந்தை பிறந்தால்… 181 00:18:47,544 --> 00:18:50,714 நாம் அவர்களையும் இந்த மோசமான வறுமையின் பிடியில் தள்ளிவிடுவோம். 182 00:18:52,758 --> 00:18:54,593 எனவே என்ன ஆகிவிடப் போகிறது? 183 00:18:55,594 --> 00:18:57,679 திருமணத்தின் எந்த நன்மைகளும் 184 00:18:58,722 --> 00:19:01,058 நமக்கு கொடுத்துவைக்கவில்லை, அதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? 185 00:19:05,479 --> 00:19:06,939 நமக்கு அதுதான் கதி. 186 00:19:11,276 --> 00:19:15,280 எப்போதுமே நமக்கு அது அப்படித்தான். 187 00:19:52,484 --> 00:19:54,319 குறைவதற்கான எந்த அறிகுறியுமின்றி, 188 00:19:54,403 --> 00:19:56,321 நிக்கி தொடர்ந்து உயர்கிறது. 189 00:19:56,405 --> 00:19:58,740 நேற்றைய சந்தையின் முடிவில், 190 00:19:58,824 --> 00:20:02,035 குறியீடு கிட்டத்தட்ட 33,000 ஐ நெருங்கியது. 191 00:20:03,370 --> 00:20:06,373 இந்த ஆண்டின் இறுதிக்குள் பங்குச்சந்தை குறியீட்டு எண் 45,000 ஆக 192 00:20:06,456 --> 00:20:10,377 உயரும் என்று சில செல்வாக்கு மிக்க ஆய்வாளர்கள் கணித்துள்ளனர், 193 00:20:10,878 --> 00:20:12,296 இது ஜப்பான் அமெரிக்காவை முந்தி 194 00:20:12,379 --> 00:20:16,383 உலகின் பணக்கார நாடாக இருக்கும் 195 00:20:16,466 --> 00:20:18,594 என்ற ஊகத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. 196 00:22:26,972 --> 00:22:28,307 சீக்கிரம் வந்துவிட்டாய். 197 00:22:29,057 --> 00:22:30,184 ஆம். 198 00:22:30,267 --> 00:22:32,978 இந்த ஒப்பந்தத்தை முடிப்பதில் நான் மட்டும் 199 00:22:33,562 --> 00:22:35,063 ஆர்வமாக இல்லை என்று நினைக்கிறேன். 200 00:22:35,814 --> 00:22:36,815 நாம் என்று நினைக்கிறேன். 201 00:22:40,068 --> 00:22:41,403 என்னை உனக்குப் பிடிக்காது. 202 00:22:42,613 --> 00:22:43,739 அது ஒரு பிரச்சினையா? 203 00:22:44,656 --> 00:22:46,533 நீ போகிறாய், இல்லையா? 204 00:22:50,037 --> 00:22:53,123 டாம் முதலில் வந்தபோது கூட அவரைப் பற்றி நீ அப்படித்தான் நினைத்தாயா? 205 00:22:53,207 --> 00:22:54,875 அவர் இந்த இடத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றா? 206 00:22:55,751 --> 00:22:58,504 அல்லது பிரச்சினை இப்போதுதான் ஆரம்பித்ததா? 207 00:23:01,089 --> 00:23:02,257 சரி, 208 00:23:02,341 --> 00:23:04,760 நீங்கள் இருவரும் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. 209 00:23:05,302 --> 00:23:09,765 நீயும் இங்குள்ள எல்லோரும் என் மீது பொறாமைப்பட்டாலும் எனக்கு கவலையில்லை. 210 00:23:10,557 --> 00:23:14,686 முக்கிய விஷயம் என்னவென்றால், அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதுதான். 211 00:23:18,023 --> 00:23:20,067 திரு. பேக், ஒப்பந்தத்தின் எத்தனை நகல்கள் நமக்கு தேவைப்படும்? 212 00:23:20,150 --> 00:23:21,652 அதை மெமோவில் எழுதியிருக்கிறேன். 213 00:23:23,737 --> 00:23:25,280 இதைப் படியுங்கள். 214 00:23:39,253 --> 00:23:41,672 அவர் ஷிஃப்லிஸில் எப்படி வேலைக்குச் சேர்ந்தார் தெரியுமா? 215 00:23:42,673 --> 00:23:45,551 தெரியாது. அது ஏன் முக்கியம்? 216 00:23:47,261 --> 00:23:48,762 ஷிஃப்லிஸிற்கு முன்பு, 217 00:23:49,638 --> 00:23:52,224 அரிமோடோ, நாட்டின் முன்னணி வங்கியில் பணியாற்றினார். 218 00:23:53,350 --> 00:23:56,311 ஆனால் பல வருடங்களாக, அரிமோடோ எந்த முன்னேற்றமும் அடையாமல் 219 00:23:56,395 --> 00:23:59,606 தன் சக ஊழியர்கள் முன்னேறுவதை கண்டார். 220 00:24:00,858 --> 00:24:03,777 தனது குழுவிற்கு பங்களிக்கவில்லை என்று மேலதிகாரிகள் அவரை எச்சரித்தனர். 221 00:24:03,861 --> 00:24:06,321 நன்றாக செயல்பட கடுமையான பயிற்சிகள் மூலம் அவரை அவமானப்படுத்த முயன்றனர். 222 00:24:06,822 --> 00:24:08,907 ஆனால், மேலதிகாரிகளின் எதிர்பார்ப்பை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை. 223 00:24:09,491 --> 00:24:11,994 பிறகு வேலையிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். 224 00:24:16,123 --> 00:24:17,291 உன் அப்பா, திரு. பேக், 225 00:24:18,417 --> 00:24:19,918 பச்சிங்கோ தொழிலில் இருக்கிறார், இல்லையா? 226 00:24:22,921 --> 00:24:23,922 அதனால்? 227 00:24:25,966 --> 00:24:29,386 நீ ஜப்பானிய நிறுவனத்தின் நிழலில் வளரவில்லை. 228 00:24:30,596 --> 00:24:32,472 ஒரு சம்பளக்காரருக்கு, 229 00:24:32,556 --> 00:24:35,684 தன் நிறுவனம் தான் குடும்பம், 230 00:24:35,767 --> 00:24:38,187 சில நேரங்களில் அது தங்கள் உயிரை விட மேலானது என்பது உனக்குப் புரியாது. 231 00:24:40,522 --> 00:24:41,982 நான் சிறுமியாக இருந்தபோது, 232 00:24:42,065 --> 00:24:44,902 தினமும் என் அப்பாவுடன் இருந்த நிமிடங்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்வேன். 233 00:24:46,570 --> 00:24:49,364 அவை ஒரு மணிநேரத்திற்கு மேலாக இருந்தால், 234 00:24:49,448 --> 00:24:51,450 அது சராசரி வார கணக்கை விட சிறந்தது என்று கருதுவேன். 235 00:24:53,160 --> 00:24:54,494 எனவே உனக்கு இப்போது புரிந்திருக்கும். 236 00:24:56,121 --> 00:24:58,790 அரிமோடோவை வேலையிலிருந்து மட்டும் நீக்கவில்லை… 237 00:25:00,792 --> 00:25:02,377 அவர் தன் குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டார். 238 00:25:04,755 --> 00:25:06,548 அதன் பிறகு, 239 00:25:06,632 --> 00:25:09,843 வேறு எந்த பெரிய நிறுவனமும் அவருக்கு வேலை தரவில்லை. 240 00:25:10,511 --> 00:25:12,763 அப்படித்தான் அவர் எங்களிடம் வந்து சேர்ந்தார். 241 00:25:15,474 --> 00:25:16,767 அதில் எந்த அர்த்தமும் இல்லை. 242 00:25:17,684 --> 00:25:20,229 ஷிஃப்லிஸ் ஒரு பெரிய நிறுவனம். 243 00:25:20,312 --> 00:25:21,813 அமெரிக்காவில், இருக்கலாம். 244 00:25:22,314 --> 00:25:26,276 ஆனால் இங்கே, இது அரிமோடோஸ் போன்றவர்கள் செல்லும் சுடுகாடு. 245 00:25:29,279 --> 00:25:31,114 பிறகு ஏன் நீ இங்கிருக்கிறாய்? 246 00:25:32,366 --> 00:25:34,993 நீ நல்ல பள்ளியில் படித்திருக்கிறாய், நல்ல குடும்பத்திலிருந்து வந்திருக்கிறாய். 247 00:25:37,037 --> 00:25:39,331 ஆம், அதனால் தான், நாட்டின் 248 00:25:39,414 --> 00:25:42,751 முக்கியமான வங்கிகள் என்னைத் தேடின. 249 00:25:45,128 --> 00:25:48,924 ஆனால் என் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, நான் ஷிஃப்லிஸை தேர்ந்தெடுத்தேன். 250 00:25:51,677 --> 00:25:53,136 ஒரு பெண்ணாக, 251 00:25:53,220 --> 00:25:57,558 குறைவாக சாதிக்காதவர்கள் மத்தியில் இருப்பதற்கு இது உதவுகிறது. 252 00:26:00,519 --> 00:26:01,979 இங்கே, என்னால் வெற்றி பெற முடியும். 253 00:26:08,110 --> 00:26:10,654 நீயின்றி உன் அம்மா என்ன செய்வார்? 254 00:26:13,031 --> 00:26:14,700 ஓ, அட. 255 00:26:16,743 --> 00:26:18,745 இன்று வேண்டாம். இது உனக்கான என் பரிசு. 256 00:26:19,329 --> 00:26:20,539 ஆனால்… 257 00:26:20,622 --> 00:26:21,707 இப்போது வீட்டிற்குப் போ. 258 00:26:21,790 --> 00:26:22,791 சீக்கிரம்! 259 00:27:18,972 --> 00:27:20,224 என்ன நடந்தது? 260 00:27:33,320 --> 00:27:34,696 நீ அவரோடு போக வேண்டும். 261 00:27:38,158 --> 00:27:39,243 போ. 262 00:27:47,042 --> 00:27:48,293 எங்களை தனியாக விடு. 263 00:28:02,474 --> 00:28:03,809 என்ன செய்கிறீர்கள்? 264 00:28:05,477 --> 00:28:07,896 நான் உங்களுடன் தனியாக இருக்க முடியாது. 265 00:28:22,703 --> 00:28:24,079 இப்போது பாதுகாப்பாக உணர்கிறாயா? 266 00:28:29,001 --> 00:28:30,919 நீ நிஜமாக செய்துவிட்டாய், இல்லையா? 267 00:28:32,421 --> 00:28:34,256 அந்த முட்டாளை திருமணம் செய்துகொண்டாய். 268 00:28:36,758 --> 00:28:40,012 இந்த உலகம் எவ்வாறு நிஜமாக இயங்குகிறது என்பதை அறியாத வெறும் மாயை. 269 00:28:43,223 --> 00:28:46,143 ஆம், நாங்கள் சந்தித்தோம். 270 00:28:50,439 --> 00:28:52,107 என்னை ஏன் இங்கே அழைத்து வந்தீர்கள்? 271 00:28:52,191 --> 00:28:53,942 உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் என சொல்வதற்காக. 272 00:28:54,443 --> 00:28:56,945 அவன் நல்லவன் என்பதால் உன்னை திருமணம் செய்தான் என்று நினைக்கிறாயா? 273 00:29:01,491 --> 00:29:02,659 நான் பார்த்தது அதுவல்ல. 274 00:29:04,703 --> 00:29:09,499 உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் கவனித்துக்கொள்ள முடியாத ஒரு நோயாளியைக் கண்டேன். 275 00:29:09,583 --> 00:29:11,168 அவரைப் பற்றி நீங்கள் எப்படி இப்படி பேசலாம்? 276 00:29:11,668 --> 00:29:13,128 அவர் இப்போது என் கணவர். 277 00:29:14,713 --> 00:29:16,507 உங்களால் முடியாததை அவர் செய்திருக்கிறார். 278 00:29:17,132 --> 00:29:19,593 நான் உனக்கு இன்னும் நிறைய கொடுப்பதாக சொன்னேன். 279 00:29:20,928 --> 00:29:23,430 நீங்கள் கொடுத்தது அவமானம் தான். வேறெதுவும் இல்லை. 280 00:29:26,141 --> 00:29:27,684 அங்கே நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள்… 281 00:29:29,186 --> 00:29:31,897 போன்ற கிசுகிசுக்களைக் கேட்டேன். 282 00:29:34,149 --> 00:29:35,984 அது என்னை பயமுறுத்தியது. 283 00:29:40,113 --> 00:29:41,198 கிசுகிசுக்கள்… 284 00:29:43,283 --> 00:29:45,536 அந்த கிசுகிசுக்கள், 285 00:29:46,537 --> 00:29:48,539 அங்கு நீ வாழப்போகும் வாழ்க்கையைப் பற்றியும் சொன்னதா? 286 00:29:49,790 --> 00:29:51,875 அங்கே எல்லாம் இருக்கும் என்றீர்கள். 287 00:29:51,959 --> 00:29:53,794 நிச்சயம், உன்னிடம் பணம் இருந்தால். 288 00:29:53,877 --> 00:29:54,878 இல்லை என்றால்… 289 00:29:57,005 --> 00:30:01,552 அங்கே நமக்கு எப்படி இருக்கும் என பார்த்திருக்கிறேன், வாழ்ந்திருக்கிறேன். 290 00:30:02,302 --> 00:30:06,515 நான் சொல்கிறேன், நீ அங்கே துன்பப்படுவாய். நம் மகனும்தான். 291 00:30:16,066 --> 00:30:17,109 சுன்ஜா… 292 00:30:24,783 --> 00:30:26,535 நிஜமாகவே என்னை மறக்க முடியும் என நினைக்கிறாயா? 293 00:30:28,203 --> 00:30:29,288 உங்களால் முடியுமா? 294 00:30:33,584 --> 00:30:35,419 உன் கண்ணியமான திருமண உறவிலும் கூட… 295 00:30:37,713 --> 00:30:40,132 உன் எண்ணங்கள் என்னிடம் திரும்பும். 296 00:30:49,850 --> 00:30:50,851 போகாதே. 297 00:30:57,566 --> 00:30:59,026 நீ சுமப்பது என் இரத்தம். 298 00:31:04,031 --> 00:31:05,365 இல்லை. 299 00:31:06,241 --> 00:31:07,826 இது என் குழந்தை. 300 00:31:10,579 --> 00:31:12,748 -என்னுடையது. -முட்டாள் பெண்ணே! 301 00:31:13,540 --> 00:31:16,043 உன் கணவனைப் போலவே நீயும் ஒரு முட்டாள். 302 00:31:20,005 --> 00:31:21,006 நல்லது. 303 00:31:23,008 --> 00:31:24,176 ஒசாகாவுக்கு போ. 304 00:31:27,721 --> 00:31:30,224 அங்கே, என்னைக் கூப்பிட்டு, காப்பாற்றும்படி கெஞ்சுவாய். 305 00:31:35,521 --> 00:31:37,356 ஆனால் உன் பெயர் கூட எனக்கு நினைவிருக்காது. 306 00:31:58,544 --> 00:32:00,712 நீ இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம்? 307 00:32:00,796 --> 00:32:03,340 கூடுதல் உணவு கேட்டால் யார் என்னை முறைப்பார்கள்? 308 00:32:03,423 --> 00:32:07,010 கவலைப்படாதீர்கள். அதற்கு இன்னும் டோங்கியும் போக்கியும் இருப்பார்கள். 309 00:32:07,761 --> 00:32:10,389 அவர்கள் இருவருக்கும் என்னை கேலி செய்வதுதான் பிடிக்கும். 310 00:32:11,098 --> 00:32:12,599 நான்தான் அவர்களின் மலிவான பொழுதுபோக்கு. 311 00:32:16,353 --> 00:32:19,022 பிரிவுக்கான என்னுடைய மற்றும் என் சகோதரர்களின் பரிசு. 312 00:32:21,149 --> 00:32:22,150 தயவுசெய்து வாங்கிக்கொள். 313 00:32:24,361 --> 00:32:25,654 நன்றி. 314 00:32:40,419 --> 00:32:42,379 என்னால் முடியவில்லை. 315 00:32:45,299 --> 00:32:47,134 அழுகையை அடக்க முடியும் என நினைத்தேன், 316 00:32:48,010 --> 00:32:49,344 ஆனால் முடியவில்லை. 317 00:32:50,929 --> 00:32:53,682 நீ போவதை என்னால் தாங்க முடியவில்லை. 318 00:32:55,767 --> 00:32:57,186 நீ தைரியமாக இரு. 319 00:33:04,318 --> 00:33:05,444 ஆனாலும்… 320 00:33:07,070 --> 00:33:08,488 நீ எனக்காக ஒன்றை செய்ய வேண்டும். 321 00:33:10,532 --> 00:33:11,742 சத்தியம் செய்கிறாயா? 322 00:33:20,083 --> 00:33:21,502 என் அம்மா… 323 00:33:26,507 --> 00:33:28,008 அவரை பார்த்துக் கொள்வாயா? 324 00:33:45,400 --> 00:33:46,401 அழாதே. 325 00:33:54,493 --> 00:33:56,620 இவற்றை செய்தவர், 326 00:33:57,913 --> 00:34:02,084 சொல்கிறார் வாத்துகள் வாழ்நாள் முழுதும் துணையோடு இருக்குமாம். 327 00:34:03,669 --> 00:34:05,212 போக்கி, இது அதிகம். 328 00:34:05,796 --> 00:34:07,464 இதைத் திருப்பிக் கொடுத்துவிடு. 329 00:34:11,927 --> 00:34:14,221 அங்கே ஒரு நல்ல வாழ்க்கையை வாழுங்கள், 330 00:34:14,304 --> 00:34:15,472 நான் சொல்வது கேட்கிறதா? 331 00:34:19,893 --> 00:34:21,937 அது சுலபமாக இருக்காது. 332 00:34:25,815 --> 00:34:27,693 ஆனால் இது உனக்கு ஒரு புதிய தொடக்கம். 333 00:34:29,277 --> 00:34:31,280 அதை வீணாக்கிவிடாதே. 334 00:34:37,286 --> 00:34:40,205 போதும். அவர்கள் போக வேண்டாமா. 335 00:34:43,458 --> 00:34:45,793 அம்மா, நான் எடுத்துக்கொள்கிறேன். 336 00:34:45,878 --> 00:34:47,880 இவற்றை விடு. நீ முன்னால் செல். 337 00:34:48,422 --> 00:34:50,424 -தயவுசெய்து… -போதும்! 338 00:35:34,551 --> 00:35:35,552 அம்மா. 339 00:35:39,014 --> 00:35:40,599 நீங்கள் நிச்சயமாக திரும்பிச் செல்ல வேண்டுமா? 340 00:35:43,644 --> 00:35:46,355 நீ என்ன கேட்கிறாய்? ஏற்கனவே டிக்கெட் எடுத்துவிட்டோம். 341 00:35:46,438 --> 00:35:47,439 அட. 342 00:35:59,409 --> 00:36:02,120 உங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். இப்படி, தயவுசெய்து வாருங்கள். 343 00:36:18,095 --> 00:36:19,429 உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 344 00:36:21,014 --> 00:36:22,850 டாம் ஆண்ட்ரூஸ், ஷிஃப்லி பேங்க். 345 00:36:26,645 --> 00:36:28,605 நான் வேய் எண்டர்பிரைசஸின் அபே. 346 00:36:31,775 --> 00:36:34,570 பாட்டி, உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 347 00:36:37,406 --> 00:36:39,658 போதும்! வந்த வேலையைப் பார்ப்போம். 348 00:36:49,293 --> 00:36:51,378 நீங்கள் இங்கே காத்திருப்பது வசதியாக இருக்கும். 349 00:36:56,800 --> 00:36:58,886 எங்கள் பயண ஆவணங்களுக்கு அங்கீகாரம் பெற நான் போக வேண்டும். 350 00:37:15,652 --> 00:37:17,154 அவர் ஒரு பிரபலமான பாடகி. 351 00:37:18,071 --> 00:37:19,531 மிகவும் அழகாக இருக்கிறாள். 352 00:37:23,702 --> 00:37:24,828 பொறுங்கள்! 353 00:37:31,543 --> 00:37:32,961 நன்றி. 354 00:37:33,045 --> 00:37:34,713 நான் விரும்பும் ஒருவர் இதை கொடுத்தார். 355 00:37:38,258 --> 00:37:39,510 குழந்தை எப்போது பிறக்கும்? 356 00:37:42,346 --> 00:37:43,680 இரண்டு மாதங்களில் எதிர்பார்க்கிறோம். 357 00:37:44,848 --> 00:37:46,975 ஆனால் நீ வீட்டை விட்டு செல்கிறாயா? 358 00:37:49,561 --> 00:37:52,022 எனக்கு இப்போதுதான் திருமணம் ஆனது. 359 00:37:56,193 --> 00:37:57,361 அப்படியா. 360 00:37:59,029 --> 00:38:04,243 அப்படியென்றால் இன்றிரவு நமக்காகப் பாடுவேன். 361 00:38:06,787 --> 00:38:07,871 நல்வாழ்த்துக்கள். 362 00:38:17,714 --> 00:38:20,217 இன்று எங்கள் சிறப்பு விருந்தினர்களாக உங்களை வரவேற்கிறோம். 363 00:38:21,051 --> 00:38:27,266 அமெரிக்க மண்ணில் ஜப்பானியர்களை அமெரிக்கர்கள் அன்புடன் வரவேற்றது போல, 364 00:38:27,933 --> 00:38:29,518 நாங்கள் இப்போது அதே தாராள மனப்பான்மையை இங்கே உணர்கிறோம். 365 00:38:30,102 --> 00:38:31,812 நான் உறுதியாக சொல்கிறேன், 366 00:38:32,938 --> 00:38:35,315 ஹோட்டல் திறக்கப்படும் போது, 367 00:38:36,191 --> 00:38:38,944 கோல்டன் ஹோட்டல்ஸ் நமக்காக வார இறுதிக்கான… 368 00:38:40,028 --> 00:38:42,531 சொகுசு அறைகளை ஒதுக்கி வைக்க முடியும். 369 00:38:45,450 --> 00:38:47,828 இப்போது, ஆரம்பிக்கலாம். 370 00:38:48,328 --> 00:38:52,291 ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு உங்கள் ஒப்புதலைப் பெற்றுள்ளோம்… மன்னிக்கவும். 371 00:38:54,459 --> 00:38:57,337 …எங்களிடம் கையொப்பத்திற்காக ஒப்பந்தத்தின் பத்து நகல்கள் உள்ளன. 372 00:38:58,964 --> 00:38:59,965 மன்னிக்கவும். 373 00:39:00,674 --> 00:39:06,221 குறிப்பிட்டு கட்டப்பட்டுள்ள இடத்தில் கையொப்பமிடுங்கள். 374 00:39:06,305 --> 00:39:07,306 மன்னிக்கவும். 375 00:39:21,862 --> 00:39:23,488 இது நாங்கள் ஏற்கனவே பார்த்த அதே ஒப்பந்தம்தான். 376 00:39:26,366 --> 00:39:27,826 நீ அதைப் பார்க்கவே இல்லை. 377 00:39:28,493 --> 00:39:30,204 எப்படி உறுதியாக சொல்கிறாய்? 378 00:39:37,169 --> 00:39:40,547 நீ தவறு செய்யக் கூடாது. 379 00:39:41,048 --> 00:39:42,549 அங்கே. 380 00:39:44,968 --> 00:39:46,345 ஒரு மனைவியாக, 381 00:39:46,428 --> 00:39:47,846 ஒரு அம்மாவாக, 382 00:39:47,930 --> 00:39:49,765 நீ முற்றிலும் குறையற்றவளாக இருக்க வேண்டும். 383 00:39:49,848 --> 00:39:50,849 நான் சொல்வது கேட்கிறதா? 384 00:39:51,808 --> 00:39:52,809 எனக்குப் புரிகிறது. 385 00:39:54,436 --> 00:39:57,564 கணவரின் உறவினர்களிடம் நன்றாக நடந்துகொள்ள வேண்டும். புரிந்ததா? 386 00:40:02,152 --> 00:40:04,988 அவர்கள் உன்னிடம் அநியாயமாக நடக்கலாம், கொடுமைபடுத்தலாம். 387 00:40:06,031 --> 00:40:07,199 பொறுமையாய் இரு, 388 00:40:08,283 --> 00:40:09,868 நன்றியுடன் இரு, புரிகிறதா? 389 00:40:14,039 --> 00:40:16,416 கூடுதலாக ஒருவருக்கு உணவளிப்பது எளிதல்ல. 390 00:40:18,168 --> 00:40:19,169 அதோடு சுன்ஜா… 391 00:40:24,132 --> 00:40:26,093 நீங்கள் கர்ப்பமாக இருந்தாலும்… 392 00:40:28,804 --> 00:40:30,138 அது விரும்பத்தகாததாக இருக்கலாம்… 393 00:40:33,600 --> 00:40:35,978 உன் கணவரின் உடல் தேவைகளை நீ கவனிக்க வேண்டும். 394 00:40:37,145 --> 00:40:38,856 பாஸ்டர் முதலில் ஒரு மனிதன். 395 00:40:41,608 --> 00:40:43,277 கண்ணியமான மனிதர்கள் என அறியப்பட்டவர்கள் கூட 396 00:40:44,736 --> 00:40:46,446 மற்ற பெண்களுடன் இன்பம் பெறுவார்கள். 397 00:40:48,949 --> 00:40:51,326 நீ எப்படி கர்ப்பம் ஆனாய் என்றே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 398 00:40:51,910 --> 00:40:53,787 இந்த விஷயங்களை நீ இப்போது தெரிந்து கொள்ள வேண்டும். 399 00:41:05,549 --> 00:41:06,884 நீண்ட காலத்துக்கு முன்பு, 400 00:41:06,967 --> 00:41:08,302 உன் அப்பாவின் அம்மா எனக்கு இவற்றைக் கொடுத்தார்… 401 00:41:12,639 --> 00:41:16,560 நள்ளிரவில் நான் ஓடிவிடமாட்டேன் என்று அவர் உறுதியாக நம்பிய பிறகு. 402 00:41:18,979 --> 00:41:20,272 இவற்றை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வை. 403 00:41:20,856 --> 00:41:23,066 உன் கணவரிடம் கூட சொல்லாதே, கேட்டதா? 404 00:41:23,692 --> 00:41:26,820 பெண்களுக்கு பணத்தை மறைத்து வைத்திருப்பது முக்கியம். 405 00:41:28,030 --> 00:41:32,659 ஏதாவது நடக்கலாம், ஆண்களைப் போல நாம் தேர்ந்தெடுக்க முடியாது. 406 00:41:35,037 --> 00:41:37,497 இல்லை, நீங்களே அதை வைத்துக்கொள்ளுங்கள். 407 00:41:38,790 --> 00:41:39,791 என்னிடம்… 408 00:41:42,294 --> 00:41:43,295 இது இருக்கிறது. 409 00:41:44,505 --> 00:41:46,089 என்ன இது? 410 00:41:50,761 --> 00:41:51,929 இது குழந்தையின் அப்பா கொடுத்ததா? 411 00:41:52,012 --> 00:41:53,555 இது அவனிடமிருந்து வந்ததா? 412 00:41:55,307 --> 00:41:56,475 என்ன மாதிரியான… 413 00:42:02,022 --> 00:42:04,024 அதற்கு இப்போது என்ன? 414 00:42:06,318 --> 00:42:07,486 சுன்ஜா. 415 00:42:08,362 --> 00:42:11,365 இப்போது நீ அவனை மறந்துவிட வேண்டும். 416 00:42:11,448 --> 00:42:12,908 புரிந்ததா? 417 00:42:12,991 --> 00:42:14,576 எனக்குத் தெரியும். 418 00:42:24,711 --> 00:42:25,921 இதோ. 419 00:42:26,588 --> 00:42:28,465 உன் அப்பா இவை உன்னிடம் இருக்க விரும்புவார். 420 00:42:32,469 --> 00:42:35,639 அவர் உனக்காக நிறைய விரும்பினார். 421 00:42:38,642 --> 00:42:42,187 நான் நீ உன் சொந்த ஊரிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினேன்… 422 00:42:45,232 --> 00:42:47,734 ஆனால் உன் அப்பா நீ உலகம் முழுக்க செல்வதை விரும்பினார். 423 00:42:59,955 --> 00:43:02,165 பல கடினமான நாட்கள் வரவிருக்கிறது. 424 00:43:05,294 --> 00:43:07,337 மீண்டும் எப்பொழுது சந்திப்போம் என்று தெரியவில்லை. 425 00:43:09,798 --> 00:43:11,633 அதற்கு நீண்ட காலம் ஆகலாம். 426 00:43:17,139 --> 00:43:18,140 அழாதே. 427 00:43:18,849 --> 00:43:21,059 உன் கண்ணீரை இங்கேயே கொட்டி விடு. 428 00:43:23,187 --> 00:43:25,272 அங்கு நீ கண்ணீர் சிந்துவதை நான் விரும்பவில்லை. 429 00:43:28,650 --> 00:43:31,153 -என் மகளே. -இப்போது கப்பலில் ஏறுகிறார்கள். 430 00:43:32,779 --> 00:43:35,532 அம்மா! 431 00:43:38,035 --> 00:43:40,204 டோகுஜு மரு 432 00:44:11,610 --> 00:44:12,611 உடல்நிலை சரி இல்லாதது போல உணர்கிறேன். 433 00:44:28,752 --> 00:44:30,337 அம்மா, 434 00:44:31,129 --> 00:44:33,340 இந்த முக்கிய நபர்கள் எல்லோரையும் காக்க வைக்கிறீர்கள். 435 00:44:34,925 --> 00:44:36,635 எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பாருங்கள். 436 00:44:38,220 --> 00:44:40,931 அவர்களுக்கு மற்ற வேலைகளும் இருக்கும். 437 00:45:02,619 --> 00:45:04,329 பாட்டி, நீங்கள் வென்றீர்கள். 438 00:45:06,373 --> 00:45:09,334 இன்று உங்கள் வருங்கால சந்ததியினருக்கு பெரும் செல்வத்தைப் பெறுவீர்கள். 439 00:45:11,044 --> 00:45:14,256 இனி ஒருபோதும் அவர்கள் பணத்திற்காக கவலைப்பட வேண்டியதில்லை. 440 00:45:14,923 --> 00:45:16,758 அது எனக்கு சாபம் போல தெரிகிறது. 441 00:45:17,259 --> 00:45:20,512 இன்று என் பாட்டி என்ன செய்கிறார் தெரியுமா? 442 00:45:20,596 --> 00:45:23,182 அவர் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு முதல் முறையாக கொரியாவுக்கு பறக்கிறார். 443 00:45:25,267 --> 00:45:27,978 ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அவர் ஒன்றுமில்லாமல் இங்கு வந்தார். 444 00:45:28,812 --> 00:45:30,939 ஆனால் இன்று அவர் முதல் வகுப்பில் பயணிக்கிறார். 445 00:45:33,317 --> 00:45:34,902 அது பெரிய விஷயம். 446 00:45:43,327 --> 00:45:48,790 இந்த இழிபிறவிகளைப் பாருங்கள்! இப்போது கப்பலே இவர்களால் நாறுகிறது. 447 00:45:50,167 --> 00:45:51,835 நான் வேறு இடத்திற்கு செல்ல வேண்டும். 448 00:45:51,919 --> 00:45:54,213 இங்கேயே காத்திரு. தண்ணீர் கொண்டு வருகிறேன். 449 00:45:54,838 --> 00:45:57,674 என்னை விட்டு போகாதீர்கள். 450 00:45:58,926 --> 00:46:00,260 என்னை விட்டு போகாதீர்கள். 451 00:46:00,344 --> 00:46:01,845 நான் இப்பொழுது வந்துவிடுவேன். 452 00:47:03,907 --> 00:47:08,161 இன்றிரவு என் திறமையை ரசிப்பீர்கள் என நம்புகிறேன். 453 00:47:28,432 --> 00:47:30,267 எங்கே தண்ணீர் கிடைக்கும்? 454 00:47:50,370 --> 00:47:53,707 இங்கிருக்கும் நீங்கள் எல்லோரும் யார்? 455 00:47:53,790 --> 00:47:57,377 சுரங்கத்தில் வேலை செய்ய செல்கிறோம். பயணத்திற்கு நிறுவனம் பணம் செலுத்துகிறது. 456 00:47:57,461 --> 00:47:59,421 பெண்களும் குழந்தைகளும்? 457 00:47:59,505 --> 00:48:00,797 உங்கள் குடும்பங்கள் எங்கே? 458 00:48:01,507 --> 00:48:05,177 நாங்கள் நன்றாக உழைத்தால் எங்கள் குடும்பங்களும் வர பணம் செலுத்துவார்கள். 459 00:48:09,890 --> 00:48:15,103 முதலில் என் அப்பாதான் வந்தார். 460 00:48:18,357 --> 00:48:23,111 நானும் என் அம்மாவும் சில வருடங்கள் கழித்து பின்தொடர்ந்தோம். 461 00:48:24,196 --> 00:48:25,656 மேடம், இது… 462 00:48:31,578 --> 00:48:36,625 அவர் சிக்குஹோவில் சுரங்க வேலை செய்ய வந்தார். 463 00:48:38,377 --> 00:48:41,505 சூழ்நிலைகள் படுபயங்கரமாக இருந்தன. 464 00:48:41,588 --> 00:48:46,593 அவரும் 400 கொரிய சுரங்கத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்யும் அளவுக்கு. 465 00:48:47,928 --> 00:48:48,929 என்ன நடக்கிறது? 466 00:48:49,012 --> 00:48:50,597 ஆனால், 467 00:48:50,681 --> 00:48:56,103 அது அவர்கள் எல்லோரையும் பணிநீக்கம் செய்யப்படும் வரை 20 நாட்கள் நீடித்தது. 468 00:49:03,944 --> 00:49:08,407 அப்போது, கொரியர்களான எங்களுக்கு யாரும் வாடகைக்கு விட விரும்பவில்லை. 469 00:49:09,241 --> 00:49:13,203 நாங்கள் மிகவும் அழுக்கானவர்கள், சத்தமாக பேசுவோம் என்று சொன்னார்கள். 470 00:49:17,499 --> 00:49:19,042 அவர்கள் சொன்னது சரிதான். 471 00:49:19,710 --> 00:49:22,963 நாங்கள் மிகவும் அழுக்கானவர்கள்தான். மிகவும் சத்தமாகத்தான் பேசுவோம். 472 00:49:24,006 --> 00:49:27,634 ஏனென்றால் அதிக வாடகையின் காரணமாக நாங்கள் 473 00:49:27,718 --> 00:49:32,973 இரண்டு, மூன்று குடும்பங்கள் ஒரே அறையில் அடைந்துகிடப்போம். 474 00:49:33,640 --> 00:49:35,642 அதெல்லாம் முடிந்த கதை. 475 00:49:40,522 --> 00:49:41,857 நீ நிஜமாகவே அப்படி நினைத்தால்… 476 00:49:43,817 --> 00:49:47,988 நான் நினைத்ததை விட நீ பெரிய முட்டாள். 477 00:50:00,167 --> 00:50:03,253 எங்களை கரப்பான் பூச்சிகள் என்று அழைத்தனர். 478 00:50:03,337 --> 00:50:05,839 நாங்கள் நசுக்கப்பட வேண்டியவர்கள் என்று சொன்னார்கள். 479 00:50:07,925 --> 00:50:09,510 அதை யோசித்துப்பார். 480 00:50:11,220 --> 00:50:13,055 அவர்கள் உன்னைப் பற்றி பேசுகிறார்கள். 481 00:50:18,936 --> 00:50:20,187 பாட்டி… 482 00:51:03,230 --> 00:51:05,315 என்ன பாடப்படுகிறது? 483 00:51:24,835 --> 00:51:29,131 -அதைக் கேட்கிறீர்களா? -அது நம் இசை. அட! 484 00:51:38,932 --> 00:51:41,101 அவளை மேடையிலிருந்து இறக்குங்கள்! 485 00:51:41,185 --> 00:51:43,145 -என்ன இது? -காவலர்கள் எங்கே? 486 00:51:43,228 --> 00:51:44,688 அவளை உடனே கீழே இறக்குங்கள்! 487 00:51:44,771 --> 00:51:46,231 அவளை நிறுத்தச் செய்யுங்கள்! 488 00:51:46,315 --> 00:51:47,608 காவலர்கள் எங்கே? 489 00:51:54,448 --> 00:51:55,866 அதை நீ சொல்வதை நான் கேட்க வேண்டும். 490 00:52:00,245 --> 00:52:01,580 இதுவே இங்கே உட்கார்ந்து… 491 00:52:04,208 --> 00:52:08,170 அறையில் உள்ள இந்த கசப்பான முகங்களை பார்ப்பவர் உன் பாட்டியாக இருந்தால்… 492 00:52:10,797 --> 00:52:13,467 அவர் இங்கிருந்து… 493 00:52:15,177 --> 00:52:17,888 அவருடைய ஒவ்வொரு துளி இரத்தமும் இந்த… 494 00:52:19,723 --> 00:52:21,975 ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு எதிராக இருப்பதாக சொன்னால்… 495 00:52:24,770 --> 00:52:26,355 நீ என்ன சொல்வாய்? 496 00:52:27,481 --> 00:52:30,234 என்ன நடக்கிறது? ஜப்பானிய மொழி பேசுங்கள்! 497 00:52:33,946 --> 00:52:35,739 அவரை கையெழுத்துப் போடச் சொல்வாயா? 498 00:53:17,281 --> 00:53:18,323 கையெழுத்து போடாதீர்கள். 499 00:53:21,910 --> 00:53:23,370 அதைத்தான் அவரிடம் சொல்வேன். 500 00:53:25,038 --> 00:53:26,331 கையெழுத்து போட வேண்டாம். 501 00:53:37,176 --> 00:53:38,343 என்ன நடக்கிறது? 502 00:53:38,427 --> 00:53:39,428 எனக்கு இசை கேட்கவில்லை. 503 00:54:09,541 --> 00:54:11,084 இங்கே என்ன நடக்கிறது? 504 00:54:12,336 --> 00:54:13,420 என்ன நடக்கிறது? 505 00:54:14,713 --> 00:54:15,964 அவர் எங்கே போகிறார், சாலமன்? 506 00:54:16,048 --> 00:54:19,134 கையொப்பமிடுவது வெறும் நெறிமுறைதான். 507 00:54:19,218 --> 00:54:21,220 -என்ன நடந்தது? -கடவுளே. 508 00:54:21,303 --> 00:54:23,722 அவர் ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்! 509 00:55:11,645 --> 00:55:13,480 அது என்ன கொடுமை, சாலமன்? 510 00:55:14,398 --> 00:55:15,440 அவரிடம் நீ என்ன சொன்னாய்? 511 00:55:19,611 --> 00:55:20,988 இப்போது நீ என்னிடம் பேசமாட்டாயா? 512 00:55:21,071 --> 00:55:23,615 சாலமன், பத்து நிமிடங்களுக்கு முன்பு உன்னால் ஏன் வாயை மூட முடியவில்லை? 513 00:55:24,825 --> 00:55:25,868 அது பெரும் ஏமாற்றம். 514 00:55:25,951 --> 00:55:27,619 "தவிர்க்க முடியாத இழப்பு" உன்னால் ஏற்பட்டது. 515 00:55:27,703 --> 00:55:29,746 மூன்று வருடங்கள்… மூன்று வருடங்கள். 516 00:55:31,957 --> 00:55:35,210 -கடவுளே… ஆம். -இதைப்பற்றி எல்லோரையும் எச்சரித்தேன். 517 00:55:35,294 --> 00:55:37,880 அவனைப் போன்ற ஒருவனை இதில் கொண்டு வருவது… 518 00:55:38,547 --> 00:55:40,632 அது பொறுப்பற்றது. மோசமானது, அது ஆபத்தானது. 519 00:55:40,716 --> 00:55:43,760 இவனை ஒருபோதும் நம்பியிருக்கக் கூடாது! நம்மை முட்டாளாக்கிவிட்டான்! 520 00:55:54,730 --> 00:55:56,398 சாலமன் பேக், என்னை ஏமாற்றிவிட்டாய். 521 00:56:01,695 --> 00:56:03,197 அவமானம். 522 00:57:35,330 --> 00:57:36,582 இங்கே நிறுத்து. 523 00:57:37,749 --> 00:57:39,835 ஆனால் நாம் ஹோட்டலை அடையவில்லை. 524 00:57:40,419 --> 00:57:41,628 அம்மா! 525 01:00:29,546 --> 01:00:31,548 வசனத் தமிழாக்கம் அருண்குமார்