1 00:00:06,840 --> 00:00:12,638 ஜப்பானிய வசனம் நீலத்திலும், கொரிய வசனம் மஞ்சளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது 2 00:00:53,595 --> 00:00:56,056 (கொரிய மொழியில்) என்ன செய்கிறாய்? காய்கறிகளை வெட்டு. 3 00:00:56,139 --> 00:00:57,349 அவர்கள் பட்டினியாக இருக்கிறார்கள்! 4 00:01:22,875 --> 00:01:25,002 உணவு பரிமாறப்படுகிறது! 5 00:01:26,670 --> 00:01:28,630 சாப்பிடலாம்! 6 00:01:29,381 --> 00:01:30,924 சாப்பிடும் நேரம்! 7 00:01:34,011 --> 00:01:36,889 எனக்கு, பழுக்காத காய்கறிகள்தான் இஷ்டம். 8 00:01:36,972 --> 00:01:39,516 உங்களால் இன்னமும் பூண்டின் வாசனையை நுகர முடியும். 9 00:01:39,600 --> 00:01:42,519 அந்த வயிறுக்கு பிடிக்காத உணவு உண்டா? 10 00:01:51,778 --> 00:01:53,780 சுன்ஜா, நீ நலமா? 11 00:02:02,289 --> 00:02:03,332 இங்கே இருக்கிறாய். 12 00:02:03,415 --> 00:02:04,416 நன்றி. 13 00:02:05,959 --> 00:02:09,003 நான் வீடியோ கடை அருகே நிற்பேன் என கியுங்கீ அத்தையிடம் சொல்லுங்கள். 14 00:02:11,840 --> 00:02:12,841 நல்ல நாளாக அமையட்டும். 15 00:02:13,383 --> 00:02:14,801 கடினமாக உழை. 16 00:02:39,910 --> 00:02:43,413 நேற்று இரவு அரிசி கேக்குகள் என் கனவில் வந்தன. 17 00:02:43,497 --> 00:02:44,498 நிஜமாகவா? 18 00:02:44,581 --> 00:02:46,416 ஒரு தட்டு நிறைய. 19 00:02:46,500 --> 00:02:49,545 -அதை உன்னோடும் பகிர்ந்துகொண்டேன். -அவை நன்றாக இருந்தனவா? 20 00:03:12,818 --> 00:03:15,404 கியுங்கீ, எழுந்திரு. 21 00:03:21,743 --> 00:03:22,828 கியுங்கீ. 22 00:03:26,874 --> 00:03:27,875 கியுங்… 23 00:03:34,506 --> 00:03:35,507 கியுங்… 24 00:03:42,055 --> 00:03:43,974 சுன்ஜா, என்ன அது? 25 00:03:47,561 --> 00:03:48,854 என் வயிறு. 26 00:03:50,147 --> 00:03:52,900 நேற்று இரவு கெட்டுப்போன சிப்பியை சாப்பிட்டுவிட்டேனா? 27 00:03:54,151 --> 00:03:55,235 அது மோசமாக இருந்தது. 28 00:03:56,278 --> 00:03:58,780 இது உன் மாதவிடாய்க்கான அறிகுறியாக இருக்கலாமா? 29 00:03:59,781 --> 00:04:01,366 கடந்த மாதம் உனக்கு மாதவிடாய் வரவில்லை. 30 00:04:03,869 --> 00:04:05,913 கொஞ்சம் டோராஜியை உனக்காக கொதிக்க வைக்கிறேன். 31 00:05:26,118 --> 00:05:27,870 மின் ஜின் லீ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 32 00:07:18,438 --> 00:07:22,025 விலையேற்றத்திற்கு நான் வருந்தியதாக உன் அம்மாவிடம் சொல். 33 00:07:23,026 --> 00:07:27,406 கோ ஹான்சு இல்லாததால், எல்லாவற்றிலும் குழம்பம் ஏற்படுகிறது. 34 00:07:27,489 --> 00:07:29,241 அவர் இந்நேரம் திரும்ப வந்திருக்க வேண்டுமே? 35 00:07:29,324 --> 00:07:31,493 அவர் போய் ஒரு வாரம் தான் ஆகிறது என்று கேள்விப்பட்டேன். 36 00:07:31,577 --> 00:07:32,578 அது சரிதான். 37 00:07:33,078 --> 00:07:36,081 ஆனால் யாருக்குத் தெரியும்? அவர் திரும்ப வராமலும் போகலாம். 38 00:07:37,291 --> 00:07:38,500 நீங்கள் ஏன் அப்படி சொல்கிறீர்கள்? 39 00:07:39,042 --> 00:07:42,337 கோ ஹான்சு போன்றவர்களுக்கு நிறைய வழிகள் இருக்கின்றன. 40 00:07:42,838 --> 00:07:45,966 பூஸானில் மீன் தரகராக இருப்பது ஒன்றும் அவரது மாபெரும் கனவல்ல. 41 00:07:47,176 --> 00:07:51,263 மீண்டும் பழைய நிலைக்குச் செல்வதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. 42 00:07:51,346 --> 00:07:55,184 அவர் கறாராக இருந்திருக்கலாம், ஆனால் நியாயமான விலை நிர்ணயித்தார். 43 00:07:55,267 --> 00:07:58,353 அவர் இருந்தவரை நன்றாக இருந்தது, இல்லையா? 44 00:08:00,647 --> 00:08:02,316 இங்கே பாருங்கள்! 45 00:08:04,776 --> 00:08:07,279 வாருங்கள்! மலிவான விலை! 46 00:08:38,977 --> 00:08:39,977 அது யாராக இருக்கும்? 47 00:08:40,729 --> 00:08:42,022 நான் சென்று பார்க்கிறேன். 48 00:08:48,028 --> 00:08:49,571 இங்கே வைப்படி எப்படி? 49 00:08:49,655 --> 00:08:50,948 இந்த நினைவுகளுடன் அவர் இருப்பார். 50 00:08:52,658 --> 00:08:54,910 வெளிப்படையாக தெரிகிறது தானே? 51 00:08:54,993 --> 00:08:56,203 பாட்டி, 52 00:08:56,286 --> 00:08:58,705 இதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 53 00:08:59,331 --> 00:09:01,416 கல்லறையில் வைக்கும் பலகை விரைவில் தயாராகிவிடும். 54 00:09:03,418 --> 00:09:04,503 அட! 55 00:09:04,586 --> 00:09:06,505 நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டியதில்லை. 56 00:09:06,588 --> 00:09:08,382 நீங்களே இப்படி சொல்லலாமா? 57 00:09:08,465 --> 00:09:09,591 நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்பதை 58 00:09:09,675 --> 00:09:10,926 பார்க்க கண்டிப்பாக நான் வர வேண்டும். 59 00:09:12,094 --> 00:09:14,179 இவர் கொரியாவிலிருந்து வந்த பாஸ்டர் ரீ. 60 00:09:14,763 --> 00:09:17,349 இவர் எங்களுடன் சில மாதங்கள் தேவாலயத்தில் இருக்கிறார். 61 00:09:17,432 --> 00:09:21,186 இவரைப் பெற்ற நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்று உனக்குத் தெரியாது. 62 00:09:22,396 --> 00:09:23,605 உட்காருங்கள். 63 00:09:26,400 --> 00:09:27,860 நம்முடைய கியுங்கீயுடன், 64 00:09:28,402 --> 00:09:30,445 நான் நீண்ட காலம் பழகியதில்லை, 65 00:09:30,529 --> 00:09:32,531 ஆனால் அவர் அபூர்வமானவர் என்று என்னால் சொல்ல முடியும். 66 00:09:32,614 --> 00:09:34,992 அவர் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதை விரும்பினார், இல்லையா? 67 00:09:36,410 --> 00:09:40,873 புற்றுநோய் அவளது உயிரை பறிக்கும் முன்பு நீங்கள் அவளைப் பார்த்திருக்கலாம். 68 00:09:41,915 --> 00:09:44,710 அந்த வயதிலும் கூட, 69 00:09:44,793 --> 00:09:47,629 நீங்கள் அவள் மீது காதல் கொண்டிருப்பீர்கள். 70 00:09:50,465 --> 00:09:53,677 நான் அவரது உள்ளத்தைப் பார்த்தேன், அவர் ஒரு நல்ல மனிதர். 71 00:09:55,429 --> 00:09:59,183 ஒருவரிடம் நாம் எப்போதும் பார்க்க வேண்டியது அதுதான். 72 00:10:01,226 --> 00:10:03,687 நீங்கள் மிகவும் சரளமாக பேசுகிறீர்கள். 73 00:10:04,313 --> 00:10:06,231 நீங்கள் புத்தகம் கூட எழுதலாம். 74 00:10:09,193 --> 00:10:10,986 நான் இதை நகர்த்துவதில் ஆட்சேபனை இருக்கிறதா? 75 00:10:11,069 --> 00:10:12,404 தயவுசெய்து நகர்த்துங்கள். 76 00:10:26,335 --> 00:10:28,462 அவர் தான் விரும்பியவர்களோடு இருக்க வேண்டும். 77 00:10:28,545 --> 00:10:30,339 இன்னும் அருமை. 78 00:10:31,423 --> 00:10:33,342 நாம் ஒன்றாக பிரார்த்தனை செய்யலாமா? 79 00:10:34,134 --> 00:10:35,260 சீக்கிரம். 80 00:10:46,855 --> 00:10:48,315 அன்புள்ள தேவலோக பிதாவே, 81 00:10:49,316 --> 00:10:51,151 நாங்கள் இன்று ஒன்று கூடியிருப்பது 82 00:10:51,235 --> 00:10:54,488 உங்களிடம் திரும்பி வந்த உங்கள் குழந்தையை நினைவில் கொள்ள. 83 00:10:55,739 --> 00:11:00,494 எங்கள் அன்பானவரை மீண்டும் உங்கள் அருளால் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 84 00:11:00,577 --> 00:11:01,578 ஆமென். 85 00:11:24,685 --> 00:11:27,646 சுன்ஜா, வீட்டிற்கு சீக்கிரம் வா. புயல் வரப்போகிறது. 86 00:11:27,729 --> 00:11:29,106 இது தான் என் கடைசி பணி. 87 00:11:30,399 --> 00:11:32,734 அது எவ்வளவு கேடு விளைவிக்கும் என்று யாருக்குத் தெரியும். 88 00:11:37,489 --> 00:11:38,740 கோ ஹான்சு! 89 00:11:40,450 --> 00:11:43,495 நீங்கள் எங்களைக் கைவிட்டுவிட்டீர்கள் என்று நினைக்க ஆரம்பித்தோம். 90 00:11:43,579 --> 00:11:45,247 நீங்கள் எங்களை மிகவும் கவலையடையச் செய்தீர்கள்! 91 00:12:27,706 --> 00:12:29,499 நான் இல்லாததற்கு ஒரு பிராயச்சித்தம். 92 00:12:30,000 --> 00:12:31,919 இவ்வளவு அழகாக இருப்பதை கிழித்து திறப்பதா. 93 00:12:33,587 --> 00:12:35,797 சிலவற்றுக்கு குறைவாக உணர்ச்சிவசப்பட நீ கற்றுக்கொள்ள வேண்டும். 94 00:12:48,727 --> 00:12:51,146 எனக்கு மணி பார்க்கவே தெரியாது. 95 00:12:51,730 --> 00:12:53,065 நான் கற்றுக்கொடுக்கிறேன். 96 00:12:54,733 --> 00:12:57,569 நீ மிகவும் புத்திசாலி. சீக்கிரம் கற்றுக்கொள்வாய். 97 00:13:13,669 --> 00:13:14,795 நான்… 98 00:13:17,881 --> 00:13:19,174 நான் கர்ப்பமாக இருக்கிறேன். 99 00:13:29,184 --> 00:13:30,811 ஏதாவது பேசுங்கள். 100 00:13:33,814 --> 00:13:34,898 நிஜமாக சொல்கிறாயா? 101 00:13:42,072 --> 00:13:43,240 சுன்ஜா. 102 00:13:47,619 --> 00:13:48,954 நீ என் மகனை சுமக்கிறாய். 103 00:13:50,122 --> 00:13:52,249 இது பையன் என்பதை நீங்கள் அறிய வழியே இல்லை. 104 00:13:52,833 --> 00:13:54,251 ஆனால் எனக்குத் தெரியும். 105 00:13:54,334 --> 00:13:55,544 எனக்கு கண்டிப்பாக தெரியும். 106 00:13:58,213 --> 00:14:01,049 அது ஒரு பெண்ணாக இருந்தால் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். 107 00:14:01,133 --> 00:14:02,926 இருந்தாலும் நீங்கள் அவளை நேசிக்க வேண்டும். 108 00:14:04,344 --> 00:14:06,763 பெண்ணாக இருந்தால், அவளுக்கு அழகிய ஆடைகளை வாங்குவேன். 109 00:14:07,472 --> 00:14:09,516 அம்மாவைப் போலவே அவளும் புத்திசாலியாக இருப்பாள் என நம்புகிறேன். 110 00:14:18,192 --> 00:14:20,360 எப்போது என் அம்மாவை வந்து பார்க்கிறீர்கள்? 111 00:14:21,403 --> 00:14:23,530 அவர் கண்டிப்பாக ஆச்சரியப்படுவார். 112 00:14:23,614 --> 00:14:25,949 சீக்கிரம் திருமணம் செய்து கொண்டால், அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தாது. 113 00:14:27,367 --> 00:14:29,620 ஏன் திடீரென்று திருமணம் பற்றி பேசுகிறாய்? 114 00:14:29,703 --> 00:14:31,580 இது என்னவென்று உனக்குத் தெரியும் என்று நினைத்தேன். 115 00:14:33,790 --> 00:14:34,917 தெரியுமா? 116 00:14:36,585 --> 00:14:38,837 என்ன சொல்ல வருகிறீர்கள்? 117 00:14:40,589 --> 00:14:41,840 என்னால் உன்னை திருமணம் செய்ய முடியாது. 118 00:14:41,924 --> 00:14:43,008 எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. 119 00:14:47,346 --> 00:14:48,931 ஒசாகாவில், எனக்கொரு மனைவியும் 120 00:14:49,014 --> 00:14:50,224 மூன்று மகள்களும் இருக்கிறார்கள். 121 00:14:51,808 --> 00:14:53,852 அது காதல் திருமணம் அல்ல, 122 00:14:54,770 --> 00:14:56,522 ஆனால் ஒரு தேவைக்காக நடந்தது. 123 00:14:57,022 --> 00:14:58,482 ஒரு தேவைக்காக நடந்ததா? 124 00:14:59,024 --> 00:15:02,653 தொழில் காரணங்களுக்காக தேவைப்பட்டது. பாசம் எதுவும் இல்லை. 125 00:15:05,364 --> 00:15:07,449 உனக்கு, உன் அம்மாவிற்கு 126 00:15:07,533 --> 00:15:10,410 மற்றும் நம் குழந்தைக்கு தேவையான எல்லாமே கிடைக்கும். 127 00:15:11,578 --> 00:15:13,747 யோங்டோவில் ஒரு பெரிய வீட்டை வாங்குகிறேன். 128 00:15:13,830 --> 00:15:15,374 ஜியுனின் வீடு எப்படி? 129 00:15:15,958 --> 00:15:18,502 எப்படியும் இனி அவர்களால் அதற்கு பணம் செலுத்த முடியாது. 130 00:15:20,587 --> 00:15:22,464 நீ மணி பார்த்து சொல்ல 131 00:15:22,548 --> 00:15:23,966 கற்றுக்கொள்வாய். 132 00:15:24,633 --> 00:15:27,386 நாம் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொண்டு நன்றாக வாழ்வோம். 133 00:15:27,469 --> 00:15:28,595 இன்னும் அதிகமான மகள்களுடன். 134 00:15:37,938 --> 00:15:39,314 உனக்கும் இது தெரியும், 135 00:15:40,566 --> 00:15:42,276 உலகம் இப்போது எப்படி இருக்கிறது என்று. 136 00:15:44,027 --> 00:15:45,779 படுக்கைக்கு போகும் குழந்தைகள், 137 00:15:47,072 --> 00:15:48,699 கண் விழிப்பதில்லை. 138 00:15:49,950 --> 00:15:52,703 சிறுமிகள் உணவிற்காக உடலை விற்கிறார்கள். 139 00:15:55,330 --> 00:15:58,083 இளையவர்கள் சாப்பிட போதுமானது கிடைப்பதற்காகவே 140 00:15:58,166 --> 00:16:01,003 முதியவர்கள் விரைவாகவும் அமைதியாகவும் இறக்கிறார்கள். 141 00:16:05,007 --> 00:16:06,008 சுன்ஜா. 142 00:16:09,094 --> 00:16:12,389 திருமணம், அது வெறும் ஏற்பாடுதான். 143 00:16:14,433 --> 00:16:16,435 நான் சொல்வதில் நீ காரணத்தைக் காணலாம். 144 00:16:18,103 --> 00:16:19,688 நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 145 00:16:21,398 --> 00:16:22,691 நம்மை போன்றவர்கள், 146 00:16:24,234 --> 00:16:25,986 இப்படித்தான் உயிர் வாழ்கிறார்கள். 147 00:16:41,793 --> 00:16:43,045 சுன்ஜா. 148 00:16:52,471 --> 00:16:53,597 எனவே… 149 00:16:55,307 --> 00:16:57,518 ஆரம்பம் முதலே இதுதான் திட்டமா? 150 00:16:59,895 --> 00:17:01,980 வேறு யாரும் செய்யமாட்டார்கள் என்பதற்காக 151 00:17:03,023 --> 00:17:04,608 உன்னை திருமணம் செய்துகொள்ள என்னை வற்புறுத்துவதா? 152 00:17:06,484 --> 00:17:07,778 எல்லாவற்றுக்கும் பின்பு, 153 00:17:08,403 --> 00:17:10,614 ஊனமுற்றவரின் மகளை யார் திருமணம் செய்து கொள்வார்கள்… 154 00:17:10,696 --> 00:17:12,699 என் தந்தையைப் பற்றி நீங்கள் பேச வேண்டாம். 155 00:17:12,782 --> 00:17:14,910 உன் தந்தையின் குறைபாடுகளை என் குழந்தையும் பெறலாம். 156 00:17:16,161 --> 00:17:17,246 எனக்கு அந்த உரிமை இல்லையா? 157 00:17:17,329 --> 00:17:19,957 சொல், உண்மையில் யார் யாரை சபிக்கிறார்கள்? 158 00:17:28,715 --> 00:17:30,133 சுன்ஜா. 159 00:17:33,637 --> 00:17:35,097 திரும்பி வா. 160 00:17:37,766 --> 00:17:38,767 திரும்பி வா இப்போது! 161 00:17:55,117 --> 00:17:56,285 நீங்கள் நலமா? 162 00:17:57,077 --> 00:17:58,328 நன்றாக இருக்கிறேன். 163 00:18:01,999 --> 00:18:03,458 விதவையான ஊனமுற்றவரின் மனைவி 164 00:18:03,542 --> 00:18:09,298 நடத்தும் வாடகை வீட்டிற்கு வழிகாட்ட முடியுமா? 165 00:18:09,381 --> 00:18:12,342 அதற்கு 40 நிமிடம் மலையேற வேண்டும். 166 00:18:14,219 --> 00:18:15,345 நான் பார்த்துக்கொள்கிறேன். 167 00:19:11,527 --> 00:19:12,736 அம்மா. 168 00:19:36,844 --> 00:19:37,845 பாட்டி. 169 00:19:38,512 --> 00:19:41,682 கியுங்கீ மரணித்த துக்கத்திலிருந்து மீள நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். 170 00:19:42,182 --> 00:19:46,103 என்ன, இதனால் மனமுடைந்து போவேன் என்று நினைக்கிறாயா? 171 00:19:46,770 --> 00:19:49,064 இவை சாதாரண விஷயங்கள் தான். 172 00:19:50,274 --> 00:19:54,069 இந்த வீடு கூட. ஒரு கூரை, சில சுவர்கள், 173 00:19:54,152 --> 00:19:55,404 எதன் மீதும் பற்றுதல் கிடையாது. 174 00:20:02,536 --> 00:20:06,498 (ஜப்பானிய மொழியில்) திட்டமிட்டு செய்த குற்றங்களுடன் தொடர்புடையவர், 175 00:20:06,582 --> 00:20:09,042 தனது இறப்பிற்கு பிறகு சொத்தை தனது பேரனுக்கு விட்டு சென்றிருக்கிறார். 176 00:20:09,126 --> 00:20:11,795 இப்போது மாமோரு யோஷியும் ஊழல் வதந்திகளால் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளார், 177 00:20:11,879 --> 00:20:15,007 கூடவே சட்டவிரோதமான பங்கு பரிவர்த்தனையில் ஈடுபட்டதுடன். 178 00:20:30,022 --> 00:20:33,192 என்னால் அந்த நாட்களில் போதுமான அளவு ஒரு அம்மாவாக இருக்க முடியவில்லை. 179 00:20:34,985 --> 00:20:40,324 வாரத்தின் ஏழு நாட்களிலும், நாளொன்றுக்கு 14 மணிநேரங்கள் வேலை செய்வேன். 180 00:20:42,743 --> 00:20:45,621 உன் அத்தை இல்லாவிட்டால், நமக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரியாது. 181 00:20:49,249 --> 00:20:50,834 நீங்கள் ரொம்ப வருத்தப்படக் கூடாது. 182 00:20:51,335 --> 00:20:52,961 உங்களை கவனித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. 183 00:20:54,004 --> 00:20:58,425 நடுத்தர வர்க்க வாழ்க்கையை வாழ்வது கடினம் என்பது போல நீ பேசுகிறாய். 184 00:20:59,384 --> 00:21:02,012 போதும். போய் வேலையைப் பார். 185 00:21:02,095 --> 00:21:04,640 பாட்டியை மகிழ்விப்பதால் என்ன பயன்? 186 00:21:05,432 --> 00:21:07,434 நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். 187 00:21:07,518 --> 00:21:09,019 அவர்களுக்கு நிலைமை புரியும். 188 00:21:11,897 --> 00:21:14,525 தவிர, செய்வதற்கு எதுவுமில்லை. 189 00:21:15,567 --> 00:21:18,445 நில உரிமையாளர் மீண்டும் முடியாது என்று சொல்லிவிட்டார். 190 00:21:18,529 --> 00:21:19,947 என்ன? 191 00:21:20,030 --> 00:21:21,281 அவ்வளவு பணம் கொடுத்தாலுமா? 192 00:21:22,241 --> 00:21:26,078 தன் குழந்தைகளுக்கு அவள் கொடுக்கக்கூடிய அனைத்தையும் கற்பனை செய்து பார். 193 00:21:26,578 --> 00:21:29,164 அந்த பணம் சட்டவிரோதமானது ஒன்றும் இல்லையே. 194 00:21:29,998 --> 00:21:33,126 அவளுக்கு என்ன ஆயிற்று? 195 00:21:36,964 --> 00:21:39,341 எனவே இதனால் உனக்கு என்ன ஆகும்? 196 00:21:41,510 --> 00:21:44,096 சிறிது காலத்திற்கு என் மீது கரும்புள்ளி குத்தப்படும் என நினைக்கிறேன். 197 00:21:47,349 --> 00:21:49,434 நான் ஒரு மதிப்புமிக்க பணியாளராக மாற கடினமாக உழைக்க வேண்டும் 198 00:21:50,018 --> 00:21:51,436 எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது? 199 00:21:52,813 --> 00:21:55,148 எப்படியிருந்தாலும், அந்த ஒப்பந்தம் தோல்வியடைந்துவிட்டது. 200 00:21:59,403 --> 00:22:02,823 ஏன் சிலர் கடந்தகாலத்தின் மீது 201 00:22:02,906 --> 00:22:07,327 உணர்ச்சிவயப்படுகிறார்கள் என்பது எனக்குப் புரிந்திருக்கலாம். 202 00:22:07,411 --> 00:22:09,413 அதனால் என்ன நல்லது நடக்கப்போகிறது? 203 00:22:11,582 --> 00:22:14,668 அது இறந்தவர்களை திரும்ப கொண்டுவரவா போகிறது? 204 00:22:17,880 --> 00:22:19,047 பாட்டி. 205 00:22:21,717 --> 00:22:22,926 என்னுடன் டோக்கியோவிற்கு வாருங்கள். 206 00:22:23,635 --> 00:22:24,720 என்ன? 207 00:22:24,803 --> 00:22:26,180 நீங்கள் அவரிடம் பேசுங்கள். 208 00:22:27,639 --> 00:22:28,849 நானா? 209 00:22:28,932 --> 00:22:30,475 நான் என்ன சொல்வேன்? 210 00:22:32,102 --> 00:22:33,812 என்னிடம் சொன்னதை அவரிடம் சொல்லுங்கள். 211 00:22:34,813 --> 00:22:37,983 ஒரு வீடு என்பது, கூரையும் சில சுவர்களும் தான். 212 00:22:38,066 --> 00:22:40,277 அதோடு இறந்தவர்கள் திரும்ப வரமாட்டார்கள். 213 00:22:42,821 --> 00:22:45,365 பாட்டி, தயவுசெய்து. 214 00:22:59,379 --> 00:23:02,674 அவர்கள் என்ன சொல்கிறார்கள்? உனக்கு கேட்கிறதா? 215 00:23:11,350 --> 00:23:13,477 எங்களிடம் சொல். அவன் உயிர் பிழைப்பானா? 216 00:23:17,064 --> 00:23:19,900 இவன் முன்பே இதை எதிர்த்து போராடி இருக்கிறான். 217 00:23:20,734 --> 00:23:23,904 இவன் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருப்பது இது முதல் முறை அல்ல. 218 00:23:25,614 --> 00:23:27,866 இவன் தன் குடும்பத்தை விட்டு தொலைவில் இருப்பது வருத்தமளிக்கிறது. 219 00:23:28,450 --> 00:23:30,327 இவனது பெற்றோர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்று வியப்பாக இருக்கிறது. 220 00:23:32,329 --> 00:23:33,622 -இது இவனுடையதா? -ஆம். 221 00:23:35,958 --> 00:23:37,626 இவனது பெயரை கண்டுபிடிக்க முயல்வோம். 222 00:23:44,508 --> 00:23:48,262 -இந்த ஆடைகள் விலை உயர்ந்தவை. -இந்த புத்தகங்களைப் பாருங்கள்! 223 00:23:48,929 --> 00:23:51,765 இவ்வளவு சுமையை சுமக்க எவ்வளவு கடினமாக இருந்திருக்கும். 224 00:24:00,315 --> 00:24:01,817 இதில் என்ன இருக்கிறது? 225 00:24:09,700 --> 00:24:11,451 "அன்புள்ள அம்மா மற்றும் அப்பாவிற்கு, 226 00:24:11,994 --> 00:24:14,580 நான் பூஸானிற்கு பத்திரமாக வந்துவிட்டேன்." 227 00:24:14,663 --> 00:24:19,168 "ஒசாகாவிற்கு சென்று இறைவனுக்கு உழியம் செய்ய ஆர்வமாக இருக்கிறேன் 228 00:24:19,251 --> 00:24:24,173 அதோடு யோசெப் மற்றும் கியுங்கீயுடன் என் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறேன்." 229 00:24:24,256 --> 00:24:26,758 "கவலை வேண்டாம். 230 00:24:26,842 --> 00:24:28,844 நான் நன்றாக இருக்கிறேன். 231 00:24:29,553 --> 00:24:31,805 உங்கள் அன்பு மகன், இசாக்." 232 00:24:33,265 --> 00:24:35,517 இசாக்கா? என்ன பெயர் இது? 233 00:24:36,435 --> 00:24:38,187 இது கிறிஸ்துவ பெயரென்று நினைக்கிறேன். 234 00:24:39,688 --> 00:24:41,190 இவன் பியோங்யாங்கை சேர்ந்தவன். 235 00:24:43,442 --> 00:24:45,944 வடக்கிலிருந்து வந்த கிறிஸ்துவர்களில் ஒருவன். 236 00:24:49,031 --> 00:24:51,200 நீங்கள் தீவிரமாக இவனது நோயை குணப்படுத்த வேண்டும். 237 00:24:51,283 --> 00:24:52,284 இது காசநோய். 238 00:24:52,367 --> 00:24:53,493 நாம் இது பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும். 239 00:24:55,495 --> 00:24:57,706 இந்த நிலைமையில் அவனை வெளியே போக சொல்லி எப்படி கேட்பது? 240 00:24:57,789 --> 00:24:58,832 மேடம்… 241 00:25:01,418 --> 00:25:03,086 உங்கள் மகளை, இங்கே தங்குபவர்களை 242 00:25:04,046 --> 00:25:05,422 நினைத்துப் பாருங்கள். 243 00:25:07,966 --> 00:25:12,804 இன்றிரவு இவன் உயிர் பிழைக்கிறானா என்று பார்ப்போம். 244 00:25:27,653 --> 00:25:29,905 -ஹலோ. -அங்கே என்ன செய்கிறீர்கள்? 245 00:25:30,989 --> 00:25:31,990 யார் இது? 246 00:25:32,658 --> 00:25:34,451 உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். 247 00:25:34,535 --> 00:25:36,161 நான் இவனது பாட்டி. 248 00:25:36,245 --> 00:25:39,248 எங்களோடு கொஞ்சம் பேச முடியுமா? 249 00:25:47,422 --> 00:25:51,468 -உங்களுக்கு சிரமம் வேண்டாம்… -ஒன்றுமில்லை. 250 00:25:52,344 --> 00:25:53,929 நான் இப்போதுதான் சாப்பிட இருந்தேன். 251 00:25:59,059 --> 00:26:00,269 -ஆமென். -ஆமென். 252 00:26:05,232 --> 00:26:08,110 உங்களுக்கு பேரக்குழந்தை இருக்கிறதா? 253 00:26:08,193 --> 00:26:10,320 அதுவா? 254 00:26:10,404 --> 00:26:12,322 நான்தான் படிக்கிறேன். 255 00:26:23,625 --> 00:26:25,878 பள்ளியில் இப்போதுதான் கொடுத்தார்கள். 256 00:26:26,503 --> 00:26:28,505 ஆறாம் வகுப்பு முடித்ததற்காக எனது சான்றிதழ். 257 00:26:31,133 --> 00:26:34,928 குழந்தைகளுடன் பள்ளிக்கு செல்கிறீர்களா? 258 00:26:35,012 --> 00:26:38,182 ஆம். பெரும்பாலனோர் நல்ல குழந்தைகள், 259 00:26:38,265 --> 00:26:40,225 ஆனால் சில விரும்பத்தகாதவர்களும் இருக்கிறார்கள். 260 00:26:40,893 --> 00:26:44,646 பள்ளிக்குப் போக எது உங்களை தூண்டியது? 261 00:26:45,272 --> 00:26:47,232 உங்களுக்கு எப்படி என்று எனக்குத் தெரியாது, 262 00:26:48,066 --> 00:26:49,693 ஆனால் என் குடும்பம் மிகவும் ஏழ்மையானது, 263 00:26:49,776 --> 00:26:52,779 பையன்களை கூட அவர்களால் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க முடியவில்லை. 264 00:26:53,322 --> 00:26:54,406 பாட்டி, 265 00:26:54,990 --> 00:26:58,827 பெண்களை பள்ளிக்கு அனுப்புவதில் என் அம்மா எந்த பிரயோசனத்தையும் பார்க்கவில்லை. 266 00:26:58,911 --> 00:27:01,330 அப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே. 267 00:27:01,413 --> 00:27:05,417 உலக மக்களிடமிருந்து தனித்திருக்கும் அந்த உணர்வு. 268 00:27:06,502 --> 00:27:09,630 நான் எப்போதும் அசிங்கப்படுவேன் அல்லது பயப்படுவேன். 269 00:27:10,214 --> 00:27:14,134 படிக்கக் கற்றுக்கொண்டதற்காக என் சொந்தக் குழந்தைகள் மீதே நான் கோபப்படுவேன். 270 00:27:14,218 --> 00:27:17,471 அவர்கள் என்னை தாழ்வாக பார்ப்பதால் நான் கவலையடைந்தேன். 271 00:27:18,805 --> 00:27:21,934 ஆனால் பாருங்கள், என் வகுப்பில் நான் மூன்றாவதாக வந்திருக்கிறேன்! 272 00:27:22,017 --> 00:27:23,769 கிட்டத்தட்ட இரண்டாவது இடத்துக்கு நெருக்கமாக. 273 00:27:23,852 --> 00:27:25,103 ஆஹா! 274 00:27:38,242 --> 00:27:39,826 இதை சுவைத்தீர்களா? 275 00:27:42,496 --> 00:27:43,580 ஆனால் எப்படி? 276 00:27:44,081 --> 00:27:46,959 எனக்குத் தெரிந்த ஒரு பெண் சில மாதங்களுக்கு ஒருமுறை தன் மகளைப் பார்க்க வருவாள். 277 00:27:47,042 --> 00:27:50,838 அவள் எப்போதும் இரண்டு சூட்கேஸ்களை வீட்டிற்கு கொண்டு வருவாள். 278 00:27:51,421 --> 00:27:52,798 பாட்டி, என்ன இது? 279 00:27:52,881 --> 00:27:54,883 அரிசி சாப்பாட்டை மீண்டும் சுவைத்துப் பார். 280 00:28:02,224 --> 00:28:03,976 இவனைப் பாருங்கள்! 281 00:28:04,059 --> 00:28:06,895 இளையோருக்கு வித்தியாசம் தெரிவதில்லை. 282 00:28:07,980 --> 00:28:10,190 இது நம் நாட்டில் விளைந்த அரிசி. 283 00:28:11,191 --> 00:28:12,317 எப்படி சொல்கிறீர்கள்? 284 00:28:12,401 --> 00:28:13,694 இதன் சுவை வேறுபடும். 285 00:28:13,777 --> 00:28:16,071 கொஞ்சம் இனிப்பாக, கடிக்க கடினமாக இருக்கும். 286 00:28:17,990 --> 00:28:20,617 முன்பெல்லாம், வெள்ளை அரிசி ஆடம்பரமானது. 287 00:28:20,701 --> 00:28:24,246 நாங்கள் விளைவிப்போம், ஆனால் அவர்கள் பறித்துக்கொள்வார்கள். 288 00:28:26,331 --> 00:28:28,959 இப்போது வெள்ளை அரிசியைத்தான் எல்லா வேளையும் சாப்பிடுகிறோம், 289 00:28:29,042 --> 00:28:30,752 அதோடு நாம் அதை கவனிப்பதில்லை. 290 00:28:32,129 --> 00:28:34,381 அது நல்ல விஷயம் என்று நினைக்கிறீர்களா? 291 00:28:42,139 --> 00:28:44,099 நான் இந்த நாட்டிற்கு முதலில் வந்தபோது, 292 00:28:44,975 --> 00:28:46,560 எங்களிடம் குறைவான பணமே இருந்தது. 293 00:28:47,811 --> 00:28:49,688 நாங்கள் ஒசாகாவில் வாழ்ந்தோம். 294 00:28:51,315 --> 00:28:54,234 இரயில் நிலையத்தின் அருகே உணவு கடைகளின் பக்கம் நடந்தது நினைவிருக்கிறது, 295 00:28:54,860 --> 00:28:58,405 அதோடு ஒவ்வொரு உணவின் சுவையும் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முயற்சிப்பேன். 296 00:28:59,781 --> 00:29:02,367 நான் அதில் கைத்தேர்ந்தவள். 297 00:29:03,076 --> 00:29:05,746 உண்மையில் எனக்கு எச்சில் ஊறும். 298 00:29:05,829 --> 00:29:09,374 முதல் முறையாக காபி வாசனையை நுகர்ந்தது போல. 299 00:29:10,292 --> 00:29:14,630 இது மிகவும் அற்புதமான வாசனை என நினைத்தேன். 300 00:29:14,713 --> 00:29:18,091 அது நான் இறுதியாக அதை சுவைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு… 301 00:29:18,175 --> 00:29:21,220 -மிகவும் கசப்பு! -மிகச்சரி! 302 00:29:21,303 --> 00:29:23,847 நான் கற்பனை செய்தது இல்லை. 303 00:29:31,939 --> 00:29:33,440 ஆனால் இப்போதெல்லாம், 304 00:29:33,982 --> 00:29:35,526 எனக்கு பசிப்பது கூட இல்லை. 305 00:29:36,193 --> 00:29:37,528 நேரமானால் சாப்பிடுகிறேன். 306 00:29:39,613 --> 00:29:41,740 இப்போதெல்லாம் காய்கறிகளைக் கூட விளைவிப்பதில்லை. 307 00:29:42,241 --> 00:29:44,993 நான் அதை ஒரு ஜாடி 300 யென்களுக்கு வாங்குகிறேன். 308 00:29:46,787 --> 00:29:47,996 அப்போதெல்லாம்… 309 00:29:50,290 --> 00:29:56,046 இவ்வளவு சம்பாதிக்க வண்டி முழுக்க பொருட்களை விற்க வேண்டியிருக்கும். 310 00:30:01,260 --> 00:30:02,886 இந்த அரிசி எனக்கு நினைவூட்டுகிறது… 311 00:30:03,929 --> 00:30:05,722 என் அம்மாவை நினைவூட்டுகிறது, 312 00:30:06,890 --> 00:30:08,976 நான் திருமணம் செய்து கொண்ட நாளை. 313 00:30:16,859 --> 00:30:17,901 பாட்டி, 314 00:30:17,985 --> 00:30:19,486 என்ன ஆனது? 315 00:30:22,823 --> 00:30:25,659 கேலிக்குரியவளாக இருக்கிறேன். 316 00:30:26,743 --> 00:30:30,455 -மன்னிக்கவும். நாங்கள் வந்திருக்கக்… -அவர் அழுவதைப் பார்க்காதே. 317 00:30:31,665 --> 00:30:33,375 அதற்கான உரிமையை அவர் பெற்றிருக்கிறார். 318 00:31:17,211 --> 00:31:20,047 உனக்கு என்னைத் தெரியாது என்பது தெரியும்… 319 00:31:23,509 --> 00:31:24,718 ஆனால் கவலைப்படாதே. 320 00:31:25,677 --> 00:31:27,763 என்னால் முடிந்தவரை உன்னைக் கவனித்துக் கொள்கிறேன். 321 00:31:38,190 --> 00:31:40,192 வீட்டுக்குத் சென்றிருக்கிறீர்களா? 322 00:31:41,193 --> 00:31:43,028 இரண்டு முறை. 323 00:31:43,111 --> 00:31:46,031 70 களில் ஒருமுறை, மீண்டும் சில ஆண்டுகளுக்கு முன்பு. 324 00:31:46,532 --> 00:31:47,866 நீங்கள்? 325 00:31:50,536 --> 00:31:53,038 முதலில் போதுமான பணம் இல்லை. 326 00:31:53,121 --> 00:31:55,916 பிறகு போதுமான நேரம் இல்லை. 327 00:31:57,334 --> 00:31:59,211 இப்போது அது முக்கியமானதாக தெரியவில்லை. 328 00:31:59,294 --> 00:32:02,589 எல்லாம் போய்விட்டது என கேள்விப்பட்டேன். 329 00:32:03,632 --> 00:32:06,552 ஆம், நிறைய மாறிவிட்டது. 330 00:32:08,554 --> 00:32:12,015 ஆனால் தெருவில் நடந்து உங்கள் சொந்த மொழியைக் கேட்பது, 331 00:32:12,099 --> 00:32:14,518 உங்கள் உணவின் வாசனை நுகர்வது. 332 00:32:15,561 --> 00:32:17,938 உங்கள் கால்களுக்குக் கீழே உள்ள நிலம் வித்தியாசமாக தோன்றும். 333 00:32:19,481 --> 00:32:21,942 அப்போதுதான் உங்கள் ஆன்மாவுக்குத் தெரியும்… 334 00:32:24,361 --> 00:32:30,284 இந்த நிலம்தான் உண்மையில் என் வீடு என்று. 335 00:32:32,452 --> 00:32:34,454 அதுதான் நாங்கள் செல்வதற்குக் காரணம். 336 00:32:40,627 --> 00:32:41,879 என் அண்ணி… 337 00:32:42,588 --> 00:32:45,924 என் அண்ணி சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். 338 00:32:47,509 --> 00:32:49,845 அவர் ஒரு நல்ல மனிதராக இருந்தார். 339 00:32:51,972 --> 00:32:54,141 அவருடைய இதயம் அதிகமாக ஏங்கினாலும், 340 00:32:54,224 --> 00:32:56,977 அவர் முதலில் எங்களைத்தான் நினைத்தார். 341 00:33:00,439 --> 00:33:01,690 என் அண்ணி… 342 00:33:02,941 --> 00:33:04,151 என் அண்ணி, 343 00:33:05,068 --> 00:33:07,613 அவர் மீண்டும் ஒருமுறை திரும்பிச் சென்றிருக்கலாம். 344 00:33:08,197 --> 00:33:10,407 அது அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். 345 00:33:14,786 --> 00:33:15,996 இப்போது… 346 00:33:16,747 --> 00:33:19,291 இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. 347 00:33:23,879 --> 00:33:27,382 உங்களுக்கு மிகவும் தாமதமாகவில்லை. 348 00:33:29,301 --> 00:33:30,928 சரிதானே? 349 00:33:40,395 --> 00:33:41,939 நீ. 350 00:33:42,022 --> 00:33:44,149 எங்கள் தாய் நிலத்தைப் பற்றி உனக்கு ஆர்வம் கூட இல்லை. 351 00:33:44,650 --> 00:33:49,071 ஆனால் உன் பாட்டியை அழைத்து வந்தால், விற்றுவிடலாம் என்று நினைத்தாயா? 352 00:33:52,491 --> 00:33:53,492 ஆம். 353 00:33:57,037 --> 00:33:58,872 நீ இரக்கமற்றவன். 354 00:34:00,249 --> 00:34:02,376 உனக்கு வெட்கமாக இல்லையா? 355 00:34:04,002 --> 00:34:06,046 நான் உங்களிடமிருந்து திருடவில்லை. 356 00:34:06,129 --> 00:34:07,631 உங்களை யாரும் ஏமாற்றவில்லை. 357 00:34:07,714 --> 00:34:09,299 உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி கொடுக்கிறோம். 358 00:34:11,552 --> 00:34:13,554 ஆனால் நன்றியுடன் இருப்பதற்கு பதிலாக, 359 00:34:13,637 --> 00:34:15,472 ஏதோ அநியாயம் நடப்பது போல நடந்து கொள்கிறீர்கள். 360 00:34:18,391 --> 00:34:19,768 இப்போது விஷயங்கள் மாறிவிட்டன. 361 00:34:21,103 --> 00:34:24,273 இது அவர்கள் நமக்கு திருப்பிச் செலுத்தும் காலம். 362 00:34:28,068 --> 00:34:31,822 நீ உண்மையிலேயே அதை நம்புகிறாயா? 363 00:34:34,449 --> 00:34:35,659 ஆம். 364 00:35:20,162 --> 00:35:21,496 அம்மா. 365 00:35:22,372 --> 00:35:23,540 அவரது காய்ச்சல் இறுதியாக குறைந்துவிட்டது. 366 00:35:25,000 --> 00:35:26,627 நாம் கொஞ்சம் கஞ்சி காய்ச்ச வேண்டும். 367 00:35:27,127 --> 00:35:28,462 அம்மா… 368 00:35:32,090 --> 00:35:33,967 நான் உங்களோடு பேச வேண்டும். 369 00:35:36,428 --> 00:35:37,721 என்ன? 370 00:35:45,729 --> 00:35:47,022 உனக்கு யார் இதைச் செய்தது? 371 00:35:50,400 --> 00:35:51,610 அவன் பெயரைச் சொல்! 372 00:35:56,823 --> 00:35:57,950 சொல். 373 00:35:58,784 --> 00:36:00,911 அவன் உன்னை கட்டாயப்படுத்தினானா? 374 00:36:03,372 --> 00:36:04,540 இல்லை. 375 00:36:06,458 --> 00:36:07,459 அது அப்படி இல்லை… 376 00:36:07,543 --> 00:36:09,169 பிறகு ஏன் அவனைப் பாதுகாக்கிறாய்? 377 00:36:11,296 --> 00:36:15,509 இப்படி செய்துவிட்டு பொறுப்பேற்க மறுப்பது என்னவொரு கோழைத்தனம்? 378 00:36:26,228 --> 00:36:30,691 உன்னை புத்திசாலிப் பெண் என்று நினைத்தது என் தவறு. 379 00:36:33,110 --> 00:36:35,529 நீ எப்படி இவ்வளவு முட்டாளாக இருந்தாய்? 380 00:36:39,449 --> 00:36:40,701 அம்மா… 381 00:36:44,037 --> 00:36:45,664 என்னை மன்னித்துவிடுங்கள். 382 00:37:04,683 --> 00:37:06,685 இது உனக்கு இப்போது என்ன செய்யும் என்று உனக்கே தெரியும். 383 00:37:10,105 --> 00:37:11,190 இந்தக் குழந்தைக்கு. 384 00:37:15,194 --> 00:37:16,236 உனக்குத் தெரியுமா? 385 00:37:29,750 --> 00:37:30,751 சுன்ஜா… 386 00:37:33,962 --> 00:37:36,757 அவன் உன்னை திருமணம் செய்துகொள்ள வழியில்லையா? 387 00:37:41,136 --> 00:37:44,556 அது முடிந்தது, அம்மா. 388 00:37:47,059 --> 00:37:48,310 அவன் போய் விட்டான். 389 00:37:52,689 --> 00:37:54,066 நானொரு முட்டாள். 390 00:38:03,867 --> 00:38:05,244 இப்போது புரிகிறது. 391 00:38:07,079 --> 00:38:10,999 அந்தப் பெண் அந்த வீட்டிலேயே இறுதி காலத்தை கழிக்க விரும்புகிறாள். 392 00:38:11,083 --> 00:38:12,376 உனக்கு அது புரியவில்லையா? 393 00:38:12,459 --> 00:38:13,710 நீங்களே சொன்னீர்கள், 394 00:38:13,794 --> 00:38:17,798 அவருடைய பிள்ளைகள் அந்தப் பணத்தால் பயனடைவார்கள் என்று. 395 00:38:18,924 --> 00:38:19,967 அதனால், 396 00:38:20,801 --> 00:38:23,512 அதுதான் நம் நோக்கமா? 397 00:38:23,595 --> 00:38:25,681 எங்கள் குழந்தைகளுக்காக தொடர்ந்து தியாகம் செய்வதா? 398 00:38:26,390 --> 00:38:28,350 அது எப்போது நிறுத்தப்படும்? 399 00:38:29,101 --> 00:38:30,561 எங்கள் மரணத்திலா? 400 00:38:32,646 --> 00:38:34,189 என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? 401 00:38:35,023 --> 00:38:36,692 தெளிவாக சொல்லுங்கள். 402 00:38:40,737 --> 00:38:43,699 அவரை நிம்மதியாக விட்டுவிட்டு 403 00:38:43,782 --> 00:38:46,827 உன்னால் வெற்றிபெற முடியாதா? 404 00:38:47,995 --> 00:38:49,204 இல்லை. 405 00:38:49,288 --> 00:38:51,039 அதுதான் என் வேலை. 406 00:38:51,123 --> 00:38:52,875 அதுதான் எனக்கு சாப்பாடு போடுகிறது. 407 00:38:58,213 --> 00:39:01,425 மன்னிக்கவும், நான் பாஸ்டர் ரீ போன்ற அன்பான மதகுரு இல்லை. 408 00:39:02,009 --> 00:39:04,344 அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 409 00:39:07,389 --> 00:39:10,017 அவர் எனக்கு ஒருவரை நினைவூட்டுகிறார். 410 00:39:11,143 --> 00:39:12,519 அவ்வளவு தான். 411 00:39:14,938 --> 00:39:16,940 நான் போக வேண்டும். இரயில் வருகிறது. 412 00:39:17,024 --> 00:39:18,483 உங்களை இரயிலில் ஏற்றிவிட வருகிறேன். 413 00:39:23,530 --> 00:39:25,991 நீ நல்ல பையன் என்று எனக்குத் தெரியும். 414 00:39:27,075 --> 00:39:29,244 நான் உன்னை சரியாக வளர்த்தேன் என்பதும் தெரியும். 415 00:40:10,994 --> 00:40:12,704 உன் உணவை கொத்துவதை நிறுத்து! 416 00:40:12,788 --> 00:40:14,623 அது துரதிர்ஷ்டம் என்பது உனக்கே தெரியும். 417 00:40:22,214 --> 00:40:23,841 அது என்ன? 418 00:40:23,924 --> 00:40:25,592 ஏதாவது துக்கம் ஏற்பட்டுவிட்டதா என்ன? 419 00:40:26,218 --> 00:40:27,469 என்ன நடக்கிறது? 420 00:40:28,971 --> 00:40:30,472 என்ன? 421 00:40:46,405 --> 00:40:47,406 சாப்பிடு. 422 00:40:54,329 --> 00:40:55,914 சாலமன் பேக். 423 00:40:57,749 --> 00:40:59,918 ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவரது வழக்கறிஞர்களிடமிருந்து அழைப்பு வந்தது. 424 00:41:02,462 --> 00:41:03,672 நீ சாதித்துவிட்டாய். 425 00:41:05,340 --> 00:41:07,176 உன் பாட்டியைப் பயன்படுத்தி. 426 00:41:07,259 --> 00:41:08,635 அது புத்திசாலித்தனமானது. 427 00:41:08,719 --> 00:41:09,761 ஆம். 428 00:41:13,182 --> 00:41:14,975 சரி, எல்லோரும். 429 00:41:15,058 --> 00:41:18,478 நவோமி, அரிமோடோ, நீயும். கொண்டாடப் போகிறோம். 430 00:41:18,562 --> 00:41:21,440 அனைவருக்கும் ஷாட்டு பட்வைசர்கள்! 431 00:41:24,276 --> 00:41:25,777 வாழ்த்துகள். 432 00:41:25,861 --> 00:41:26,987 நன்றி. 433 00:41:27,654 --> 00:41:30,490 நான் ஒப்புக்கொள்கிறேன், உன்னால் முடியும் என நான் நினைக்கவில்லை. 434 00:41:31,283 --> 00:41:32,618 உன்னை தவறாக எண்ணிவிட்டேன். 435 00:41:35,037 --> 00:41:37,414 டாம் நம்மை அழைக்கிறார். போகலாமா? 436 00:41:38,040 --> 00:41:39,416 இதோ வந்துவிடுகிறேன். 437 00:41:51,720 --> 00:41:52,930 ஹலோ? 438 00:41:55,557 --> 00:41:56,683 ஹலோ? 439 00:41:57,559 --> 00:42:01,188 நீ என்னை மிஸ் செய்தாய் என்று சொல். 440 00:42:03,315 --> 00:42:06,527 -அல்லது குறைந்த பட்சம் பொய் சொல். -நீ அழைப்பதற்காகக் காத்திருந்தேன். 441 00:42:07,110 --> 00:42:08,612 இல்லை, நீ செய்யவில்லை. 442 00:42:08,695 --> 00:42:10,489 இன்று நான்கு முறை அழைத்தேன். 443 00:42:11,406 --> 00:42:12,950 சில நாட்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். 444 00:42:14,993 --> 00:42:16,620 என்ன நடக்கிறது? 445 00:42:16,703 --> 00:42:17,955 கொண்டாட்டமா? 446 00:42:19,748 --> 00:42:20,916 சாலமன்! 447 00:42:21,458 --> 00:42:23,377 ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை முடித்தேன். 448 00:42:23,460 --> 00:42:24,670 நாங்கள் கொண்டாடுகிறோம். 449 00:42:24,753 --> 00:42:27,714 நிச்சயமாக நீ செய்திருப்பாய். 450 00:42:28,882 --> 00:42:30,676 எனவே உன்னை அமெரிக்காவிற்கு அனுப்பியது 451 00:42:30,759 --> 00:42:33,011 எல்லாவற்றிற்கும் மேலாக சரியான முடிவுதான். 452 00:42:33,095 --> 00:42:34,930 உன் ஆசை நிறைவேறியது என நினைக்கிறேன். 453 00:42:35,931 --> 00:42:39,184 ஆனால் இழந்த எல்லாவற்றையும் பற்றி நீ எப்போதாவது யோசித்திருக்கிறாயா? 454 00:42:40,227 --> 00:42:42,187 நீ எனக்காக மகிழ்ச்சியடைய வேண்டும். 455 00:42:42,271 --> 00:42:43,438 நான் மறுக்கிறேன். 456 00:42:44,398 --> 00:42:46,441 குறைந்தபட்சம் அதைப் பற்றி நேர்மையாக பேசுகிறேன். 457 00:42:47,734 --> 00:42:51,864 உன் வெற்றிக்காக உங்களை வெறுப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. 458 00:42:53,198 --> 00:42:54,825 நான் உன்னை எப்போது பார்ப்பேன்? 459 00:42:55,951 --> 00:42:59,788 ஒருவேளை ஒருபோதும் பார்க்கமாட்டாய். 460 00:42:59,872 --> 00:43:01,456 நீ மாறவேயில்லை. 461 00:43:02,124 --> 00:43:04,501 பரிதாபத்திற்குரியது, நீயும் இந்த விளையாட்டுகளும். 462 00:43:04,585 --> 00:43:06,128 நீ சொல்வது தவறு. 463 00:43:06,920 --> 00:43:11,216 நான் நிறைய மாறிவிட்டேன். 464 00:43:23,270 --> 00:43:24,688 உனக்கு உடம்பு சரியில்லையா? 465 00:43:27,608 --> 00:43:28,901 ஹனா! 466 00:43:34,364 --> 00:43:35,490 மேடம்? 467 00:43:36,366 --> 00:43:37,409 மேடம்? 468 00:43:39,369 --> 00:43:40,579 எப்படி இருக்கிறீர்கள்? 469 00:43:42,623 --> 00:43:43,832 உயிருடன், உங்களுக்கு நன்றி. 470 00:43:45,083 --> 00:43:47,294 மருந்தாளர் சூ நீங்கள் நன்றாக குணமடைவதாக சொல்கிறார். 471 00:43:48,462 --> 00:43:50,255 அதைக் கேட்டு நிம்மதியடைந்தேன். 472 00:43:50,339 --> 00:43:53,175 என் பெற்றோரும் நிம்மதியடைவார்கள். 473 00:43:53,258 --> 00:43:54,635 நான்… 474 00:43:54,718 --> 00:43:56,845 அவர்களுக்கு தந்தி அனுப்ப ஊருக்குள் செல்ல விரும்புகிறேன். 475 00:43:56,929 --> 00:43:59,181 செய்தியை எடுத்துச் செல்ல ஒரு பையனை அழைத்து வருகிறேன். 476 00:43:59,848 --> 00:44:01,600 நானே செல்ல விரும்புகிறேன். 477 00:44:02,851 --> 00:44:03,852 என்னுடைய கால்களை சோதிக்கவும். 478 00:44:04,686 --> 00:44:07,064 ஆனால் நீங்கள் அவ்வளவு சீக்கிரம் நடமாடக்கூடாது. 479 00:44:07,940 --> 00:44:09,900 ஒசாகாவுக்குச் செல்ல வேண்டுமென்றால், நான் வலுப்பெற வேண்டும். 480 00:44:09,983 --> 00:44:11,443 நீங்கள் செல்ல வேண்டுமா? 481 00:44:11,527 --> 00:44:13,987 நீங்கள் தேவாலயத்தில் வேலை செய்வது எனக்குத் தெரியும், 482 00:44:15,197 --> 00:44:17,115 ஆனால் நீங்கள் அங்கே இறந்து போனால், 483 00:44:18,408 --> 00:44:20,160 வீட்டில் இருந்து வெகுதொலைவில்… 484 00:44:20,953 --> 00:44:22,788 நான் பல முறை இது போல நோய்வாய்ப்பட்டிருக்கிறேன். 485 00:44:22,871 --> 00:44:24,039 எனக்கும் அது நன்றாகத் தெரியும். 486 00:44:25,457 --> 00:44:26,792 நான் அதற்காக பயப்படவில்லை. 487 00:44:27,668 --> 00:44:29,253 மறுபுறம், வாழ்வது, 488 00:44:29,878 --> 00:44:31,505 அதுதான் எனக்கு கடினமான பகுதி. 489 00:44:36,051 --> 00:44:37,928 குறைந்தபட்சம் என் மகளையாவது உங்களுடன் வர அனுமதியுங்கள். 490 00:44:38,512 --> 00:44:39,721 தயவுசெய்து… 491 00:44:39,805 --> 00:44:41,306 நான் யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 492 00:44:41,974 --> 00:44:43,517 என்னால் உங்களை தனியாக அனுப்ப முடியாது. 493 00:44:43,600 --> 00:44:46,603 ஒரு நொடி. நான் அவளை அழைத்து வருகிறேன். 494 00:44:48,272 --> 00:44:49,439 சுன்ஜா! 495 00:44:51,441 --> 00:44:54,778 உனக்கும் உன் அம்மாவுக்கும் சிரமம் கொடுப்பதற்கு வருந்துகிறேன். 496 00:44:55,404 --> 00:44:57,406 உன்னை மதிய உணவிற்கு அழைத்துச் செல்கிறேன். 497 00:44:59,533 --> 00:45:01,702 இது ஒன்றும் பிரச்சினை இல்லை. 498 00:45:02,536 --> 00:45:04,621 ஒருவேளை சந்தையில் ஏதாவது இருக்கலாம். 499 00:45:07,916 --> 00:45:09,918 ஒரு நூடுல்ஸ் கடை உள்ளது. 500 00:45:11,336 --> 00:45:12,880 மக்கள் அதைப் பற்றி பேசுவதை கேட்டிருக்கிறேன். 501 00:45:13,630 --> 00:45:15,132 இங்கிருந்து வெகு தொலைவில் இல்லை. 502 00:45:17,134 --> 00:45:18,218 அற்புதம். 503 00:45:18,302 --> 00:45:19,511 அப்படியென்றால், 504 00:45:20,637 --> 00:45:22,472 மதிய உணவுக்குப் பிறகு எனது தந்தி அனுப்புவோம். 505 00:45:25,726 --> 00:45:27,144 இதைப் பற்றி நான் சொன்னேன். 506 00:45:29,855 --> 00:45:30,856 அதை அப்புறப்படுத்துங்கள். 507 00:45:33,317 --> 00:45:34,610 இது என்ன? 508 00:45:38,363 --> 00:45:39,406 அதை எழுதி வை. 509 00:45:39,907 --> 00:45:43,035 இந்த சந்தையைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பிரம்மாண்டமானது. 510 00:45:48,040 --> 00:45:49,208 இது நிஜமாகவே பெரியது. 511 00:46:02,262 --> 00:46:03,472 தயவுசெய்து, நாம் போவோம். 512 00:46:12,439 --> 00:46:14,983 இது போதும்… 513 00:46:15,067 --> 00:46:16,109 சாலமன். 514 00:46:16,193 --> 00:46:19,196 -இல்லை, ஹேய்… டாம். -மன்னிக்கவும், திரும்ப அழைக்கிறோம். 515 00:46:19,279 --> 00:46:20,572 டாம், வைத்துவிடாதீர்கள்… 516 00:46:20,656 --> 00:46:22,407 நான்தான் உன் முதலாளி. 517 00:46:22,491 --> 00:46:24,284 வெளியே வந்து கொண்டாடு. 518 00:46:24,368 --> 00:46:25,577 மேதை. 519 00:46:28,413 --> 00:46:29,665 ஹேய். 520 00:46:30,791 --> 00:46:31,917 சியர்ஸ். 521 00:46:32,000 --> 00:46:33,752 சியர்ஸ்! 522 00:46:40,384 --> 00:46:41,718 அது… 523 00:47:01,738 --> 00:47:02,906 அம்மா, 524 00:47:02,990 --> 00:47:04,575 இவ்வளவு தாமதமாக இங்கே என்ன செய்கிறீர்கள்? 525 00:47:04,658 --> 00:47:06,785 அவள் திரும்பிச் செல்ல விரும்பினாள், 526 00:47:06,869 --> 00:47:08,787 நம் தாயகத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க. 527 00:47:08,871 --> 00:47:10,622 எதைப் பற்றி பேசுகிறீர்கள்? 528 00:47:11,331 --> 00:47:14,543 உன் அத்தையின் அஸ்தி இங்கே புதைப்பதை நான் விரும்பவில்லை. 529 00:47:14,626 --> 00:47:16,461 நான் அவள் அஸ்தியை தாயகம் கொண்டு செல்ல விரும்புகிறேன். 530 00:47:17,379 --> 00:47:19,673 நானும்தான். நான் தாயகம் செல்ல வேண்டும். 531 00:47:31,643 --> 00:47:33,604 உணவகத்திற்கு வருவது இதுவே முதல் முறை. 532 00:47:36,899 --> 00:47:38,650 சீக்கிரம் வந்துவிட்டது! 533 00:47:40,277 --> 00:47:42,946 எங்கள் வாடிக்கையாளர்கள் காத்திருப்பதை நாங்கள் விரும்புவதில்லை. 534 00:47:49,661 --> 00:47:52,039 ஜப்பானிய மொழி பேச உங்களுக்கு யார் கற்றுக் கொடுத்தது? 535 00:47:52,873 --> 00:47:56,335 எனக்கு சிறுவயதில் ஒரு ஆசிரியர் இருந்தார். 536 00:47:56,418 --> 00:47:57,628 திரு. ஷிமிசு. 537 00:47:58,879 --> 00:48:00,547 அவரும் நானும் நல்ல நண்பர்கள். 538 00:48:00,631 --> 00:48:02,299 உங்கள் புத்தகங்கள் பார்த்தேன். 539 00:48:02,382 --> 00:48:04,510 உங்களுக்கு நிறைய தெரிந்திருக்க வேண்டும். 540 00:48:04,593 --> 00:48:06,178 உறுதியாக அப்படி செய்ய முடியாது. 541 00:48:06,261 --> 00:48:07,888 நான் வளர வளர, 542 00:48:08,680 --> 00:48:10,516 தெரியாதது நிறைய இருக்கிறது என்பதை உணர்கிறேன். 543 00:48:11,767 --> 00:48:12,976 உண்மையைச் சொல்வதென்றால், 544 00:48:13,769 --> 00:48:15,979 பெரும்பாலான நேரம் முட்டாள் போல உணர்கிறேன். 545 00:48:18,440 --> 00:48:19,983 என்னுடன் ஜெபிப்பாயா? 546 00:48:27,449 --> 00:48:30,869 பிதாவே, நாங்கள் உன்னவிருக்கும் உணவுக்கு நன்றி. 547 00:48:31,912 --> 00:48:34,790 அதோடு எங்களைக் கவனித்துக்கொண்டதற்கு நன்றி, 548 00:48:34,873 --> 00:48:38,043 எங்களை சரியான பாதையில் வழிநடத்தியதற்காக. 549 00:48:39,920 --> 00:48:42,256 யேசுநாதரின் நாமத்தை ஜெபிக்கிறோம். 550 00:48:42,339 --> 00:48:43,340 ஆமென். 551 00:48:47,970 --> 00:48:50,889 சுன்ஜா, இப்போது கண்களைத் திறக்கலாம். 552 00:49:04,778 --> 00:49:05,946 சுவையாக இருக்கிறது. 553 00:49:17,958 --> 00:49:20,169 இனியும் அதை மறைத்தால் நான் 554 00:49:20,252 --> 00:49:21,670 நேர்மையற்றவனாக இருப்பேன். 555 00:49:23,672 --> 00:49:25,299 நீ கர்ப்பமாக இருப்பது எனக்குத் தெரியும். 556 00:49:30,387 --> 00:49:33,015 உன்னை கண்டிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. 557 00:49:33,098 --> 00:49:35,267 அதைப்பற்றி பேசுவதற்கான ஒரே காரணம்… 558 00:49:35,350 --> 00:49:37,311 இந்த நேரத்தில் ஒரு நண்பர் இருப்பது 559 00:49:38,812 --> 00:49:41,648 ஒருவேளை உனக்கு உதவும் என்பதால்தான். 560 00:49:43,775 --> 00:49:45,194 ஆனால் என்னால் முடிந்தால். 561 00:49:46,737 --> 00:49:48,071 அந்த குழந்தை, 562 00:49:48,155 --> 00:49:50,699 குழந்தையை வேறொரு குடும்பத்திற்கு கொடுக்கும் எண்ணம் இருக்கிறதா? 563 00:49:54,119 --> 00:49:55,829 ஒருவேளை குழந்தை இல்லாத தம்பதிக்கு. 564 00:49:58,207 --> 00:50:00,042 இது கடினம் என்று தெரியும், ஆனால்… 565 00:50:00,125 --> 00:50:01,502 என்ன சொல்கிறீர்கள்? 566 00:50:05,631 --> 00:50:08,759 தனியாக ஒரு குழந்தையை வளர்ப்பது, அதன் பின்விளைவுகள்… 567 00:50:08,842 --> 00:50:11,386 எனது தலைவிதியைப் பற்றிய எந்த மாயையிலும் நான் இல்லை. 568 00:50:13,805 --> 00:50:16,808 நானும் என் குழந்தையும் புறக்கணிக்கப்படுவோம் என்பது புரிகிறது… 569 00:50:18,936 --> 00:50:21,939 என் அம்மாவின் தொழிலைக் கெடுக்காதபடி நான் தங்கும் விடுதியை விட்டு வெளியேற வேண்டும். 570 00:50:23,732 --> 00:50:25,025 எனக்கு இதெல்லாம் தெரியும். 571 00:50:27,903 --> 00:50:29,154 இருந்தாலும்… 572 00:50:30,197 --> 00:50:31,323 நான்… 573 00:50:33,784 --> 00:50:36,995 நான் புறக்கணிக்கப்பட்ட ஒருவரால் நேசிக்கப்பட்டேன். 574 00:50:39,623 --> 00:50:40,749 என் அப்பாவால். 575 00:50:42,960 --> 00:50:45,712 இப்போது அவரைப் பற்றி எவ்வளவு நினைக்கிறேன் என்பது விசித்திரமாக இருக்கிறது. 576 00:50:47,798 --> 00:50:50,884 அவரது வாழ்நாளில் பெரும்பாலும், அவர் திருமணம் செய்து கொள்ள மாட்டார் அல்லது 577 00:50:50,968 --> 00:50:52,636 குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டார் என்று கூறப்பட்டது. 578 00:50:52,719 --> 00:50:54,012 ஆனால் இதோ நான் இருக்கிறேன். 579 00:50:57,015 --> 00:50:59,101 நான் பிறந்திருக்கக் கூடாது என்றாலும் நான் இருக்கிறேன். 580 00:51:03,438 --> 00:51:04,690 இப்போது… 581 00:51:06,483 --> 00:51:11,738 அதே நிலையில் என் குழந்தை இங்கே இருக்கிறான். 582 00:51:14,449 --> 00:51:16,285 அவன் நேசிக்கப்படுவான். 583 00:51:19,079 --> 00:51:22,499 என் விரல் நகங்கள் உடையும் வரை நான் உழைக்க வேண்டியிருந்தாலும், 584 00:51:23,584 --> 00:51:26,545 என் முதுகு வலித்தாலும், நான் பட்டினி கிடந்தாலும், 585 00:51:27,838 --> 00:51:29,173 என் குழந்தை… 586 00:51:32,092 --> 00:51:33,927 அவனுக்கு ஒன்றும் ஆகாது. 587 00:51:37,264 --> 00:51:38,640 அதுதான் அவனுக்கு நான் கொடுக்கும் வாக்குறுதி. 588 00:51:42,978 --> 00:51:44,104 என் அப்பா… 589 00:51:51,236 --> 00:51:53,238 நான் பிறந்தபோதும் அதே வாக்குறுதியை கொடுத்தார். 590 00:52:01,371 --> 00:52:02,581 இல்லை. 591 00:52:06,043 --> 00:52:07,211 என்னால் முடியாது… 592 00:52:10,297 --> 00:52:11,423 இந்த குழந்தையை கொடுக்க. 593 00:52:18,722 --> 00:52:20,182 மன்னித்துவிடு, சுன்ஜா. 594 00:52:24,228 --> 00:52:25,687 நான் நினைத்தது தவறு. 595 00:52:29,149 --> 00:52:33,070 என் வாழ்நாளில் பெரும்பகுதி நோய்வாய்ப்பட்டிருக்கிறேன். 596 00:52:37,491 --> 00:52:39,284 எனக்கு புத்தகங்களை தெரியும், ஆம். 597 00:52:40,702 --> 00:52:42,621 ஆனால் எனக்கு மிகக் குறைவாகவே மக்களைப் பற்றி தெரியும். 598 00:52:47,501 --> 00:52:49,795 நீ சொல்லியதைக் கேட்டு… 599 00:52:52,047 --> 00:52:53,423 நான் வெட்கப்படுகிறேன். 600 00:52:54,299 --> 00:52:55,592 அது என் நோக்கமல்ல. 601 00:52:56,552 --> 00:52:57,636 இல்லை. 602 00:52:58,554 --> 00:53:00,264 அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். 603 00:53:04,226 --> 00:53:05,310 நன்றியுள்ளவராகவா? 604 00:53:14,903 --> 00:53:16,071 அந்த நபர்… 605 00:53:18,949 --> 00:53:20,284 உன்னால் அவனை மறக்க முடியுமா? 606 00:53:33,881 --> 00:53:35,299 மறக்க நினைக்கிறேன். 607 00:53:38,010 --> 00:53:39,261 அப்படி என்றால், 608 00:53:41,054 --> 00:53:44,683 உன்னால் இன்னொருவரை கருத்தில்கொள்ள முடியுமா? 609 00:53:46,810 --> 00:53:48,687 இப்போது அதற்கு என்ன? 610 00:53:50,230 --> 00:53:51,732 யாரும் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 611 00:53:52,357 --> 00:53:53,859 ஆனால் அது சாத்தியம் என்றால்… 612 00:53:58,071 --> 00:53:59,531 யாராவது உன்னிடம்… 613 00:54:02,326 --> 00:54:04,286 உன் வீட்டை விட்டு வெளியேறி… 614 00:54:08,081 --> 00:54:09,708 புதிதாக வாழ்க்கையைத் தொடங்க கேட்டால்… 615 00:54:12,127 --> 00:54:13,378 உன்னால் முடியுமா? 616 00:54:21,595 --> 00:54:22,763 ஆனாலும்… 617 00:54:25,307 --> 00:54:26,850 உங்களுக்குப் புரிகிறதுதானே நான்… 618 00:54:26,934 --> 00:54:28,894 நீ வேறொருவரின் குழந்தையை சுமக்கிறாய். 619 00:54:29,478 --> 00:54:30,479 எனக்குப் புரிகிறது. 620 00:54:30,979 --> 00:54:32,523 நான் உன்னிடம் கேட்பது, 621 00:54:33,857 --> 00:54:35,234 ஒருவேளை… 622 00:54:37,861 --> 00:54:39,279 போதுமான காலத்துக்குப் பிறகு… 623 00:54:42,950 --> 00:54:45,452 உன்னால் வேறொருவரை கவனித்துக் கொள்ள முடியுமா? 624 00:55:57,608 --> 00:55:59,610 வசனத் தமிழாக்கம் அருண்குமார்