1 00:00:06,006 --> 00:00:09,009 ஜப்பானிய வசனம் நீலத்திலும், கொரிய வசனம் மஞ்சளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது 2 00:00:09,343 --> 00:00:12,304 (கொரிய மொழியில்) அவனது பெயர் கோ ஹான்சு. 3 00:00:14,306 --> 00:00:18,560 அவன் கொலை குற்றம் செய்ததாகக் கூட சொல்கிறார்கள். 4 00:00:20,395 --> 00:00:26,944 ஜப்பானில் பெரும் சக்திவாய்ந்த ஒருவருக்காக அவன் இந்த வேலைகளை செய்கிறான். 5 00:00:27,903 --> 00:00:30,989 இப்படிப்பட்ட விஷயங்களைக் கேட்கும்போது அவன் இப்போது அவர்களில் ஒருவனாக 6 00:00:31,740 --> 00:00:33,992 இருப்பானோ என்று உனக்கு வியப்பாக உள்ளது தானே? 7 00:00:34,743 --> 00:00:37,246 அல்லது இன்னும் நம்மில் ஒருவன்தானா? 8 00:00:37,329 --> 00:00:42,042 அதைப் பற்றியெல்லாம் யாருக்குத் தெரியும். எனக்குத் தெரிந்ததெல்லாம் அவனது விலைகள் நியாயமானவை. 9 00:00:42,125 --> 00:00:46,296 அவன் தொந்தரவு செய்வதில்லை, அதோடு பொறுமையற்றவன். 10 00:00:47,214 --> 00:00:49,091 அவன் ஒரு சட்டையை ஒரு முறைக்கு மேல் 11 00:00:49,174 --> 00:00:52,010 அணிந்ததில்லை என்று அவனுக்காக சமைக்கும் பெண் கூறினாள். 12 00:00:52,094 --> 00:00:54,638 அவன் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடுவான். 13 00:00:54,721 --> 00:00:58,350 கற்பனை செய்ய முடிகிறதா? அவன் யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறான்? 14 00:00:58,433 --> 00:01:01,395 வாழ்க்கையும் உலகமும் ஒழுங்கமைக்கப்பட்ட விதம் குறித்து அவனுக்குத் தெரியும். 15 00:01:01,478 --> 00:01:05,482 இரண்டு முறை என் அப்பாவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கிறார். 16 00:01:05,566 --> 00:01:08,193 அவர்களுக்கு ஒருவரையொருவரை மிகவும் பிடிக்கும். 17 00:01:08,277 --> 00:01:11,780 ஆனால், ஜியுன், அவன் இங்கேயே தங்கிவிடுவான் என்று உன் அப்பா நினைத்தாரா? 18 00:01:11,864 --> 00:01:14,199 அல்லது ஒசாகாவிற்கு திரும்புவான் என்றா? 19 00:01:14,992 --> 00:01:17,953 ஒருவேளை இங்கு சொந்த வீடு இருப்பதால்… 20 00:01:19,079 --> 00:01:21,331 அவர் இங்கேயே தங்கலாம். 21 00:01:22,124 --> 00:01:23,458 இருப்பார் என்று தான் நினைக்கிறேன். 22 00:01:44,229 --> 00:01:47,733 -அமைதி! -ஆனால் அப்பா. ஒரு முழம். அதுதான் விதி. 23 00:01:49,860 --> 00:01:51,570 என்னுடைய முன்கையின் நீளம்! 24 00:01:56,116 --> 00:01:58,911 கைக்குழந்தையின் கையால் எனது 25 00:01:58,994 --> 00:02:00,787 விலையை நிர்ணயிப்பேன் என்று நினைக்கிறாயா? 26 00:02:01,413 --> 00:02:02,956 சார், தயவுசெய்து. 27 00:02:03,040 --> 00:02:04,917 இதில் தலையிடாமல் இரு. 28 00:02:07,711 --> 00:02:10,005 உன் மகன் இந்த அவமதிப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். 29 00:02:12,633 --> 00:02:14,968 உனக்கு வேண்டுமென்றால், உன் முன்கைகளை நான் நீட்டிக் காட்டுகிறேன். 30 00:02:25,521 --> 00:02:26,730 நான் இதை வாங்கிக்கொள்கிறேன். 31 00:02:26,813 --> 00:02:28,190 20 மீன்களுக்கு ஐந்து யென்கள். 32 00:02:28,273 --> 00:02:30,192 என் செய்நன்றி. 33 00:02:31,318 --> 00:02:32,319 அவற்றை வீசிவிடு. 34 00:02:38,408 --> 00:02:40,035 திரு. கோ ஹான்சு! 35 00:04:04,912 --> 00:04:06,663 மின் ஜின் லீ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 36 00:04:27,476 --> 00:04:30,062 டோக்கியோ 37 00:04:43,700 --> 00:04:46,995 (ஜப்பானிய மொழியில்) எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? 38 00:04:47,663 --> 00:04:51,542 மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோரை இப்போதுதான் பார்த்தேன். 39 00:04:51,625 --> 00:04:56,797 கல்யாண ஜோடிகளுக்கு எங்கிருந்து அழகான தோற்றம் வந்ததென்று இப்போது தெரிகிறது. 40 00:04:56,880 --> 00:04:58,841 நான் தோற்பதை எல்லோரும் பார்க்க விரும்புகிறார்கள். 41 00:04:58,924 --> 00:05:03,470 அது உண்மையில்லை. எப்போதும் எல்லோரையும் தவறாகவே நினைக்காதே. 42 00:05:03,554 --> 00:05:04,555 முயற்சிக்கிறேன். 43 00:05:04,638 --> 00:05:07,641 நீ அமெரிக்காவில் இருந்ததால் இந்த நாடு பெரிதும் மாறிவிட்டது. 44 00:05:07,724 --> 00:05:11,311 பலர் மிக விரைவாக நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். 45 00:05:11,395 --> 00:05:13,647 சில வருடங்களுக்கு முன் பெயர் தெரியாமல் இருந்தவர்கள். 46 00:05:13,730 --> 00:05:18,068 ஒருவேளை இந்த நாட்டிற்கு அவர்கள் தேவைப்படலாம். 47 00:05:18,151 --> 00:05:19,778 பச்சிங்கோ மனிதரின் மகன் போலவா? 48 00:05:21,446 --> 00:05:24,199 நகைச்சுவை செய்தேன்! நீயும் நானும் நீண்ட கால நண்பர்கள். 49 00:05:26,159 --> 00:05:29,496 நாம் சிறுவர்களாக இருந்தபோது நீ சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. 50 00:05:29,580 --> 00:05:31,164 என்ன அது? 51 00:05:32,207 --> 00:05:34,626 கொரியர்கள் நாய்களால் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும் 52 00:05:34,710 --> 00:05:36,753 என்று உன் தந்தை சொன்னதாக நீ சொன்னாய். 53 00:05:36,837 --> 00:05:39,173 உன்னைப் போல சாப்பிடுவதற்கு பதிலாக நாங்கள் ஏன் நாய்களைப் போல 54 00:05:39,256 --> 00:05:41,717 பாத்திரங்களுக்குள் எங்கள் தலையை விட வேண்டும்? 55 00:05:41,800 --> 00:05:44,928 -நான் அவ்வளவு மோசமானதை சொன்னேனா? -ஆம். 56 00:05:45,929 --> 00:05:47,431 நாம் அப்போது குழந்தைகளாக இருந்தோம். 57 00:05:47,514 --> 00:05:49,391 நான் என் அப்பாவை தவறாக புரிந்துகொண்டேன். 58 00:05:51,226 --> 00:05:54,563 எப்படியோ, திரு. அபேவுடன் கோல்டனை இணைந்ததில் உங்களின் புத்திசாலித்தனம் தெரிகிறது. 59 00:05:54,646 --> 00:05:57,399 அவர் இங்கே சிறந்த கட்டிடத்துறையாளர். அவருக்கு செல்வாக்கு இருக்கிறது. 60 00:05:57,482 --> 00:06:00,319 அவரது மகளின் திருமணத்தில் நிதியமைச்சகத்தின் 61 00:06:00,402 --> 00:06:02,571 பாதிப் பேர் கலந்துகொள்கிறார்கள். அது உதவும். 62 00:06:02,654 --> 00:06:04,865 உண்மை, இங்கே நம்மில் பலர் இருக்கிறோம். 63 00:06:04,948 --> 00:06:09,453 ஆனால் கவலைப்படாதே. இது போன்ற ஒரு டை மூலம், நீ சரியாக கலந்துவிடுவாய். 64 00:06:10,037 --> 00:06:11,038 நான் யூகிக்கிறேன். 65 00:06:12,414 --> 00:06:13,415 அர்மானி. 66 00:06:15,667 --> 00:06:17,669 ஹெர்மிஸ். பார், நீ வசதியானவன் தான். 67 00:06:17,753 --> 00:06:21,173 திரு. அபே உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். 68 00:06:23,759 --> 00:06:30,057 நடனம், மேலும் நடனம் 69 00:06:49,368 --> 00:06:52,788 ஒன்று, இரண்டு, மூன்று, சிரியுங்கள்! 70 00:06:53,914 --> 00:06:54,998 நெருக்கமாக, தயவுசெய்து. 71 00:07:12,266 --> 00:07:14,935 நீ வெளியேறியபோது சிறுவனாக இருந்தாய், அல்லவா? 72 00:07:16,937 --> 00:07:17,938 எனக்கு 14 வயது. 73 00:07:19,189 --> 00:07:21,984 நீயும் அமெரிக்காவில் இருந்ததாக கேள்விப்பட்டேன். 74 00:07:22,651 --> 00:07:23,944 ஆம், கேம்பிரிட்ஜில். 75 00:07:24,027 --> 00:07:26,029 ஹார்வர்ட். 76 00:07:26,113 --> 00:07:27,114 தொழில் நிர்வாகப் பள்ளி. 77 00:07:27,197 --> 00:07:29,867 அதோடு ஹார்வர்ட் தொழில் நிர்வாகப் பள்ளி எப்படி இருந்தது? 78 00:07:30,909 --> 00:07:33,871 அமெரிக்கர்களின் மனநிலையில் அது ஒரு நல்ல கல்வியாக இருந்தது. 79 00:07:33,954 --> 00:07:35,581 எந்த வகையில்? 80 00:07:35,664 --> 00:07:37,124 அமெரிக்கர்களுக்கு விளையாட்டுகளை பிடிக்கும். 81 00:07:37,207 --> 00:07:39,293 எல்லாமே ஒன்றாக மாறிவிடும். 82 00:07:39,376 --> 00:07:41,962 எனவே நான் யாரை சந்திக்கும் போதும், பெரும்பாலும் ஆண்களை, 83 00:07:42,045 --> 00:07:44,298 "நான் எந்த ஆசிய நாட்டை சேர்ந்தவள்" என்பதை 84 00:07:44,381 --> 00:07:45,382 யூகிக்கும் விளையாட்டை விளையாட விரும்புவார்கள்? 85 00:07:45,465 --> 00:07:48,010 நல்ல விளையாட்டு. எப்பொழுதும் சீனர்கள் தான் முதலில் செய்வார்கள். 86 00:07:49,511 --> 00:07:51,513 நல்லவேளையாக ஜப்பானியர்கள் இரண்டாவதாக வருவார்கள். 87 00:07:51,597 --> 00:07:53,849 குறைந்த பட்சம் இரண்டு நாடுகளை கடந்து செல்ல வேண்டும். 88 00:07:53,932 --> 00:07:56,268 கொரியா முதல் நான்கிற்குள் வந்தால் நான் அதிர்ஷ்டசாலி. 89 00:07:56,894 --> 00:07:59,730 நல்ல மனநிலையில் இல்லையென்றால், ஜப்பான் என்றதுமே தலையசைத்துவிடுவேன். 90 00:07:59,813 --> 00:08:02,065 இது முற்றிலும் துல்லியமற்றது கிடையாது, இல்லையா? 91 00:08:02,816 --> 00:08:05,068 இல்லை. துல்லையமற்றது இல்லை. 92 00:08:06,236 --> 00:08:08,530 -திரு. டாம்! -திரு. அபே! 93 00:08:13,493 --> 00:08:19,374 உங்கள் மருமகன் நன்றாக சம்பாதிப்பவராக இருக்கிறார். நீங்கள் அதிர்ஷ்டசாலி! 94 00:08:19,458 --> 00:08:22,920 என் மகளின் பொருட்டு, நான் நம்புகிறேன். 95 00:08:23,003 --> 00:08:26,173 அணியின் புதிய உறுப்பினரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். 96 00:08:26,715 --> 00:08:29,676 இது திரு. பேக், நம் நியூ யார்க் அலுவலகத்திலிருந்து. 97 00:08:29,760 --> 00:08:31,303 என்னை அழைத்ததற்கு நன்றி. இது எனக்கு கெளரவம். 98 00:08:32,929 --> 00:08:35,307 உங்கள் இரத்த வகை என்ன? 99 00:08:39,311 --> 00:08:40,354 என்னுடையது O வகை. 100 00:08:42,231 --> 00:08:44,691 சரி. அப்படியென்றால் நம்பிக்கை மிக்கவர். 101 00:08:47,819 --> 00:08:51,073 இந்த உலகில், உயிர்வாழ்வதற்கான உள்ளுணர்வு. 102 00:08:51,698 --> 00:08:53,367 அது எப்படி உதவுகிறது என்று பார்ப்போம். 103 00:08:53,450 --> 00:08:56,703 விருந்தை அனுபவியுங்கள். 104 00:09:08,382 --> 00:09:11,510 ஹேய். எதைப் பற்றி பேசுகிறார்கள்? 105 00:09:14,221 --> 00:09:16,723 என் விசுவாசம் குறித்து அவர் கவலைப்படுகிறார் என்று நினைக்கிறேன். 106 00:09:17,224 --> 00:09:20,269 சரி. கொரியா மற்றும் ஜப்பான் இடையேயான வர்த்தக மற்றும் அரசியல் தகராறு. 107 00:09:21,979 --> 00:09:24,481 மக்களால் ஏன் அதைக் கடக்க முடியவில்லை, தெரியுமா? 108 00:09:24,565 --> 00:09:26,650 அது இறந்தகாலம். முடிந்துபோனது. 109 00:09:28,235 --> 00:09:31,238 என்னைப் பற்றி திரு. அபே கவலைப்பட தேவையில்லை என நீங்கள் அவருக்கு நம்பிக்கை அளிக்கலாம். 110 00:09:31,989 --> 00:09:33,657 என் விஸ்வாசம் ஷிஃப்லிஸ் உடன் இருக்கிறது. 111 00:09:33,740 --> 00:09:35,284 ஏனென்றால் அவர்கள்தான் சம்பளம் தருகிறார்கள். 112 00:09:39,037 --> 00:09:41,540 ஒசாகா 113 00:09:53,677 --> 00:09:55,095 கியுங்கீ, எழுந்திரு. 114 00:09:58,098 --> 00:10:01,059 அண்ணி, இரவு உணவுக்கான நேரம். 115 00:10:02,394 --> 00:10:03,812 சாலமன் எங்கே? 116 00:10:03,896 --> 00:10:07,900 டோக்கியோவில், நினைவிருக்கிறதா? பெரிய ஒப்பந்தத்தில் வேலை செய்கிறான். 117 00:10:07,983 --> 00:10:11,653 சுன்ஜா. நமக்கு எப்போதும் தெரியும், இல்லையா? 118 00:10:11,737 --> 00:10:14,698 அவன்தான் அதை செய்து முடிக்கக் கூடியவன். 119 00:10:15,616 --> 00:10:18,452 அவன் நல்ல பையன். 120 00:10:19,536 --> 00:10:20,746 இப்போது நாம் சாப்பிடலாம். 121 00:10:22,581 --> 00:10:24,499 என்னை கவனித்துக்கொள்வதில் சலிப்படைய வில்லையா? 122 00:10:25,334 --> 00:10:27,085 அப்படியெல்லாம் எதுவும் இல்லை. 123 00:10:32,549 --> 00:10:35,677 உனக்கு பிடித்த உணவு செய்திருக்கிறேன். 124 00:10:37,846 --> 00:10:40,432 நீ வெறும் வயிற்றில் மருத்து எடுத்துக்கொள்ளக் கூடாது. 125 00:10:43,477 --> 00:10:45,312 சாப்பிடு. இத்துடன் போதும். 126 00:10:45,395 --> 00:10:47,022 சுன்ஜா, 127 00:10:47,814 --> 00:10:49,983 எனக்கு மருந்து வேண்டாம். 128 00:10:50,067 --> 00:10:51,985 என்ன பேச்சு இது? 129 00:10:52,069 --> 00:10:54,613 டாக்டர் சொன்னதை கேட்டாயே. 130 00:10:54,696 --> 00:10:56,323 நீ நோயை எதிர்த்து போராட வேண்டும். 131 00:10:56,406 --> 00:11:00,035 சுன்ஜா, நாம் நீண்ட காலமாக போராடியது போதாதா? 132 00:11:00,118 --> 00:11:02,162 நீ முட்டாள்தனமாக பேசுகிறாய். 133 00:11:02,746 --> 00:11:04,540 இது எப்படி நடந்தது? 134 00:11:05,666 --> 00:11:09,920 எப்படி இவ்வளவு சீக்கிரம் காலம் போனது? 135 00:11:10,003 --> 00:11:12,381 நீ இன்னும் பல ஆண்டுகள் வாழ்வாய். 136 00:11:12,464 --> 00:11:14,299 அப்படிச் சொல்லாதே. 137 00:11:15,843 --> 00:11:18,220 நீ என்ன நடந்தாலும் நேர்மையாகவே பேசுவாய். 138 00:11:19,137 --> 00:11:22,474 எவ்வளவு வேதனையாக இருந்தாலும் நீ உண்மையைச் சொல்வாய். 139 00:11:28,313 --> 00:11:31,400 இப்போது மீண்டும் அந்த முகங்களைப் பார்க்கிறேன், 140 00:11:31,483 --> 00:11:34,069 என் கனவுகளில். 141 00:11:34,570 --> 00:11:38,156 நாம் மறக்க முயற்சித்த எல்லா முகங்களையும். 142 00:11:38,740 --> 00:11:41,577 ஒருவேளை நான் மரணத்தின் அருகில் இருப்பதால் இருக்கலாம், 143 00:11:41,660 --> 00:11:46,623 ஆனால் நான் அவர்கள் எல்லோரையும் நினைவில் கொள்ள விரும்புகிறேன். 144 00:11:47,457 --> 00:11:49,626 அவர்களின் பெயர்களை, 145 00:11:49,710 --> 00:11:51,336 அவர்களின் முகங்களை… 146 00:11:53,422 --> 00:11:59,136 நான் கடைசியாக ஒரு முறை திரும்பிச் செல்ல முடிந்தால். 147 00:12:06,602 --> 00:12:08,312 ஆனால், சுன்ஜா, 148 00:12:08,395 --> 00:12:10,189 உண்மையைச் சொல். 149 00:12:11,273 --> 00:12:12,357 அந்த மனிதர், 150 00:12:13,275 --> 00:12:16,528 அவரைப் பற்றி நீ நிஜமாகவே யோசிக்கவில்லையா? 151 00:12:18,572 --> 00:12:24,077 அல்லது நீ வித்தியாசமாக தேர்வு செய்திருந்தால் உன் வாழ்க்கை 152 00:12:24,161 --> 00:12:27,080 எப்படி இருந்திருக்கும் என்று வியந்ததில்லையா? 153 00:12:45,599 --> 00:12:46,975 நீ ஒரு முட்டாள், உனக்குத் தெரியுமா? 154 00:12:48,560 --> 00:12:50,604 என்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கடலில் தள்ள முடியும். 155 00:12:50,687 --> 00:12:52,397 சார், இவன் எந்த தவறும் செய்யவில்லை. 156 00:12:52,481 --> 00:12:54,024 இவன் எனக்கு இதை விற்கவில்லை. 157 00:12:55,901 --> 00:12:57,236 அதை நானே என் கண்களால் பார்த்தேன். 158 00:12:57,319 --> 00:12:59,738 என்னிடம் கூடுதல் பழங்கள் இருந்தன. அதை பண்டம் மாற்றிக்கொண்டோம். 159 00:13:00,322 --> 00:13:02,616 நான் இவளது பணத்தை வாங்கவில்லை. 160 00:13:02,699 --> 00:13:05,160 இவனைக் குறை சொல்லாதீர்கள். இவன் எந்த தவறும் செய்யவில்லை. 161 00:13:06,745 --> 00:13:07,871 சொல், 162 00:13:09,498 --> 00:13:11,291 நாங்கள் ஏன் சிறிய மீன்களை விற்பதில்லை? 163 00:13:14,211 --> 00:13:15,921 முட்டையிடுவதற்கு முன்பே நாம் அவற்றைப் பிடித்தால், 164 00:13:16,922 --> 00:13:18,173 நமக்கு வருமானம் குறைந்துவிடும். 165 00:13:18,257 --> 00:13:19,967 நம்மிடம் ஒருபோதும் போதுமான மீன்கள் இருக்காது, 166 00:13:20,050 --> 00:13:22,010 அதோடு மீதமுள்ளவற்றுக்காக நமக்குள் சண்டை வரும். 167 00:13:22,094 --> 00:13:25,514 ஆனால் நாம் ஏற்கனவே அதைச் செய்கிறோம் தானே? 168 00:13:34,064 --> 00:13:35,107 போ. 169 00:14:14,479 --> 00:14:16,899 சுன்ஜா, ஏன் இவ்வளவு தாமதம்? 170 00:14:16,982 --> 00:14:18,233 நாங்கள் கவலைப்பட்டோம். 171 00:14:18,317 --> 00:14:20,736 ஏன்? ஏதாவது நடந்ததா, டோங்கி? 172 00:14:21,445 --> 00:14:22,446 இல்லை. 173 00:14:22,529 --> 00:14:23,864 திருமதி. கிம். 174 00:14:24,907 --> 00:14:26,575 இந்த முறை அது உண்மை தான். 175 00:14:26,658 --> 00:14:28,660 திரு. ரீ அதை நேரில் பார்த்திருக்கிறார். 176 00:14:28,744 --> 00:14:30,537 நீங்கள் புரளி பேசியது போதுமா? 177 00:14:30,621 --> 00:14:34,124 இப்போது நீங்கள் கொஞ்சம் வேலை செய்து முடிக்கலாம். 178 00:14:34,208 --> 00:14:35,959 நான் வேண்டுமென்றே சோம்பலாக இல்லை. 179 00:14:42,674 --> 00:14:44,801 திருமதி. கிம், நகரத்தில் இருக்கும் ஜப்பானியக் 180 00:14:44,885 --> 00:14:47,012 குழந்தைகள் இன்னும் வெள்ளை ஆடை அணியத் 181 00:14:47,095 --> 00:14:49,181 துணியும் கொரியப் பெண்கள் மீது சேற்றையும் மலத்தையும் 182 00:14:49,264 --> 00:14:52,518 வீசிய கதைகளை சொல்லி அவள் மனதை கெடுத்துவிட்டார். 183 00:14:52,601 --> 00:14:54,436 நான் அப்படி எதுவும் பார்க்கவில்லை. 184 00:14:54,520 --> 00:14:56,813 அவள் எப்படி புரளி பேசுவாள் என்று உனக்குத் தெரியும். 185 00:15:00,275 --> 00:15:05,322 ஆனால்… சுன்ஜா, பாதுகாப்பிற்காக, நீ தனியாக செல்வதை நான் விரும்பவில்லை. 186 00:15:05,906 --> 00:15:08,408 ஒருவேளை டோங்கி அல்லது போக்கியை உடன் அழைத்து செல்கிறாயா? 187 00:15:08,492 --> 00:15:11,036 என்ன சொல்கிறீர்கள். 188 00:15:11,119 --> 00:15:13,330 என்னுடைய ஒன்பதாவது வயது முதல் தனியாகத்தான் செல்கிறேன். 189 00:15:13,413 --> 00:15:16,875 -இருந்தாலும்… -இங்கே நமக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. 190 00:15:16,959 --> 00:15:19,753 உங்களுக்கு உதவத்தான் போக்கியையும் டோங்கியையும் வேலைக்கு வைத்தீர்கள். 191 00:15:19,837 --> 00:15:24,800 திருமதி. கிம் கற்பனை கதைகளை உருவாக்க விரும்பும் ஒரு முட்டாள். 192 00:15:24,883 --> 00:15:27,678 நீ எப்படி பேசுகிறாய் பார். இதனால் உனக்கு சிக்கல் வரப்போகிறது. 193 00:15:31,223 --> 00:15:33,267 திருமதி. கிம் சொன்னபடி, 194 00:15:33,350 --> 00:15:37,062 புதிய மாவட்ட மீன் தரகர் மிகவும் அழகானவராம். 195 00:15:37,688 --> 00:15:39,565 சுன்ஜா, நீ அவரை பார்த்திருக்கிறாயா? 196 00:15:40,774 --> 00:15:43,569 என்ன வம்பு இது! அவர் அவ்வளவு கவனம் பெரும் அளவுக்கு இல்லை. 197 00:16:15,767 --> 00:16:18,437 கடந்த மூன்று ஆண்டுகளாக என்னை முள்ளாக குத்துவது. 198 00:16:18,520 --> 00:16:21,523 கட்டுமானக் குழு ஏற்கனவே அவர்களைச் சுற்றியுள்ள நிலத்தைத் தோண்ட தொடங்கிவிட்டனர். 199 00:16:21,607 --> 00:16:23,192 திரு. அபே என்னை தீவிரமாக கண்காணிக்கிறார். 200 00:16:23,275 --> 00:16:25,569 அவர் எப்போது விற்கப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ள 201 00:16:25,652 --> 00:16:27,654 என்னை மேலதிகாரிகள் தினமும் அழைப்பதை சொல்ல வேண்டாம். 202 00:16:27,738 --> 00:16:30,657 நாங்கள் சந்தை மதிப்பை விட அதிகமாக மூன்று சலுகைகளை செய்துள்ளோம். 203 00:16:30,741 --> 00:16:33,744 எங்களின் முதல் சலுகை 295 மில்லியன் யென்… 204 00:16:33,827 --> 00:16:35,829 நன்றி, விரிவாக படித்தேன். முழு விவரமும் தெரியும். 205 00:16:35,913 --> 00:16:37,748 -ஹென் குங்கே. -ஹான் கும்ஜா. 206 00:16:37,831 --> 00:16:41,418 அவர் 1929 இல் கொரியாவிலிருந்து ஜப்பானுக்கு குடிபெயர்ந்தார். 207 00:16:41,502 --> 00:16:44,296 அவரும் அவருடைய குடும்பமும் போருக்குப் பிறகு டோக்கியோவில் குடியேறினர். 208 00:16:44,379 --> 00:16:47,132 குடும்பத்தின் பிழைப்பாதாரமாக இருந்தார், சலவை தொழிலை நடந்திவந்தார். 209 00:16:47,216 --> 00:16:51,011 1955 இல், அந்த குடும்பம் 4,000 யென்களுக்கு நிலத்தை வாங்கியது. 210 00:16:51,094 --> 00:16:53,639 அந்த மதிப்பிற்கு இந்த நாட்களில் நல்ல சாப்பாடு கூட கிடைக்காது. 211 00:16:53,722 --> 00:16:56,141 இது பணம் பற்றியது அல்ல. அவருக்கு. 212 00:16:56,225 --> 00:16:59,478 கண்டிப்பாக இது பணம் பற்றியது தான் நவோமி. இது எப்போதும்… 213 00:16:59,561 --> 00:17:00,562 நீ கொஞ்சம் விளக்குகிறாயா? 214 00:17:00,646 --> 00:17:03,941 நீங்கள் எல்லாம் முழுமையாக அறிந்திருப்பதாலும், என் உதவி தேவையில்லை என்பதாலும், 215 00:17:04,566 --> 00:17:05,692 நான் என் வேலையை பார்க்கிறேன். 216 00:17:14,159 --> 00:17:15,327 இது சிக்கலானது. 217 00:17:15,410 --> 00:17:16,537 -தெரியும். -ஆம். 218 00:17:16,619 --> 00:17:19,957 ஒப்பந்தத்தில் கவனம் செலுத்து. முடித்து காட்டு. 219 00:17:20,665 --> 00:17:21,916 முழுமூச்சாக இறங்கியிருக்கிறேன். 220 00:17:22,000 --> 00:17:26,880 பேரரசரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள 200,000 பேர் 221 00:17:26,964 --> 00:17:30,926 மோசமான் வானிலையை துணிச்சலுடன் எதிர்கொண்டனர். 222 00:17:33,011 --> 00:17:34,388 இளைஞர்களும் முதியவர்களும் அஞ்சலி செலுத்தி… 223 00:17:34,471 --> 00:17:36,515 என்னை ஒருமுறை திட்டினீர்கள். 224 00:17:36,598 --> 00:17:38,433 -ஆய்வாளராக எனது முதல் ஆண்டில். -அது நியாமானதா? 225 00:17:38,517 --> 00:17:39,810 …பேரரசருக்கு விடைகொடுத்தனர். 226 00:17:39,893 --> 00:17:42,354 -ஆம், அது எனக்கு தேவைதான். -நீ அதை ஒப்புக்கொண்டது நல்லது. 227 00:17:42,437 --> 00:17:44,857 அப்போது என்னுடன் பணியாற்றிவர்களுக்கு நீங்கள் அபிமானத்துக்குரியவர். 228 00:17:46,358 --> 00:17:48,026 அது பழைய கதை. 229 00:17:48,110 --> 00:17:49,278 அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. 230 00:17:49,361 --> 00:17:50,696 சரி, பரவாயில்லை. 231 00:17:51,363 --> 00:17:52,531 பேச்சு எப்படி போகுமென்று தெரியும். 232 00:17:52,614 --> 00:17:55,450 மிகப்பெரிய ஒப்பந்தத்தை செய்தது யார்? மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது யார்? 233 00:17:55,534 --> 00:17:58,161 மேலதிகாரியாக பதவி உயர்வு பெற்றது யார்? 234 00:17:58,245 --> 00:18:02,165 ஒப்புக்கொள்கிறேன், நானே அப்படி அதிகம் பேசியிருக்கிறேன். 235 00:18:02,249 --> 00:18:03,750 அது முடிந்துபோன விஷயம். 236 00:18:10,340 --> 00:18:14,469 இந்த நிலைக்கு எப்படி வந்தேன் என தெரிய வேண்டுமா? என்ன நடந்தது என்று? 237 00:18:14,970 --> 00:18:17,097 ஆம். நான் ஆவலாக இருக்கிறேன். 238 00:18:20,475 --> 00:18:21,894 எனக்கு திருமணமானது. 239 00:18:22,811 --> 00:18:24,229 இரண்டு குழந்தைகள் பிறந்தனர். 240 00:18:24,313 --> 00:18:26,481 நகரத்திலும், கிராமத்திலும் ஒரு இடத்தை வாங்கியிருக்கிறேன். 241 00:18:28,066 --> 00:18:30,736 என் சம்பளத் தொகையை பார்த்து உணரும் முன்பே 242 00:18:30,819 --> 00:18:32,821 இது ஒன்றும் விளையாட்டல்ல என்பதை உணர்ந்தேன். 243 00:18:34,364 --> 00:18:35,699 உயிர் பிழைப்பது போல் உணர்ந்தேன். 244 00:18:40,037 --> 00:18:41,246 எனவே… 245 00:18:42,831 --> 00:18:44,166 சில தவறான முடிவுகளை எடுத்ததால்… 246 00:18:46,043 --> 00:18:47,211 பணத்தை இழக்க தொடங்கினேன். 247 00:18:47,294 --> 00:18:49,129 பதற்றமாகி, மேலும் சில தவறான முடிவுகளை எடுத்தேன். 248 00:18:49,213 --> 00:18:50,506 அதோடு இவையனைத்தும் நடக்கும்போது, 249 00:18:50,589 --> 00:18:53,300 பிரின்ஸ்டனில் பட்டம் பெற்ற என் மனைவி, வாழ்வில் ஒரு நாள் கூட வேலை செய்ததில்லை, 250 00:18:53,383 --> 00:18:56,053 நான் வீட்டில் இருப்பதில்லை என்று புகார் செய்ய தொடங்கினாள். 251 00:18:56,136 --> 00:18:58,555 நான் அங்கிருந்தாலும், என் மனம் இருக்காது. 252 00:19:07,814 --> 00:19:09,399 எனவே ஒருநாள் காலையில், 253 00:19:09,483 --> 00:19:12,694 49 நிமிடங்கள் பயணித்து வேலைக்கு வர என் காரில் ஏறினேன், 254 00:19:12,778 --> 00:19:14,196 கண்களில் சொட்டு மருந்து போட்டுக்கொண்டு, 255 00:19:14,279 --> 00:19:16,949 அவள் என்னை விவாகரத்து செய்வதாக செய்தி அனுப்பினாள். 256 00:19:19,701 --> 00:19:21,203 நான் வீட்டிற்கு வந்ததும் பேசலாம் என்றேன், 257 00:19:21,286 --> 00:19:23,330 பேசுவதற்கு எதுவுமில்லை என்று சொல்லிவிட்டாள். 258 00:19:25,040 --> 00:19:28,418 பத்து வருட திருமண வாழ்க்கையை எப்படி உன்னால் நிராகரிக்க முடிகிறது என்ற கேட்டேன். 259 00:19:28,502 --> 00:19:30,712 அவளது தலைமுடி கருப்பு நிறத்திலிருந்து பொன்னிறமாக மாறியதை 260 00:19:30,796 --> 00:19:33,841 நான் ஏன் கவனிக்கவில்லை என்று கேட்டாள். 261 00:19:35,008 --> 00:19:38,470 ஆம், என் திருமண வாழ்க்கை பாழாகிவிட்டது. 262 00:19:38,554 --> 00:19:41,431 பிறகு என் தொழில் வாழ்க்கை. எனவே, நான் இங்கிருக்கிறேன். 263 00:19:51,024 --> 00:19:52,985 நீ என்ன நினைக்கிறாய், நாயகனா வில்லனா? 264 00:19:53,485 --> 00:19:55,362 இறுதியில் ஜப்பான் அமெரிக்கனான என்னை 265 00:19:55,445 --> 00:19:57,072 இங்கே வரவழைத்துவிட்டதா இல்லையா? 266 00:19:57,155 --> 00:20:00,033 உண்மையை சொன்னால், இந்த கேள்வியில் எனக்கு ஆர்வம் இல்லை. 267 00:20:00,576 --> 00:20:03,912 நீ என்னோடு விளையாடுகிறாயா? நாம் பேசுவது உன் சம்பளத்தைப் பற்றி சாலமன். 268 00:20:05,205 --> 00:20:07,207 எனவே ஜப்பானியர்கள் டாலர்களை வாங்குகிறார்கள், 269 00:20:07,291 --> 00:20:09,334 அமெரிக்கர்கள் டச்சு மார்க்குகளை, 270 00:20:09,418 --> 00:20:12,045 ஜெர்மனியர்கள் ஸ்டெர்லிங்கை பதுக்கி வைத்திருக்கிறார்கள், அப்படியே தொடரும். 271 00:20:12,129 --> 00:20:14,673 தனிப்பட்ட பண அமைப்பு பொருத்தமற்றதாக மாறும் அளவுக்கு 272 00:20:14,756 --> 00:20:17,342 உலகம் முழுவதும் பணம் வேகமாக நகர்கிறது. 273 00:20:17,426 --> 00:20:20,679 -இதை நிதி பிரிவில் சொல். -நாடுகளே பொருத்தமற்றதாகிவிடும். 274 00:20:21,180 --> 00:20:22,848 நீ என்ன பேசுகிறாய்? 275 00:20:22,931 --> 00:20:24,433 முக்கியமானது என்னவென்றால், உண்மையில், 276 00:20:24,516 --> 00:20:27,477 இறுதியில் தவிர்க்க முடியாத இழப்பு எப்படியோ நடக்காமல் இருப்பதுதான். 277 00:20:27,561 --> 00:20:29,146 அதற்காகத்தான் நீ இங்கிருக்கிறாயா? 278 00:20:29,980 --> 00:20:31,106 தவிர்க்க முடியாததை தடுக்க? 279 00:20:51,376 --> 00:20:53,378 இயந்திரங்களை வைத்து இதைச் செய்கிறீர்களா? 280 00:20:54,838 --> 00:20:56,131 நான் இல்லை. இனி கிடையாது. 281 00:20:56,798 --> 00:20:59,218 இரவில் பணியாற்றும் நபர் ஒருவன் இருக்கிறான். 282 00:21:00,219 --> 00:21:02,262 ஆனால் இது சரியா? 283 00:21:03,722 --> 00:21:08,894 திரு. கோட்டோ உண்மையை சொன்னபோது இதே விஷயத்தை நானும் கேட்டேன். 284 00:21:08,977 --> 00:21:10,812 நானும் உன் வயதை கடந்து வந்தவன்தான். 285 00:21:12,272 --> 00:21:13,357 ஆணிகளை சரிசெய்வேன். 286 00:21:14,024 --> 00:21:15,943 எல்லோரும் இதைச் செய்கிறார்கள். 287 00:21:16,777 --> 00:21:18,946 நீ மட்டும் முட்டாளாக இருக்க முடியாது. 288 00:21:20,781 --> 00:21:24,952 பெரும்பாலானோர் கைப்பிடியை சரியாக திருப்பினால், வென்றுவிடலாம் என நினைக்கிறார்கள். 289 00:21:25,744 --> 00:21:29,289 ஆனால் அதன் விளைவுகளை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. நிஜமாக முடியாது. 290 00:21:29,373 --> 00:21:30,916 நம்மாலும் முடியாது. 291 00:21:31,834 --> 00:21:36,129 ஆணிகளை சரிசெய்வது பிரச்சினைகளை சரி செய்யாது. நாம் அதைச் செய்வதில்லை. 292 00:21:36,213 --> 00:21:38,757 நாம் அவர்களை ஊக்குவிப்போம். அவ்வளவுதான் இதெல்லாம். 293 00:21:39,716 --> 00:21:44,054 ஆனால் "பேராசை கூடாது," அதைத்தான் கோட்டோ அடிக்கடி சொல்வார். 294 00:21:45,722 --> 00:21:48,767 அவர்கள் தோற்கும்போது, அவர்களின் துயரத்தை உணர வேண்டும். 295 00:21:49,893 --> 00:21:52,521 அவர்கள் வெல்லும் போது, அவர்களின் சந்தோஷத்தை உணர வேண்டும். 296 00:21:55,691 --> 00:21:58,235 நீ எப்படி செய்திருக்கிறாய் என்று பார்ப்போம். 297 00:22:02,239 --> 00:22:03,448 வரவேற்கிறேன்! 298 00:22:05,284 --> 00:22:06,785 நியூ கிராண்ட் வேகாஸ் 299 00:22:42,821 --> 00:22:45,490 திரு. பாண்டோ, என்னிடம் கடன் ஆவணங்கள் இருக்கின்றன. 300 00:22:46,491 --> 00:22:47,951 நான் அதைப் பார்க்க வேண்டும். 301 00:22:53,624 --> 00:22:56,418 தயவுசெய்து எல்லா தொகையையும் சரிபாருங்கள். 302 00:22:57,419 --> 00:22:59,213 நான்கு பில்லியன் யென். எல்லாம் சரியாக இருக்கிறது. 303 00:23:02,799 --> 00:23:05,385 இதை உடனே வங்கிக்கு அனுப்பி வைக்கிறேன். 304 00:23:05,469 --> 00:23:08,222 கடன் பெறுவதில் ஏதாவது பிரச்சினைகளை எதிர்பார்க்கிறீர்களா? 305 00:23:08,305 --> 00:23:10,015 இல்லவே இல்லை. 306 00:23:10,098 --> 00:23:13,227 நீங்கள் ஒரு சில வாரங்களில் கட்ட ஆரம்பிக்கலாம். 307 00:23:13,810 --> 00:23:14,937 வாழ்த்துகள். 308 00:23:15,020 --> 00:23:16,396 மிக்க நன்றி. 309 00:24:20,169 --> 00:24:21,378 எனவே இது… 310 00:24:23,297 --> 00:24:25,465 இங்கே இருக்கும் இந்த சிறிய நிலம்… 311 00:24:29,178 --> 00:24:30,429 ஒரு பில்லியன். 312 00:24:34,266 --> 00:24:35,601 நீ என்னை கேலி செய்கிறாயா? 313 00:24:35,684 --> 00:24:38,562 அவர் மூன்று சலுகைகளை நிராகரித்தார். விளையாட்டு போதும். 314 00:24:38,645 --> 00:24:41,356 அவரால் மறுக்க முடியாத ஒரு வாய்ப்பைக் கொடு. 315 00:24:45,611 --> 00:24:48,447 ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, உனக்குள் இருக்கும் வணிகர் தயங்கியிருக்க மாட்டான். 316 00:24:51,158 --> 00:24:52,367 அது உண்மை என உனக்கே தெரியும். 317 00:24:55,412 --> 00:24:57,915 ஆம். சரி. சரி, ஆம். 318 00:25:01,835 --> 00:25:04,004 பொறு. நாம் அவரிடம் பேசப் போவதில்லையா? 319 00:25:04,087 --> 00:25:05,964 ஆம், ஆனால் உன்னோடு உள்ளே போகமாட்டேன். 320 00:25:14,348 --> 00:25:16,433 சுன்ஜா. சுன்ஜா! 321 00:25:17,935 --> 00:25:20,521 மேடம், இன்று என்னிடம் போதுமான பணம் இல்லை. 322 00:25:21,230 --> 00:25:23,732 இது அவரிடமிருந்து வந்த பரிசு. 323 00:25:23,815 --> 00:25:25,067 யாரிடமிருந்து? 324 00:25:25,150 --> 00:25:27,110 புதிய மாவட்ட மீன் தரகரிடம் இருந்து. 325 00:25:27,194 --> 00:25:31,156 எல்லா பெண்களையும் மயக்கியவர். 326 00:25:31,240 --> 00:25:32,407 எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. 327 00:25:32,491 --> 00:25:35,327 ஜப்பானைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் அதை இங்கே செய்ய… 328 00:25:35,410 --> 00:25:37,996 மிகவும் வெட்கமற்றது. 329 00:25:38,080 --> 00:25:42,125 -உன்னை போன்ற ஒரு நல்ல பெண்ணுக்கு. -மேடம், வார்த்தைகளில் கவனம் வையுங்கள். 330 00:25:42,209 --> 00:25:43,710 இந்த மனிதரை எனக்குத் தெரியாது. 331 00:25:43,794 --> 00:25:45,337 அவர் எனக்கு சொந்தமில்லை. 332 00:25:45,420 --> 00:25:47,798 இந்தப் பரிசை என்னால் ஏற்க முடியாது. 333 00:26:05,482 --> 00:26:08,819 டோக்கியோவில் விளையாட்டைப் பார்க்க எதையும் செய்வேன். 334 00:26:08,902 --> 00:26:11,488 பேப் ரூத் என்ற அற்புதமான வீரர் இருக்கிறார்! 335 00:26:11,572 --> 00:26:14,199 -இப்படி ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. -ஏனென்றால் உனக்கு எதுவும் தெரியாது. 336 00:26:14,908 --> 00:26:18,620 ஹேய். எங்கு செல்கிறாய்? அதிக சுமை இருப்பது போல தெரிகிறது. 337 00:26:19,955 --> 00:26:21,081 அழகாக இருக்கிறாய். 338 00:26:22,249 --> 00:26:23,584 நான் ஏன் உதவக்கூடாது? 339 00:26:26,211 --> 00:26:30,007 மன்னிக்கவும், எனக்குப் புரியவில்லை. நான் படகைப் பிடிக்க வேண்டும். 340 00:26:30,090 --> 00:26:32,968 அதைக் கேளுங்கள். அவர்களின் மொழி கூட வெறுப்பாக இருக்கிறது. 341 00:26:33,969 --> 00:26:35,304 அந்த பைகளில் என்ன இருக்கிறது? 342 00:26:35,387 --> 00:26:38,557 என் அம்மா கவலைப்படுவார். நான் போக வேண்டும். 343 00:26:38,640 --> 00:26:40,058 நிறுத்துங்கள்! 344 00:26:40,767 --> 00:26:43,437 இப்போது புரிகிறது. இதை உண்பதால்தான் நாற்றம் வீசுகிறது. 345 00:26:43,520 --> 00:26:45,397 நம் நாய்கள் கூட இதை சாப்பிடாது. 346 00:26:45,480 --> 00:26:46,607 யார் பந்தயம் கட்ட விரும்புகிறார்கள்? 347 00:26:46,690 --> 00:26:50,277 இவையா அல்லது அவளுடையதா? எது பெரியது? 348 00:26:50,360 --> 00:26:51,945 பார்த்துவிடலாம். 349 00:26:52,029 --> 00:26:53,488 என்ன செய்கிறீர்கள்? நிறுத்துங்கள்! 350 00:26:53,572 --> 00:26:55,157 -ஹேய், நீ என்ன செய்கிறாய்? -அவளை விடுங்கள்! 351 00:26:55,240 --> 00:26:56,950 நிறுத்துங்கள்! 352 00:27:04,917 --> 00:27:07,252 யாராவது உதவுங்கள்! உதவி! 353 00:27:08,420 --> 00:27:11,715 நிறுத்துங்கள்! தயவுசெய்து வேண்டாம்! 354 00:27:14,092 --> 00:27:15,427 என்னை விடுங்கள்! 355 00:27:21,558 --> 00:27:22,768 பொறுக்கிகளா. 356 00:27:23,268 --> 00:27:24,394 நீ சாக வேண்டுமா? 357 00:27:25,312 --> 00:27:27,064 இருவரும் இங்கே இறக்க நேரிட்டால், 358 00:27:27,814 --> 00:27:30,067 உங்களுக்காக யாரும் வருத்தப்பட மாட்டார்கள். 359 00:27:32,486 --> 00:27:34,321 சீக்கிரம். மன்னிப்பு கேளுங்கள். 360 00:27:34,404 --> 00:27:36,031 என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியும். 361 00:27:40,577 --> 00:27:42,204 தலையைக் குனி. 362 00:27:43,622 --> 00:27:45,082 தயவுசெய்து எங்களை மன்னியுங்கள். 363 00:27:47,918 --> 00:27:49,461 நாங்கள் எதற்கும் பிரயோசனமற்றவர்கள்! 364 00:27:49,545 --> 00:27:51,713 தயவுசெய்து வீட்டிற்கு செல்ல விடுங்கள். 365 00:27:51,797 --> 00:27:53,382 எங்களை மன்னித்து விடுங்கள்! 366 00:27:56,718 --> 00:27:58,554 உனக்கு திருப்தி இல்லை என்றால் சொல். 367 00:27:58,637 --> 00:28:00,264 நீ திருப்தியடையும் வரை இவர்களை பணிய வைக்கிறேன். 368 00:28:05,352 --> 00:28:06,562 ஓடுங்கள். 369 00:28:13,277 --> 00:28:15,112 மீண்டும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். 370 00:28:20,784 --> 00:28:23,996 அந்தப் பையன்களிடம் என்ன சொன்னீர்கள்? 371 00:28:24,079 --> 00:28:27,207 உன்னை மீண்டும் தொந்தரவு செய்தால் அவர்கள் கொன்று 372 00:28:27,291 --> 00:28:29,293 உடல்களை நாய்களுக்கு உணவாக்கிவிடுவேன் என்றேன். 373 00:28:33,881 --> 00:28:35,757 உன் மனதை அமைதிப்படுத்தவே இதைச் சொல்கிறேன். 374 00:28:47,394 --> 00:28:49,479 இந்த நாடு எவ்வளவு அழகானது, எவ்வளவு நெகிழ்வானது, 375 00:28:51,148 --> 00:28:52,441 வலுவானது என்பதை 376 00:28:53,859 --> 00:28:55,485 நான் மறந்தேவிட்டேன். 377 00:29:07,039 --> 00:29:08,749 நீங்கள் போய் எவ்வளவு காலமானது? 378 00:29:10,167 --> 00:29:11,585 பதினான்கு ஆண்டுகள். 379 00:29:12,294 --> 00:29:14,421 இங்கிருந்ததை விட அங்குதான் அதிமாக இருந்தேன். 380 00:29:46,078 --> 00:29:47,621 கவலைப்படாதே, உன்னை காயப்படுத்த மாட்டேன். 381 00:29:53,085 --> 00:29:54,461 இந்த சட்டையை தூக்கி எரிந்துவிடுவீர்களா? 382 00:29:55,879 --> 00:29:56,922 ஏன் அப்படி செய்வேன்? 383 00:30:01,593 --> 00:30:03,470 நீ ஒரு வித்தியாசமான பெண். 384 00:30:05,138 --> 00:30:08,308 நான் ஒன்றும் மனிதர்களை நாய்களுக்கு உணவாக்குவேன் என்று பேசவில்லை. 385 00:30:13,438 --> 00:30:18,777 நாளை குளத்துக்கு கொண்டு வாருங்கள். மதிய உணவுக்கு முன் துவைத்து விடுவேன். 386 00:31:37,689 --> 00:31:38,690 பாட்டி, 387 00:31:38,774 --> 00:31:41,485 தொந்தரவு செய்ததற்கு வருந்துகிறேன், ஆனால் பேசலாம் என்று எதிர்பார்த்தேன். 388 00:31:42,528 --> 00:31:43,529 நீ என்ன விற்கிறாய்? 389 00:31:43,612 --> 00:31:44,780 நான் வாங்குகிறேன். 390 00:31:47,199 --> 00:31:49,993 அந்த வஞ்சகர்கள் நம்பிக்கை இழந்திருக்க வேண்டும். 391 00:31:50,077 --> 00:31:52,120 உன்னை கண்டுபிடிக்க அவர்கள் எங்கு சென்றார்கள்? 392 00:31:53,080 --> 00:31:54,915 நான்தான் அவர்களிடம் சென்றேன். 393 00:31:57,167 --> 00:31:58,627 நீ ஏன் அப்படி செய்தாய்? 394 00:32:02,339 --> 00:32:04,383 நீங்கள் பிடிவாதமாக இருக்கிறீர்கள், அதை சொல்லியாக வேண்டும். 395 00:32:04,466 --> 00:32:05,467 தயவுசெய்து திறந்து பாருங்கள். 396 00:32:13,934 --> 00:32:15,477 இவை இந்த வடிவத்தில் வளர்க்கப்படுகின்றன. 397 00:32:16,436 --> 00:32:17,729 வளர்த்ததா? 398 00:32:17,813 --> 00:32:19,189 வெளிப்படையாக, இவை பயங்கரமான சுவை கொண்டவை. 399 00:32:19,273 --> 00:32:20,774 இருந்தாலும், இவற்றின் விலை 9,000 யென். 400 00:32:21,275 --> 00:32:22,484 ஒன்பதாயிரம் யென்! 401 00:32:23,318 --> 00:32:24,695 நீ பைத்தியமாக இருக்க வேண்டும். 402 00:32:30,617 --> 00:32:31,994 பாட்டி. 403 00:32:33,161 --> 00:32:36,874 1955 இல், இந்த சொத்தை 4,000 யென்களுக்கு வாங்கியிருக்கிறீர்கள். 404 00:32:38,417 --> 00:32:40,794 அது இந்த தர்பூசணியின் விலையில் பாதிக்கும் குறைவு. 405 00:32:43,130 --> 00:32:44,590 நீங்கள் விற்க ஒப்புக்கொண்டால், 406 00:32:45,174 --> 00:32:47,050 நாங்கள் ஒரு பில்லியன் யென் தருவோம். 407 00:32:59,521 --> 00:33:02,441 இளைஞனாக இருக்கிறாய், கொரிய மொழி நன்றாக பேசுகிறாய். 408 00:33:03,775 --> 00:33:05,861 நான் அமெரிக்கா சென்ற பிறகு கொஞ்சம் மறந்துவிட்டேன். 409 00:33:08,322 --> 00:33:10,282 நீ என் பிள்ளைகளை விட சிறந்தவன். 410 00:33:12,868 --> 00:33:15,037 என் கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். 411 00:33:15,746 --> 00:33:18,081 அவர்கள் இந்த மொழியைக் கற்றுக்கொள்வதை அவர் விரும்பவில்லை. 412 00:33:19,583 --> 00:33:21,752 இப்போது என் சொந்த பிள்ளைகளே 413 00:33:21,835 --> 00:33:24,713 அவர்களின் தாய் கனவு காணும் மொழி கூட தெரியாது. 414 00:33:26,798 --> 00:33:27,925 அது உங்களுக்கு வருத்தம் தர வேண்டும். 415 00:33:31,595 --> 00:33:33,180 உனக்கு கொரிய மொழி கற்றுக் கொடுத்தது யார்? 416 00:33:34,473 --> 00:33:36,016 என் பாட்டி எனக்கு கற்றுக் கொடுத்தார். 417 00:33:38,936 --> 00:33:41,104 என் சிறுவயதிலேயே என் அம்மா இறந்துவிட்டார். 418 00:33:41,980 --> 00:33:44,900 என் அப்பா நீண்ட நேரம் வேலை செய்தார். 419 00:33:45,609 --> 00:33:47,486 என் பாட்டி தான் என்னை வளர்த்தார். 420 00:33:48,654 --> 00:33:50,822 அவருக்கும் வாழ்க்கை கடினமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். 421 00:33:54,451 --> 00:33:56,286 தன் குடும்பத்திற்கு உணவளிப்பதற்காக, 422 00:33:56,787 --> 00:34:00,040 இரவும் பகலும் தன் வண்டியைத் தள்ளிக்கொண்டு, 423 00:34:00,123 --> 00:34:01,875 காய்கறிகளை விட்றார். 424 00:34:01,959 --> 00:34:03,252 அவர் கைகள் மிளகாய் காரத்தில் எரிந்தன. 425 00:34:03,335 --> 00:34:04,753 போதும். 426 00:34:05,587 --> 00:34:07,589 எந்த குடும்பம்தான் சிரமப்படவில்லை? 427 00:34:09,925 --> 00:34:11,260 உண்மையைச் சொல். 428 00:34:11,885 --> 00:34:14,263 வயதானவர்கள் துன்பத்தைப் பற்றி பேசும்போது, 429 00:34:14,346 --> 00:34:15,848 சோர்வாக இல்லையா? 430 00:34:18,934 --> 00:34:21,603 அதுதானே விஷயம்? 431 00:34:23,938 --> 00:34:25,190 மன பாரத்தை ஏற்படுத்துவது? 432 00:34:33,614 --> 00:34:37,244 உங்கள் பிள்ளைகளை நினைத்துப் பாருங்கள். இதற்கு ஒப்புக்கொள்ளுங்கள். 433 00:35:04,104 --> 00:35:05,105 பள்ளிக்குச் சென்றிருக்கிறாயா? 434 00:35:06,023 --> 00:35:07,983 உனக்கு எழுத படிக்கத் தெரியுமா? 435 00:35:08,650 --> 00:35:11,153 நான் போக வேண்டும் என என் தந்தை போராடினார், 436 00:35:11,236 --> 00:35:12,863 ஆனால் அம்மா அதில் எந்த பிரயோசனத்தையும் காணவில்லை. 437 00:35:13,530 --> 00:35:14,573 அது தவறு. 438 00:35:15,073 --> 00:35:16,825 சரியான திறமைகளுடன், 439 00:35:17,951 --> 00:35:19,995 நீ இந்த இடத்தை விட்டு வெளியேறியிருக்கலாம். 440 00:35:20,078 --> 00:35:21,788 நான் ஏன் அப்படி செய்ய வேண்டும்? 441 00:35:22,456 --> 00:35:26,043 இது நான் பிறந்த ஊர், என் பெற்றோர்களின் ஊர். 442 00:35:26,627 --> 00:35:28,045 இந்த வாழ்க்கைதான் உனக்குத் தேவையா? 443 00:35:33,842 --> 00:35:36,220 என் வார்த்தைகள் உன்னை இவ்வளவு புண்படுத்தும் என நினைக்கவில்லை. 444 00:35:37,137 --> 00:35:39,765 நான் ஏழை, அறிவற்றவள் என்பது தெரியும். 445 00:35:39,848 --> 00:35:42,518 நீங்களும் ஜியுனும் வைத்திருக்கும் நல்ல பொருட்கள் ஒருபோதும் எனக்கு கிடைக்காது, 446 00:35:42,601 --> 00:35:44,853 அதனால் என்னைப் பார்த்து சிரிக்க உங்களுக்கு உரிமை இல்லை. 447 00:35:45,812 --> 00:35:47,147 நான் அதை அனுமதிக்க மாட்டேன். 448 00:35:48,607 --> 00:35:50,067 நான் இங்கே வந்திருக்கக்கூடாது. 449 00:35:50,150 --> 00:35:51,235 கொஞ்சம் பொறு. 450 00:35:55,364 --> 00:35:57,491 உனக்கு கனவுகள் உண்டா என்று தான் கேட்கிறேன். 451 00:35:58,575 --> 00:36:00,494 நானும் ஒரு காலத்தில் உன்னைப் போல் ஏழைதான். 452 00:36:02,955 --> 00:36:04,122 இன்னும் கூட ஏழையாக, 453 00:36:05,040 --> 00:36:06,500 நீ நம்புகிறாயோ இல்லையோ. 454 00:36:08,669 --> 00:36:11,505 ஆனால் அப்போதும் எனக்கு கனவுகள் இருந்தன. 455 00:36:11,588 --> 00:36:13,966 யாரும் அதை பறித்துக்கொள்ள நான் அனுமதிக்கவில்லை. 456 00:36:25,561 --> 00:36:27,104 நாம் இங்கே யோங்டோவில் இருக்கிறோம். 457 00:36:29,189 --> 00:36:30,190 இது ஜப்பான். 458 00:36:31,233 --> 00:36:32,651 ஒசாகா இங்கே இருக்கிறது. 459 00:36:32,734 --> 00:36:34,319 அங்குதான் நான் வசிக்கிறேன். 460 00:36:34,820 --> 00:36:36,405 அங்கு கிடைக்காதது எதுவுமில்லை. 461 00:36:39,616 --> 00:36:41,743 அமெரிக்காவிலிருந்து மிகவும் இனிப்பான ஆரஞ்சுகள். 462 00:36:41,827 --> 00:36:43,620 தைவானில் இருந்து வாழைப்பழங்கள். 463 00:36:43,704 --> 00:36:45,455 பிரான்சில் இருந்து மிக அழகான மிட்டாய்கள். 464 00:36:46,540 --> 00:36:48,125 கிட்டத்தட்ட எல்லா வீட்டிலும் மின்சாரம் இருக்கும். 465 00:36:48,709 --> 00:36:51,044 குளிர்காலத்தில் சூடாக வைத்திருக்க ஹீட்டர் இயந்திரங்கள். 466 00:36:51,753 --> 00:36:53,922 நகரின் எல்லா பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லும் மின்சார ரயில்கள். 467 00:36:55,465 --> 00:36:58,218 இரவில், விளக்குகள் ஒளிர்ந்து 468 00:36:58,969 --> 00:37:02,014 மிகவும் அசாதாரணமான பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தும். 469 00:37:03,473 --> 00:37:04,975 உண்மையில் அது ஒரு அற்புதம். 470 00:37:08,520 --> 00:37:10,606 எனவே கற்பனை செய்து பார், ஒசாகாவில் இதெல்லாம் இருந்தால் 471 00:37:11,857 --> 00:37:13,692 உலகின் பிற பகுதிகள் என்ன கொடுக்க வேண்டும்? 472 00:37:17,988 --> 00:37:18,989 மஞ்சூரியா. 473 00:37:20,574 --> 00:37:21,783 சீனா. 474 00:37:22,910 --> 00:37:23,911 ஐரோப்பா. 475 00:37:24,828 --> 00:37:26,371 உலகத்தின் மறுபக்கம்… 476 00:37:33,086 --> 00:37:34,129 அமெரிக்கா. 477 00:37:46,725 --> 00:37:47,809 ஒருமுறை அங்கு சென்றேன். 478 00:37:56,109 --> 00:37:57,694 அங்கே எப்படி இருந்தது? 479 00:38:01,073 --> 00:38:04,660 எல்லாம் இருந்தது. அதோடு ஒன்றுமில்லை. 480 00:38:13,919 --> 00:38:15,587 நீ என்ன பார்க்கிறாய்? 481 00:38:26,056 --> 00:38:27,724 இது ஜப்பான் என்கிறீர்களா? 482 00:38:29,309 --> 00:38:30,978 இது நாம்தானே? 483 00:38:34,189 --> 00:38:35,399 சுவாரஸ்யமானது. 484 00:38:35,482 --> 00:38:36,483 என்ன? 485 00:38:38,151 --> 00:38:39,236 நான் நினைக்கிறேன்… 486 00:38:41,154 --> 00:38:43,866 அவை நம்மை விட பெரியவை என்று எப்போதும் கற்பனை செய்தேன். 487 00:38:45,158 --> 00:38:48,078 விழுங்குவதற்குத் தயாராக இருக்கும் ஒரு பெரிய வாய் போல. 488 00:38:49,788 --> 00:38:51,331 ஆனால் இது உனக்கு என்ன சொல்கிறது? 489 00:38:54,376 --> 00:38:56,628 இது நம் பலனாக இருக்க வேண்டியதில்லை. 490 00:38:59,131 --> 00:39:00,841 நாம் அவர்களை வெல்ல முடியும். 491 00:39:14,062 --> 00:39:15,314 சுன்ஜா, 492 00:39:18,400 --> 00:39:19,943 நான் மீண்டும் வர விரும்புகிறேன். 493 00:39:20,027 --> 00:39:21,528 நீ துணி துவைக்கும் போது. 494 00:39:23,906 --> 00:39:25,115 நான் வரலாமா? 495 00:40:09,451 --> 00:40:12,120 இன்று உணவின் சுவை வித்தியாசமாக இருந்தது. 496 00:40:15,541 --> 00:40:17,793 கசப்பாக இருந்தது. 497 00:40:26,677 --> 00:40:28,554 நீ அன்று ஜியுனைக் குறிப்பிட்டாய். 498 00:40:29,054 --> 00:40:30,055 ஏன்? 499 00:40:30,556 --> 00:40:31,598 நான் குறிப்பிட்டிருக்கக்கூடாது. 500 00:40:32,599 --> 00:40:35,727 என்னிடம் இல்லாததற்கு அவளைக் குறை சொல்வது சரியல்ல. 501 00:40:36,520 --> 00:40:37,521 ஏன் கூடாது? 502 00:40:38,689 --> 00:40:40,941 அவை எதையும் அவள் சம்பாதிக்கவில்லை. 503 00:40:41,942 --> 00:40:45,529 ஆனால் ஜியுனுக்கும் அவளைப் போன்றவர்களுக்கும் அது புரியும்போது கடினமாக இருக்கும். 504 00:40:46,697 --> 00:40:47,906 ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? 505 00:40:47,990 --> 00:40:50,868 அவளது அப்பா தனது தோட்டத்திற்கு அதிக வரி செலுத்த வேண்டும். 506 00:40:50,951 --> 00:40:53,287 எனவே அவர்களின் நிலம் அபகரிக்கப்படுவதற்கு நீண்ட காலம் ஆகாது. 507 00:40:54,246 --> 00:40:56,582 அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டவைகளைப் பெற யாருக்கும் தகுதி இல்லை. 508 00:40:57,708 --> 00:40:59,710 நீயும் மற்றவர்களைப் போல முட்டாள்தனமாக பேசுகிறாய். 509 00:41:00,210 --> 00:41:01,879 உங்களுக்கு விசுவாச உணர்வு இல்லையா? 510 00:41:02,462 --> 00:41:03,839 இல்லை. 511 00:41:03,922 --> 00:41:05,507 உனக்கும் கூடாது. 512 00:41:05,591 --> 00:41:07,050 மக்கள் எங்கும் நேர்மையற்றவர்களாக உள்ளனர். 513 00:41:08,343 --> 00:41:09,428 பிறகு… 514 00:41:11,305 --> 00:41:12,723 ஜப்பான்தான் இப்போது உங்கள் 515 00:41:13,932 --> 00:41:15,642 வீடு என்றால் இங்கு ஏன் இருக்கிறீர்கள்? 516 00:41:17,311 --> 00:41:19,563 என் இளம் வயதில், நான் வெறுங்கையுடன் வெளியேறினேன். 517 00:41:19,646 --> 00:41:21,607 இப்போது வெற்றிகரமாக இருக்கிறேன், நான் திரும்ப விரும்பினேன்… 518 00:41:24,526 --> 00:41:26,528 நான் விட்டு சென்ற ஞாபகங்கள் இன்னும் இங்கே… 519 00:41:27,821 --> 00:41:29,489 இருக்கிறதா என்று பார்க்க. 520 00:41:30,616 --> 00:41:31,909 முட்டாள் தனமானதாக இருக்கலாம். 521 00:41:32,409 --> 00:41:34,786 அப்படியென்றால் இன்னும் இங்கே இருக்கிறதா, உங்களைப் பற்றிய ஞாபகங்கள்? 522 00:41:47,049 --> 00:41:48,300 என்ன செய்கிறீர்கள்? 523 00:41:50,385 --> 00:41:51,929 நான் சிறுவனாக இருந்தபோது, 524 00:41:52,012 --> 00:41:54,765 நானும் என் அப்பாவும் ஆளுக்கொரு உடை மட்டுமே வைத்திருந்தோம். 525 00:41:55,474 --> 00:41:59,144 ஒவ்வொரு இரவும், அவற்றை நான் துவைத்து காயவைப்பேன். 526 00:41:59,228 --> 00:42:01,355 காலையில் ஈரமாக இருந்தாலும் அவற்றையே அணிய வேண்டியிருந்தது. 527 00:42:01,855 --> 00:42:02,856 ஒருமுறை, 528 00:42:03,649 --> 00:42:06,068 ஈர ஆடைகளை நெருப்புக்கு அருகில் காயவைக்கும் அருமையான யோசனை தோன்றியது 529 00:42:06,818 --> 00:42:07,861 சீக்கிரம் உலரவைக்க. 530 00:42:10,239 --> 00:42:12,366 இரவு உணவு சமைப்பதில் கவனம் செலுத்தினேன். 531 00:42:14,159 --> 00:42:15,869 எனக்கு இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. 532 00:42:16,828 --> 00:42:20,749 கருகிப்போகாமல் இருக்க பார்லியை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். 533 00:42:21,500 --> 00:42:23,502 ஆனால் கிளறிக் கொண்டிருந்த போது வேறு வாசனை வந்தது. 534 00:42:23,585 --> 00:42:25,212 நான் வெளியே ஓடியபோது, 535 00:42:25,712 --> 00:42:26,797 இவ்வளவு பெரிய ஓட்டையைக் கண்டேன்… 536 00:42:28,715 --> 00:42:29,716 என் அப்பாவின் சட்டையில். 537 00:42:31,260 --> 00:42:32,261 எரிந்திருந்தது. 538 00:42:35,973 --> 00:42:37,724 அன்று இரவு என்னை மிகவும் திட்டினார்கள். 539 00:42:41,186 --> 00:42:43,647 இப்போது உங்கள் அப்பா எங்கே? 540 00:42:47,067 --> 00:42:48,068 இறந்துவிட்டார். 541 00:42:48,735 --> 00:42:50,445 நீண்ட காலத்துக்கு முன்பே மறந்துவிட்டது. 542 00:43:20,976 --> 00:43:22,936 உலகில் எப்படி இவ்வளவு மழை பெய்கிறது? 543 00:43:24,354 --> 00:43:26,064 ஏன் எல்லாம் யோங்டோவில் பொழிய வேண்டும்? 544 00:43:27,399 --> 00:43:28,734 சியோலில் என் பெய்யக் கூடாது? 545 00:43:28,817 --> 00:43:29,818 அல்லது ஜப்பானில்? 546 00:43:30,402 --> 00:43:31,612 அல்லது சீனாவில்? 547 00:43:35,616 --> 00:43:36,742 சுன்ஜா! 548 00:43:38,160 --> 00:43:39,453 வந்து எங்களுக்கு உதவு. 549 00:43:51,507 --> 00:43:52,758 உனக்கு என்ன ஆனது? 550 00:43:59,348 --> 00:44:02,392 உங்கள் மகள் கண்டுபிடிக்கப்படுவதை 551 00:44:02,476 --> 00:44:05,646 விரும்பவில்லை, இல்லையென்றால் ஏதாவது கிடைத்திருக்கும். 552 00:44:07,564 --> 00:44:08,982 அப்படியென்றால், ஒன்றுமில்லையா? 553 00:44:11,818 --> 00:44:14,446 ஆனால் ஏதாவது இருக்க வேண்டும். 554 00:44:14,530 --> 00:44:15,989 ஏதாவது! 555 00:44:16,949 --> 00:44:19,409 உங்களுக்கு பயன்படக்கூடியது ஏதுமில்லை. 556 00:44:21,620 --> 00:44:24,498 எனவே அவள் காணாமல் போய்விட்டாள், அவ்வளவுதானா? 557 00:44:26,708 --> 00:44:28,877 எட்சுகோ, எனக்காக காரில் காத்திரு. 558 00:44:29,461 --> 00:44:30,546 கட்டணத்தை நான் கொடுக்கிறேன். 559 00:44:31,129 --> 00:44:35,384 நம் பணம் வீணாவதைத் தவிர நான் எதையும் எதிர்பார்த்திருக்கக் கூடாது. 560 00:44:36,552 --> 00:44:38,470 என்னிடம் விட்டு விடு. 561 00:44:41,098 --> 00:44:42,766 உங்கள் உதவிக்கு நன்றி. 562 00:44:51,233 --> 00:44:52,484 எனவே… 563 00:44:53,986 --> 00:44:55,320 உனக்கு என்ன தெரியும்? 564 00:44:58,156 --> 00:44:59,783 சூரிய அஸ்தமனத்தில், 565 00:44:59,867 --> 00:45:04,538 பாரம்பரியப்படி பேரரசர் அவரது பெற்றோருக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். 566 00:45:04,621 --> 00:45:09,293 அவரது உடல் சில தனிப்பட்ட பொருட்களுடன் மூன்று சவப்பெட்டிகளில் உள்ளது. 567 00:45:15,090 --> 00:45:17,384 அவள் கடைசியாக தென்பட்டது எட்டு மாதங்களுக்கு முன்பு டோக்கியோவில். 568 00:45:20,387 --> 00:45:21,430 என்ன? 569 00:45:25,350 --> 00:45:26,643 அப்படி என்றால் என்ன? 570 00:45:27,227 --> 00:45:28,520 அதாவது… 571 00:45:31,732 --> 00:45:33,942 அவள் ஒரு விபச்சார விடுதியில் வேலை செய்து கொண்டிருந்தாள். 572 00:45:35,777 --> 00:45:39,323 அவளுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தனர். 573 00:46:07,309 --> 00:46:08,310 யார்? 574 00:46:11,605 --> 00:46:12,689 ஹலோ? 575 00:46:15,901 --> 00:46:17,069 ஹலோ? 576 00:46:17,152 --> 00:46:21,114 உன் குரலை இப்போது கேட்க மிகவும் விசித்திரமாக இருக்கிறது. 577 00:46:23,367 --> 00:46:24,826 ஹனா, நிஜமாகவே நீதானா? 578 00:46:24,910 --> 00:46:27,204 நிஜமாகவே என் குரலை மறந்து விட்டாயா? 579 00:46:28,413 --> 00:46:30,415 உன் உச்சரிப்புக்கு என்ன ஆனது? 580 00:46:32,501 --> 00:46:35,212 ஹனா, நான் உன்னை மிஸ் செய்தேன். 581 00:46:35,295 --> 00:46:37,214 கேலி செய்வதை நிறுத்து. 582 00:46:37,297 --> 00:46:41,134 இதுவரை நீ என்னைப் பற்றி நினைத்ததே இல்லை. 583 00:46:43,136 --> 00:46:44,555 அது உண்மையில்லை. 584 00:46:52,020 --> 00:46:54,439 மழையால் கிடைக்கும் ஒரே நல்ல விஷயம். 585 00:46:54,523 --> 00:46:56,275 காடு முழுக்க காளான்கள் நிறைந்திருக்கும். 586 00:46:57,401 --> 00:46:58,402 இப்போதா? 587 00:46:59,570 --> 00:47:00,946 ஏன் கூடாது? 588 00:47:01,697 --> 00:47:04,366 உன் அம்மா சூப் தயாரிக்க கொஞ்சம் வீட்டிற்கு எடுத்துச் செல். 589 00:47:05,409 --> 00:47:06,618 ஆனால் சலவை. 590 00:47:06,702 --> 00:47:07,911 நாம் இருவர் இருக்கிறோம். 591 00:47:08,662 --> 00:47:10,038 பாதி நேரம்தான் ஆகும். 592 00:47:10,581 --> 00:47:12,708 என் எண்ணை எப்படி கண்டுபிடித்தாய்? 593 00:47:13,417 --> 00:47:16,253 பார்த்தாயா, எல்லோரும் என்னைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். 594 00:47:17,337 --> 00:47:18,338 நீ கூட. 595 00:47:18,839 --> 00:47:20,591 நீ எங்கே இருந்தாய்? 596 00:47:20,674 --> 00:47:22,176 என்னவொரு சலிப்பான கேள்விகள். 597 00:47:23,051 --> 00:47:26,263 அதற்கு பதிலாக, நான் இன்னும் அழகாக இருக்கிறேனா என்று கேள். 598 00:47:28,307 --> 00:47:29,516 இன்னும் அழகாக இருக்கிறாயா? 599 00:47:31,351 --> 00:47:32,811 நான் கண்ணை மூடினால், 600 00:47:33,687 --> 00:47:37,232 சில நேரங்களில் நான் இன்னும் நம் இருவரையும் பார்க்க முடிகிறது. 601 00:47:39,109 --> 00:47:41,695 நாம் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம், இல்லையா? 602 00:47:42,362 --> 00:47:43,780 நாம் குழந்தைகளாக இருந்தோம். 603 00:47:44,990 --> 00:47:46,658 இல்லை, அது உண்மையல்ல. 604 00:47:47,618 --> 00:47:49,661 நாம் புத்திசாலிகளாகவும் சுதந்திரமாகவும் இருந்தோம். 605 00:47:54,041 --> 00:47:57,252 தயவுசெய்து எங்கிருக்கிறாய் என்று சொல். 606 00:47:58,128 --> 00:48:01,673 நான் சொன்னால், என்னை எப்படி அணுகுவது என்று கூட உனக்குத் தெரியாது. 607 00:48:01,757 --> 00:48:03,383 உன்னைக் கண்டுபிடிப்பேன். 608 00:48:03,467 --> 00:48:07,554 நான் அந்த இருளில் இருக்கிறேன் சாலமன். 609 00:48:09,348 --> 00:48:14,019 இவ்வளவு நாட்களாக இங்கு இருந்ததில் எப்படி வெளியேறுவது என்று தெரியவில்லை. 610 00:48:16,104 --> 00:48:17,189 நீயும் கூட… 611 00:48:18,815 --> 00:48:20,984 உன்னால் என்னை கண்டுபிடிக்க முடியாது. 612 00:48:35,290 --> 00:48:38,877 எட்சுகோ உன்னை தேடிக்கொண்டிருக்கிறார். 613 00:48:38,961 --> 00:48:40,546 அவரிடம் எதுவும் சொல்லாதே. 614 00:48:41,171 --> 00:48:43,465 நீ சொன்னால், சத்தியமாக மீண்டும் அழைக்க மாட்டேன். 615 00:48:43,549 --> 00:48:45,217 ஆனால் அவர் இன்னும் உன்னைப் பற்றி கனவு காண்கிறார். 616 00:48:45,300 --> 00:48:46,635 அழைப்பை துண்டிப்பேன்! நிஜமாகவே. 617 00:48:47,219 --> 00:48:50,264 ஏன் சென்றாய்? ஏன் எங்களை விட்டு சென்றாய்? 618 00:48:51,974 --> 00:48:55,018 இது என் விருப்பம் அல்ல, உனக்கே தெரியும்! 619 00:48:55,102 --> 00:48:56,603 நான் போக விரும்பவில்லை. 620 00:48:56,687 --> 00:48:58,063 நான் உன்னை விட்டு போக விரும்பவில்லை! 621 00:48:58,146 --> 00:49:00,858 ஆனால் நீ போனது நல்லது. 622 00:49:00,941 --> 00:49:02,985 நீ இப்போது அமெரிக்கர் போலவே பேசுகிறாய். 623 00:49:04,486 --> 00:49:07,781 அந்தப் பெண், உனக்கு அடுத்து இருப்பவள், 624 00:49:07,865 --> 00:49:11,034 அவள் மீது உனக்கு காதல் இருக்கிறது, இல்லையா? 625 00:49:11,702 --> 00:49:14,121 ஆனால் அவளைப் போன்ற பெண்கள், நான் அவர்களை வெறுக்கிறேன். 626 00:49:14,746 --> 00:49:16,206 நீ இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறாயா? 627 00:49:17,499 --> 00:49:19,084 இல்லை, இப்போது இல்லை. 628 00:49:20,294 --> 00:49:21,962 எனக்கு தூக்கம் வருகிறது. 629 00:49:22,045 --> 00:49:23,046 பொறு! 630 00:49:24,590 --> 00:49:26,258 நான் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. 631 00:49:27,718 --> 00:49:29,178 வேறு யாரிடமும் சொல்ல முடியாத விஷயங்கள். 632 00:49:30,179 --> 00:49:34,141 இன்னும் நான் உனக்கு தேவைப்படுவது நல்லது. 633 00:49:35,392 --> 00:49:36,393 நன்றாக உணர்கிறேன். 634 00:49:37,936 --> 00:49:39,271 நீ எங்கே இருக்கிறாய்? 635 00:49:39,354 --> 00:49:40,981 நான் மீண்டும் அழைக்கிறேன். 636 00:49:41,064 --> 00:49:42,608 எப்பொழுது? 637 00:49:42,691 --> 00:49:44,026 என்னால் முடியும் போது. 638 00:49:47,821 --> 00:49:48,822 ஹனா? 639 00:49:50,449 --> 00:49:51,533 ஹனா? 640 00:52:08,128 --> 00:52:10,130 வசனத் தமிழாக்கம் அருண்குமார்