1 00:00:09,092 --> 00:00:15,098 1910ல், ஜப்பான் கொரியாவை அதன் வளர்ந்து வரும் பேரரசின் ஒரு பகுதியாக காலனித்துவப்படுத்தியது. 2 00:00:17,142 --> 00:00:20,854 ஜப்பானிய ஆட்சியின் கீழ், பல கொரியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து 3 00:00:20,938 --> 00:00:24,191 பலர் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். 4 00:00:26,902 --> 00:00:31,114 இருப்பினும், மக்கள் அதைத் தாங்கிக்கொண்டனர். 5 00:00:31,198 --> 00:00:34,576 குடும்பங்கள் தாங்கிக்கொண்டன. 6 00:00:37,996 --> 00:00:40,541 ஒரு குடும்பம் உட்பட… 7 00:00:40,624 --> 00:00:43,293 தலைமுறை தலைமுறையாக. 8 00:00:49,341 --> 00:00:55,597 ஜப்பானிய வசனம் நீலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது கொரிய வசனம் மஞ்சளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது 9 00:01:12,948 --> 00:01:16,034 ஜப்பான் ஆக்கிரமிப்பு கொரியா 10 00:01:23,709 --> 00:01:25,544 (கொரிய மொழியில்) என் அம்மா அதிர்ஷ்டசாலி இல்லை. 11 00:01:27,171 --> 00:01:29,131 என் பிறப்பு 12 00:01:29,214 --> 00:01:31,049 அவருக்கு பெரும் சுமையாக இருந்தது. 13 00:01:33,218 --> 00:01:36,555 நான் குழந்தையாக இருக்கும்போதே அவர் இறந்துவிட்டார். 14 00:01:37,931 --> 00:01:40,309 துக்கம் தாளாமல், என் அப்பா குடிகாரராகிவிட்டார். 15 00:01:40,893 --> 00:01:44,980 என் மூன்று மூத்த சகோதரிகளும் நானும் கிராமத்தில் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். 16 00:01:46,732 --> 00:01:49,651 பிறகு கிராமத்தின் கல்யாண தரகர்… 17 00:01:51,528 --> 00:01:55,866 டோங்சாம் அருகே வீட்டை வாடகைக்கு விடும் ஒரு குடும்பத்தில் திருமணமாகாத 18 00:01:55,949 --> 00:01:59,328 பிளந்த உதடைக் கொண்ட ஒரு பையன் இருப்பதாக சொன்னார். 19 00:02:01,246 --> 00:02:03,081 என் அப்பா உடனடியாக என்னை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். 20 00:02:05,626 --> 00:02:07,586 அது நடந்தது மூன்று வருடங்களுக்கு முன்பு, 21 00:02:07,669 --> 00:02:11,840 அதோடு நான் ஒரு நல்ல மனைவியாகவும் மருமகளாகவும் இருக்க கடினமாக முயன்றேன். 22 00:02:17,429 --> 00:02:19,223 நான் மூன்று மகன்களைப் பெற்றெடுத்தேன், 23 00:02:22,392 --> 00:02:24,603 ஆனால் ஒருவன் கூட முதல் வயது வரை கூட பிழைக்கவில்லை. 24 00:02:27,356 --> 00:02:28,899 இது என் கஷ்டமாக மட்டும் இருந்திருந்தால், 25 00:02:29,650 --> 00:02:33,111 தாங்கிக்கொள்வேன். ஆனால் என் கணவர்… 26 00:02:34,780 --> 00:02:37,241 அவர் மிகவும் கனிவானவர். 27 00:02:40,661 --> 00:02:43,997 நான் கர்ப்பமாக இருக்கிறேன், ஆனால்… 28 00:02:46,041 --> 00:02:48,544 என் மீது ஏதோ சாபம் இருப்பதாக நினைக்கிறேன். 29 00:03:00,681 --> 00:03:04,476 நியூ யார்க் 30 00:03:40,262 --> 00:03:43,140 இதை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. 31 00:03:43,974 --> 00:03:46,143 உனக்கு பதவி உயர்வு கிடைக்காது. 32 00:03:46,226 --> 00:03:47,352 இந்த வருடம் முடியாது. 33 00:03:47,436 --> 00:03:49,730 நாங்கள் உனக்கு பல உத்திரவாதங்கள் கொடுத்தது தெரியும், 34 00:03:49,813 --> 00:03:52,232 ஆனால் என் மேலதிகாரிகள் 35 00:03:52,316 --> 00:03:55,777 உனக்கு இன்னொரு வருடம் பணி அனுபவம் இருந்தால் நல்லதென்று நினைக்கிறார்கள். 36 00:04:02,409 --> 00:04:03,410 ஏன் என்று தெரிய வேண்டும். 37 00:04:03,493 --> 00:04:05,746 இவர் அதைச் சொல்லிவிட்டார். நீ இன்னும் தயாராகவில்லை என்கிறார்கள். 38 00:04:06,371 --> 00:04:08,540 வேலையை தொடர்ந்து கடினமாக செய், அதோடு அடுத்த வருடம்… 39 00:04:08,624 --> 00:04:10,209 டீஸ்டோன் இணைப்பை முடிக்க உதவினேன். 40 00:04:10,292 --> 00:04:11,710 பிரிக்ஸ்லி நிறுவனத்தை வாங்க உதவினேன். 41 00:04:11,793 --> 00:04:13,629 தொடர்ந்து இரண்டாவது வருடமாக முதல் இடத்தில் நீடிக்கிறேன். 42 00:04:13,712 --> 00:04:15,839 இது சரியான தருணம் இல்லை, சரியா? 43 00:04:21,678 --> 00:04:24,681 என் முன்னோர்களை அழைத்து இந்த சாபத்தைப் போக்குங்கள், 44 00:04:24,765 --> 00:04:26,517 எனவே எங்களுக்கு குடும்பம் இருக்கும். 45 00:05:02,302 --> 00:05:03,428 கோல்டன் ஹோட்டல்ஸ். 46 00:05:04,054 --> 00:05:06,098 இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர், பங்குகளை வெளியிட துடிக்கிறார், 47 00:05:06,181 --> 00:05:08,183 ஆனால் அவர்களின் மதிப்பீட்டை அதிகரிக்க வேண்டும். 48 00:05:08,809 --> 00:05:09,893 அவர்களுக்கு அந்த ஹோட்டல் தேவை. 49 00:05:09,977 --> 00:05:11,186 அது டோக்கியோவில் இருக்கிறது. 50 00:05:11,270 --> 00:05:14,439 அதில் ஒரு நில உரிமையாளரின் கையில் இறுதி முடிவுக்கான எல்லா அதிகாரமும் இருக்கிறது. 51 00:05:21,905 --> 00:05:23,824 நில உரிமையாளர் ஒரு கொரியாக்காரப் பெண். 52 00:05:26,118 --> 00:05:28,704 உங்களுக்கு அதில் எந்த பயனும் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன், 53 00:05:29,288 --> 00:05:30,581 என்னால் அந்த ஒப்பந்தத்தை முடிக்க முடியும். 54 00:05:33,959 --> 00:05:35,586 உனக்கு என்ன தெரியும்? 55 00:05:35,669 --> 00:05:39,131 150 முதல் 200 மில்லியன் கட்டுமான மதிப்புடைய 300 க்கும் அதிகமான அறைகள் கொண்ட ஹோட்டல். 56 00:05:41,884 --> 00:05:46,221 மதிப்பிடப்பட்ட கணக்கீடுகள், நமக்கு பத்து, 15 மில்லியன் கட்டணம் என்கின்றன. 57 00:05:46,305 --> 00:05:47,598 அதோடு இந்த நில உரிமையாளர், 58 00:05:47,681 --> 00:05:49,641 ஒரு கொரியராக இருப்பதால், உனக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று நினைக்கிறாயா? 59 00:05:49,725 --> 00:05:52,060 பொறு, நான் குழம்பிவிட்டேன். நீ ஜப்பானியர் என்று நினைத்தேன். 60 00:05:52,144 --> 00:05:54,188 இல்லை, நான் அங்கு வளர்ந்தேன். 61 00:05:55,564 --> 00:05:58,108 -நிச்சயமாகவா? -ஆம், கண்டிப்பாக. 62 00:05:59,067 --> 00:06:02,613 நான் இந்த ஒப்பந்தத்தை முடித்தவுடன், என்னை உடனடியாக இட மாறுதல் செய்ய வேண்டும். 63 00:06:04,740 --> 00:06:08,660 எனக்கு துணை தலைவர் பதவியும், இன்றைய தேதி முதல் சம்பள உயர்வும் வேண்டும். 64 00:06:10,621 --> 00:06:13,248 அதோடு இந்த நிறுவனத்திற்கு கோல்டன் ஹோட்டல்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதை 65 00:06:13,332 --> 00:06:16,543 என் ஆண்டு இறுதி ஊக்கத்தொகை பிரதிபலிக்க வேண்டும். 66 00:06:20,589 --> 00:06:22,216 இவையனைத்தும் எழுத்துப்பூர்வமாக வேண்டும். 67 00:06:26,929 --> 00:06:29,223 ஒரு குழந்தை பிறக்கப்போகிறது. 68 00:06:30,933 --> 00:06:33,977 அவள் நீடித்திருப்பாள். 69 00:06:35,187 --> 00:06:39,233 அவள் மூலமாக, ஒரு குடும்பம் நிலைக்கும். 70 00:06:55,457 --> 00:06:56,458 சீக்கிரம்! 71 00:06:56,542 --> 00:06:57,876 இப்போது வாருங்கள்! 72 00:07:03,465 --> 00:07:04,675 அந்த அழுகையை கேள். 73 00:07:04,758 --> 00:07:06,218 இவள் வலுவான எண்ணம் மற்றும் நம்பிக்கை உடையவளாக இருப்பாள். 74 00:07:06,885 --> 00:07:08,720 நன்றி. 75 00:07:08,804 --> 00:07:10,764 அவளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். 76 00:07:12,933 --> 00:07:15,561 இவள் போராடுவாள். 77 00:07:17,396 --> 00:07:19,022 நாம் இவளுக்கு பெயர் வைக்க வேண்டும். 78 00:07:41,753 --> 00:07:42,754 சுன்ஜா! 79 00:07:50,762 --> 00:07:52,264 சுன்ஜா! 80 00:09:43,876 --> 00:09:45,711 மின் ஜின் லீ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 81 00:10:14,698 --> 00:10:17,159 ஒசாகா 82 00:10:52,069 --> 00:10:55,405 நியூஜின் 83 00:11:11,588 --> 00:11:12,589 அப்பா! 84 00:11:23,559 --> 00:11:25,477 (ஜப்பானிய மொழியில்) நல்லது. எடை கூடிவிட்டாய். 85 00:11:26,854 --> 00:11:27,938 நிறைய பிட்சா சாப்பிடுகிறேன். 86 00:11:28,021 --> 00:11:29,731 நான் கவனமாக இருக்க வேண்டும். 87 00:11:29,815 --> 00:11:30,983 டோக்கியோ எப்படி இருக்கிறது? 88 00:11:31,066 --> 00:11:32,401 புதிய இடம், நன்றாக இருக்கிறதா? 89 00:11:32,484 --> 00:11:35,571 அது ஒரு ஹோட்டல் அறை. சில வாரங்களுக்கு அது போதும். 90 00:11:36,697 --> 00:11:37,948 அவன் இங்கு வந்துவிட்டானா? சாலமான் தானே அது? 91 00:11:38,031 --> 00:11:39,616 திரு. கோட்டோ, நீங்கள் இங்கே இருப்பதை நான் அறிந்திருக்க வேண்டும். 92 00:11:40,450 --> 00:11:42,536 உன் அப்பாதான் இப்போது இந்த இடத்திற்குச் சொந்தக்காரர், 93 00:11:42,619 --> 00:11:45,038 இருந்தாலும் அவர் இந்த இடத்தை நிர்வகிப்பதை உறுதி செய்ய வேண்டும். 94 00:11:45,122 --> 00:11:46,248 அதை சொல்லிக்கொண்டே இருங்கள், 95 00:11:46,331 --> 00:11:50,294 ஆனால் நீங்கள் வந்த உண்மையான காரணம் இளம் பெண்களை காதல் செய்ய. 96 00:11:50,377 --> 00:11:52,087 நீங்கள் பொய் சொல்வது தெரிகிறது. 97 00:11:53,755 --> 00:11:55,090 அட, திரு. ஹிரோட்டா! 98 00:11:57,092 --> 00:11:58,802 இது என் மகன், சாலமன். 99 00:11:59,386 --> 00:12:00,888 நீ இறுதியாக திரும்பி வந்து விட்டாய். 100 00:12:00,971 --> 00:12:04,391 இவன் அமெரிக்க வங்கியின் துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளான். 101 00:12:04,474 --> 00:12:07,019 ஒரு பச்சிங்கோ மனிதரின் மகனுக்கு இது மோசமல்ல. 102 00:12:07,561 --> 00:12:10,606 நீ யேலுக்கு சென்றது உண்மையா? 103 00:12:11,106 --> 00:12:14,067 அப்பா சொன்னால், அது உண்மையாகத்தான் இருக்கும். 104 00:12:14,151 --> 00:12:15,152 குரோஹானா என்டர்பிரைசஸ் 105 00:12:15,235 --> 00:12:18,113 திரு. யோஷி, குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? 106 00:12:18,197 --> 00:12:22,534 என் தாத்தா எதில் ஈடுபட்டார் என்பதற்காக நிதி உலகில் நம்மை நம்பாதவர்கள் 107 00:12:22,618 --> 00:12:25,621 இருக்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்… 108 00:12:27,414 --> 00:12:28,707 யார் அவருடைய தாத்தா? 109 00:12:29,541 --> 00:12:32,294 காலஞ்சென்ற ஒருவர். 110 00:12:32,878 --> 00:12:34,671 நமக்கு அதில் சம்பந்தமில்லை. 111 00:12:37,841 --> 00:12:39,301 ஜாக்பாட்! 112 00:12:41,553 --> 00:12:42,679 அதைப் பாருங்கள்! 113 00:12:42,763 --> 00:12:45,265 நேர்மையான பணத்திற்கும், நேர்மையற்ற பணத்திற்கும்… எந்த வேறுபாடும் இல்லை. 114 00:12:45,349 --> 00:12:46,850 பணம் பணம்தான். 115 00:13:40,988 --> 00:13:42,155 சுன்ஜா. 116 00:13:42,239 --> 00:13:44,741 சுன்ஜா, தலையை குனி. 117 00:14:04,845 --> 00:14:07,014 ஹேய், தாமதமாக வந்திருக்கிறீர்கள். 118 00:14:07,598 --> 00:14:09,057 உங்களுக்காக இதை எடுத்து வைத்தேன். 119 00:14:13,187 --> 00:14:14,188 இந்த ஒன்று. 120 00:14:15,022 --> 00:14:16,231 சுன்ஜா! 121 00:14:23,155 --> 00:14:25,365 இது சந்தோஷமாக இல்லை. 122 00:14:25,449 --> 00:14:26,450 அது ஏனென்றால், 123 00:14:26,533 --> 00:14:30,621 மிக மோசமான உயிரினங்கள் கூட வாழ துடிக்கும். 124 00:14:30,704 --> 00:14:33,790 கஷ்கொட்டை விற்கும் பெண் அப்படியில்லையே. 125 00:14:33,874 --> 00:14:36,585 அவர் சாக தயாராக இருந்தும் சாகவில்லை என்று எப்போதும் சொல்வார். 126 00:14:36,668 --> 00:14:40,088 அதற்கு காரணம் அவர் கணவன் பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்வார், 127 00:14:40,172 --> 00:14:45,177 ஆனால் வீட்டிற்கு வந்து தன் மனைவியையும் குழந்தைகளையும் அடிப்பார். 128 00:14:45,260 --> 00:14:47,012 அவர் வாழ விரும்பும்போதும் கூட. 129 00:14:48,305 --> 00:14:49,306 போகலாம். 130 00:14:50,516 --> 00:14:51,767 ஹேய், சகோதரா! 131 00:14:52,976 --> 00:14:55,020 இது நன்றாக இல்லையா? 132 00:14:55,103 --> 00:14:58,315 இதை விட இன்று நன்றாக மீன் பிடித்தவனை என்னிடம் காட்டுங்கள். 133 00:14:59,191 --> 00:15:00,984 இவ்வளவு பெரிய மீனை வைத்து நான் என்ன செய்வது? 134 00:15:01,068 --> 00:15:04,404 திரு. கிம், இந்த சந்தையிலேயே நீங்கள்தான் தரமான மீன் கேக்கை செய்கிறீர்கள். 135 00:15:04,488 --> 00:15:06,198 எப்போதும் மதியத்திற்கு முன்பே விற்றுவிடுகிறீர்கள். 136 00:15:06,281 --> 00:15:08,992 ஆனால் இதன் மூலம், 137 00:15:09,076 --> 00:15:12,704 பல வாரங்களுக்கு போதுமான மீன் கேக்குகள் உங்களிடம் இருக்கும். 138 00:15:13,247 --> 00:15:15,874 அப்படியென்றால், இதற்காக உனக்கு 30 யென் தருகிறேன். 139 00:15:15,958 --> 00:15:17,292 தர முடியாது. 140 00:15:18,043 --> 00:15:19,628 இதைப்போல் மூன்று மடங்கு கிடைக்கவேண்டும். 141 00:15:19,711 --> 00:15:20,712 அப்படியா? 142 00:15:20,796 --> 00:15:22,965 இந்த சிறுமிக்கு என்ன தெரியும்? 143 00:15:23,549 --> 00:15:26,718 குறுந்தெருவை தாண்டினால் டெய்கு ஜோரிம் விற்கும் இடத்தில் 144 00:15:26,802 --> 00:15:30,055 இதில் பாதி அளவுள்ள மீனுக்கு இரண்டு மடங்கு விலை கொடுத்தது எனக்குத் தெரியும். 145 00:15:30,556 --> 00:15:32,391 நாம் அங்கு போவோம். 146 00:15:33,350 --> 00:15:34,977 எதற்காக அவ்வளவு தூரம் போகிறீர்கள்? 147 00:15:37,104 --> 00:15:38,397 எம்பது யென். 148 00:15:38,480 --> 00:15:40,065 இதுதான் என் அதிகபட்ச விலை. 149 00:15:41,316 --> 00:15:42,526 நியாயமானதும் கூட. 150 00:15:42,609 --> 00:15:44,027 ஏற்றுக்கொள்கிறேன். 151 00:15:48,574 --> 00:15:49,741 மிக்க நன்றி. 152 00:15:50,409 --> 00:15:52,828 இதோ! உன் பங்கு. 153 00:15:54,037 --> 00:15:57,457 முடியாது. எனக்கு அனுமதியில்லை. 154 00:15:57,541 --> 00:15:58,542 ஏன் முடியாது? 155 00:15:58,625 --> 00:16:00,002 இது நீ சம்பாதித்தது. 156 00:16:00,085 --> 00:16:02,629 பெரியவர்களை மதிக்க வேண்டும் என உன் பெற்றோர் சொல்லித் தரவில்லையா? 157 00:16:06,133 --> 00:16:09,136 இவள் மீது ஒரு கண் வைக்க வேண்டும். 158 00:16:09,219 --> 00:16:12,639 வீட்டை வாடகைக்கு விடுவதோடு மட்டும் இவள் திருப்தி அடைய மாட்டாள். 159 00:16:12,723 --> 00:16:14,641 நான் அப்படி எதுவும் செய்யவில்லை! 160 00:16:14,725 --> 00:16:17,019 எங்களிடம் முரண்பட்ட இரண்டு கையொப்பமிடப்பட்ட கணக்குகள் உள்ளன. 161 00:16:17,102 --> 00:16:19,396 அவர்கள் பொய் சொல்கிறார்கள். நான் அதில் எதிலும் ஈடுபடவில்லை… 162 00:16:19,479 --> 00:16:21,857 காவல் நிலையத்தில் பேசலாம். எங்களோடு வா. 163 00:16:21,940 --> 00:16:22,941 கெஞ்சி கேட்கிறேன்… 164 00:16:23,025 --> 00:16:25,194 காவல் நிலையத்தில் கெஞ்சு. 165 00:16:28,864 --> 00:16:31,408 அவர்கள் நம்மை கடுமையாக நடத்துவதில்லை என்கிறார்கள். 166 00:16:31,491 --> 00:16:33,160 இதுதான் அதன் அர்த்தமா? 167 00:16:35,204 --> 00:16:36,288 சுன்ஜா, 168 00:16:37,122 --> 00:16:38,165 போகலாம். 169 00:16:40,876 --> 00:16:42,920 பிறகு வீட்டில் பார்க்கிறேன். 170 00:16:48,091 --> 00:16:49,551 அப்பா, 171 00:16:50,260 --> 00:16:52,804 சந்தையில் இருந்தவர், 172 00:16:53,639 --> 00:16:55,140 அவர் ஏதாவது தவறு செய்துவிட்டாரா? 173 00:16:55,933 --> 00:16:57,309 எனக்குத் தெரியாது. 174 00:16:57,893 --> 00:16:59,144 இது போன்ற நேரங்களில், 175 00:17:00,646 --> 00:17:04,358 குற்ற உணர்வோ அப்பாவித்தனமோ ஒரு எளிய கேள்வியே அல்ல. 176 00:17:06,818 --> 00:17:09,154 அவருக்கு என்ன ஆகும்? 177 00:17:09,988 --> 00:17:12,031 அவர் வீடு திரும்புவாரா? 178 00:17:13,534 --> 00:17:14,576 சுன்ஜா, 179 00:17:15,993 --> 00:17:17,871 நான் ஒருமுறை உனக்கு சத்தியம் செய்தேன். 180 00:17:19,164 --> 00:17:21,791 நீ ஒரு வார குழந்தையாக இருந்தபோது, 181 00:17:22,416 --> 00:17:25,212 உன் அம்மாவும் நானும் அரிதாகவே தூங்கினோம். 182 00:17:27,464 --> 00:17:30,217 நாங்கள் இரவு பகல் தூக்கமின்றி உன்னை கவனித்தோம். 183 00:17:31,802 --> 00:17:33,929 அப்போதுதான் உனக்கு சத்தியம் செய்தேன், 184 00:17:35,806 --> 00:17:38,559 நீ உயிர்வாழும் வரை, 185 00:17:38,642 --> 00:17:45,023 உலகின் அக்கிரமம் எதுவும் உன்னை பாதிக்காமல் இருக்க நான் எதையும் செய்வேன் என்று. 186 00:17:49,820 --> 00:17:51,780 நான் அந்த சத்தியத்தை காப்பாற்றுவேன். 187 00:18:38,535 --> 00:18:39,745 பாட்டி! 188 00:19:43,058 --> 00:19:44,476 அந்த சத்தத்தை கேள். 189 00:19:47,104 --> 00:19:51,066 நீ எவ்வளவு பயிற்சி செய்தாய் என்பது முக்கியமல்ல, அது பயன் தரவில்லை. 190 00:19:51,733 --> 00:19:53,735 பிறகு ஏன் நான் இதை விட்டுவிட அனுமதிக்கவில்லை? 191 00:19:53,819 --> 00:19:56,446 இந்த பியானோவின் விலை எவ்வளவு தெரியுமா? 192 00:19:56,530 --> 00:19:57,614 நிச்சயமாக! 193 00:19:57,698 --> 00:19:59,533 நீங்கள் அதை எனக்கு தினமும் ஞாபகப்படுத்துகிறீர்கள். 194 00:19:59,616 --> 00:20:01,451 உனக்கு ஞாபகப்படுத்துவது தேவைப்படுகிறது. 195 00:20:01,535 --> 00:20:06,665 சோம்பேறி அமெரிக்கர்களைப் போல இருப்பதை விட்டுவிட்டு வந்து எனக்கு உதவி செய். 196 00:20:06,748 --> 00:20:07,958 சரி. 197 00:20:45,329 --> 00:20:48,290 அந்த மனிதரே சொற்பமாகவே சம்பாதிக்கிறார், நீ அவரிடம் பணம் பெற்றிருக்கிறாய். 198 00:20:48,874 --> 00:20:50,083 அதைப் பற்றி பேசுவதை நிறுத்து. 199 00:20:51,919 --> 00:20:53,921 அதோடு நீங்கள்! 200 00:20:54,004 --> 00:20:56,089 நீங்கள் அவளுக்கு துணை நிற்பதில் எந்த நன்மையும் இல்லை. 201 00:20:58,133 --> 00:20:59,718 இவளை பள்ளிக்கு அனுப்புவதைப் பற்றி பேசுகிறேன். 202 00:20:59,801 --> 00:21:01,345 அதனால் என்ன ஆகிவிட போகிறது? 203 00:21:02,262 --> 00:21:04,097 கஷ்ட காலங்கள், நல்ல காலங்கள். 204 00:21:04,181 --> 00:21:06,475 ஒரு பெண்ணுக்கு எதுவும் பொருட்டல்ல. 205 00:21:07,100 --> 00:21:09,520 அவள் பிழைக்க கற்றுக்கொள்ள வேண்டும். 206 00:21:11,605 --> 00:21:14,900 இன்று தண்ணீர் அமைதியாகவும் நீச்சலுக்கு ஏற்றதாகவும் இருக்கிறது. 207 00:21:14,983 --> 00:21:17,653 நான் பெண்களுடன் பாடம் கற்றுக்கொள்கிறேன். 208 00:21:18,779 --> 00:21:19,863 நான் போகட்டுமா? 209 00:21:20,614 --> 00:21:22,032 நான் சொன்னது கேட்டதா? 210 00:21:23,325 --> 00:21:25,244 அடுத்த முறை, நான் ஒரு பெண் என்பதால் 211 00:21:25,327 --> 00:21:27,913 அவருக்கு கீழ்படிய தேவையில்லை என்று திரு. சாங்கிடம் சொல்கிறேன். 212 00:21:28,413 --> 00:21:29,957 அதை விடு… 213 00:21:30,040 --> 00:21:33,585 அதோடு அவர் எனக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு நல்ல மீனவர் இல்லை என்றும். 214 00:21:36,004 --> 00:21:37,047 நல்லது, சென்று வா. 215 00:21:41,593 --> 00:21:42,594 நீங்கள். 216 00:21:42,678 --> 00:21:45,973 நீங்கள் அவளை நேசிப்பது நல்லதுதான், ஆனால் செல்லங்கொஞ்சுவது, 217 00:21:46,056 --> 00:21:49,852 அது அவள் வாழ்க்கையைத் தான் பாதிக்கும். 218 00:21:49,935 --> 00:21:53,021 சிறிய சந்தோஷம் நம் மகளின் வாழ்க்கையை பாதிக்குமா? 219 00:21:53,105 --> 00:21:54,731 ஆனால் அது உங்கள் பணம் இல்லை! 220 00:21:54,815 --> 00:21:56,900 அது இன்னொருவரின் கருணை. 221 00:21:58,277 --> 00:22:02,406 இந்த உலகில் கருணை என்றொரு விஷயம் இருப்பது அவளுக்குத் தெரிய வேண்டும். 222 00:22:03,448 --> 00:22:06,869 அது அவளுக்கு நன்மையை தரும். 223 00:22:34,271 --> 00:22:36,273 சுன்ஜா! 224 00:22:37,566 --> 00:22:39,526 என்னைப் பாருங்கள்! 225 00:24:12,369 --> 00:24:13,412 சுன்ஜா! 226 00:24:16,707 --> 00:24:17,708 சுன்ஜா! 227 00:24:19,668 --> 00:24:21,587 அப்பா! 228 00:24:23,714 --> 00:24:25,841 நான் சாதித்துவிட்டேன்! 229 00:24:29,636 --> 00:24:32,514 மேலே பறக்கிறேன் 230 00:24:32,598 --> 00:24:37,519 எல்லைகள் அற்ற வானத்தில் 231 00:24:38,812 --> 00:24:43,567 தனித்த கடல்பறவையோடு நட்பு கொள்ளுங்கள் 232 00:24:43,650 --> 00:24:46,987 நாம் போராடலாம் 233 00:24:48,238 --> 00:24:52,743 -எனோயா யானோயா! -யேச்சா! 234 00:24:52,826 --> 00:24:57,289 எயானோ யானோ யூகி-இ யேச்சா! 235 00:24:57,372 --> 00:25:00,834 நாம் கடலுக்குச் செல்வோம் 236 00:25:03,295 --> 00:25:05,631 நீங்கள் அதிர்ஷ்டசாலி! 237 00:25:05,714 --> 00:25:07,883 உங்கள் மகள் நத்தை சிப்பியை சேகரித்திருக்கிறாள், 238 00:25:07,966 --> 00:25:09,801 அதோடு உங்கள் மனைவி அருமையாக சமைக்கிறார். 239 00:25:09,885 --> 00:25:12,971 இதற்கும் அதிர்ஷ்டத்துக்கும் சம்பந்தம் இல்லை. 240 00:25:13,055 --> 00:25:18,143 -இதையெல்லாம் சம்பாதித்தான். -அது சரிதான்! 241 00:25:19,645 --> 00:25:21,313 இதோ, குடி. 242 00:25:21,939 --> 00:25:24,191 வேண்டாம். நான் குடிகாரன் இல்லை. 243 00:25:24,274 --> 00:25:26,568 அட, ஒரே ஒரு பானம். 244 00:25:32,866 --> 00:25:37,746 நம்மால் முடியும்போதே சிறு வெற்றிகளை கொண்டாடுவோம். 245 00:25:39,581 --> 00:25:40,999 சியர்ஸ். 246 00:25:43,210 --> 00:25:44,586 ஆனால் காத்திருங்கள். 247 00:25:45,170 --> 00:25:46,672 காலப்போக்கில், 248 00:25:46,755 --> 00:25:50,717 இதையும் நம்மிடமிருந்தும் பறிக்க அவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள். 249 00:25:50,801 --> 00:25:53,220 முட்டாள்தனம்! நம்மிடமிருந்து கடலை எப்படி பறிப்பார்கள்? 250 00:25:56,139 --> 00:25:57,891 முட்டாள் போல் பேசாதே. 251 00:25:58,767 --> 00:26:01,019 அப்படியா? என்ன சொல்கிறாய்? 252 00:26:01,728 --> 00:26:04,022 அவர்கள் நம் நிலத்தைப் பறித்தார்கள், 253 00:26:04,857 --> 00:26:05,858 சரியா? 254 00:26:05,941 --> 00:26:07,568 நம் அரிசியைப் பறித்தார்கள், 255 00:26:07,651 --> 00:26:08,986 நம் உருளைக்கிழங்குகளை, 256 00:26:09,069 --> 00:26:10,320 நம் மீன்களை. 257 00:26:10,404 --> 00:26:12,656 வெள்ளை உடை அணிவதை நிறுத்துமாறு நம் பெண்களுக்கு உத்தரவிட்டனர். 258 00:26:14,533 --> 00:26:18,829 அந்த இழிபிறவிகள் அவர்களை போலவே நம்மை சாப்பிட வைக்கிறார்கள், 259 00:26:18,912 --> 00:26:20,539 அவர்களைப் போலவே பேச வைக்கிறார்கள், 260 00:26:21,331 --> 00:26:24,293 ஆனால் நம்மை அவர்களில் ஒருவராக பார்க்க மாட்டார்கள். 261 00:26:24,376 --> 00:26:28,422 அவர்கள் ஏன் அப்படி செய்ய வேண்டும்? 262 00:26:28,505 --> 00:26:31,091 இந்த நாட்டை இழந்தது நம் தவறு. 263 00:26:31,175 --> 00:26:33,302 போதும். 264 00:26:34,803 --> 00:26:40,309 ஆனால் பாருங்கள், நாம் ஒவ்வொருவரும் ஒரு ஜப்பானியரை மட்டும் கொன்றால், 265 00:26:41,476 --> 00:26:44,146 அது நம் கோபத்தை தணிக்காது, 266 00:26:44,229 --> 00:26:46,982 ஆனால் நாம் குறைந்தபட்சம் கனவு காண ஏதாவது இருக்கும். 267 00:26:48,567 --> 00:26:51,778 இந்த கையில் ஒரு கல்லை எடுத்து 268 00:26:51,862 --> 00:26:55,741 ஒரு சிப்பாயின் தலையை உடைத்தால்… 269 00:26:56,408 --> 00:27:01,788 அவனது இரத்தத்தால் என் குளிர்ந்த கைகளை சூடேற்றலாம். 270 00:27:03,081 --> 00:27:08,086 நம் நிலத்தில் கரப்பான் பூச்சி ஒன்று குறைவாகவே சுற்றித் திரிகிறது என்பதை அறிவது 271 00:27:09,004 --> 00:27:12,883 எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரும்! 272 00:27:14,343 --> 00:27:16,553 இந்தப் பேச்சை நிறுத்து. 273 00:27:19,264 --> 00:27:21,934 இது மிகவும் சிரமம்… 274 00:27:24,937 --> 00:27:27,523 இந்த வெறுப்புடன் வாழ்வது. 275 00:27:31,777 --> 00:27:33,737 நம்மைப் போலவே… 276 00:27:36,657 --> 00:27:39,576 நம் குழந்தைகளும் சபிக்கப்படுவார்கள். 277 00:27:42,162 --> 00:27:43,997 இது எப்படி முடிவடையும்? 278 00:27:58,095 --> 00:27:59,304 அவனை ஏன் தடுக்கவில்லை? 279 00:28:01,932 --> 00:28:03,350 நான் எப்படி அவனை தடுத்திருக்க முடியும்? 280 00:28:03,433 --> 00:28:04,601 யாராவது பேசினால்… 281 00:28:04,685 --> 00:28:06,311 அவர்கள் பேச மாட்டார்கள். 282 00:28:06,395 --> 00:28:08,605 அவர்கள் பல மாதங்களாக நம் இடத்தில் வசிக்கிறார்கள். 283 00:28:08,689 --> 00:28:10,274 ஒருவர் ஏதாவது பேசினால் போதும்… 284 00:28:10,357 --> 00:28:11,525 இப்போது அமைதியாக இரு. 285 00:28:13,986 --> 00:28:15,237 அமைதிப்படுத்திக்கொள். 286 00:28:16,738 --> 00:28:18,740 நாம் எந்த தவறும் செய்யவில்லை. நம்மை ஏன் கைது செய்வார்கள்? 287 00:28:20,033 --> 00:28:23,662 அந்த பேச்சுக்கு பிறகும், உணவளித்து, வீடு கொடுக்கிறோம். இது தவறில்லையா? 288 00:28:24,663 --> 00:28:27,082 ஜப்பானியர்கள் நமக்காக வந்தால், 289 00:28:27,165 --> 00:28:28,792 சுன்ஜாவை யார் கவனித்துக்கொள்வார்கள்? 290 00:28:29,835 --> 00:28:32,796 இது எல்லாம் வேலை செய்யும், நீ பார்ப்பாய். 291 00:28:32,880 --> 00:28:35,174 உங்களுக்குத் தெரியாது… 292 00:28:38,343 --> 00:28:40,846 உங்கள் வயிறு நிறைந்ததா? 293 00:28:41,555 --> 00:28:42,598 மேடம், 294 00:28:42,681 --> 00:28:47,644 நீங்கள் நன்றாக உணவளிக்கிறீர்கள். நீங்கள் மிகவும் நல்லவர். 295 00:29:22,763 --> 00:29:24,681 சுன்ஜா, என்ன? 296 00:29:24,765 --> 00:29:27,267 நேற்று இரவு நீங்கள் முட்டாள்தனமான விஷயங்களைச் சொன்னீர்கள், 297 00:29:27,351 --> 00:29:29,228 எல்லோரும் இப்போது பயப்படுகிறார்கள். 298 00:29:30,354 --> 00:29:33,607 பயமா? யாருக்குப் பயப்படுகிறார்கள்? 299 00:29:33,690 --> 00:29:40,405 எல்லோரும். யாரும் அதைச் சொல்லவில்லை, ஆனால் நீங்கள் செல்ல விரும்புகிறார்கள். 300 00:29:42,241 --> 00:29:45,494 ஆனால் நான் எங்கு போவேன்? எனக்கு எங்கும் இடமில்லை. 301 00:29:45,577 --> 00:29:48,622 எங்கேயோ. போய்விடுங்கள். 302 00:29:52,793 --> 00:29:54,253 சுன்ஜா, 303 00:29:54,336 --> 00:29:56,171 நான் அதிகமாக குடித்திருந்தேன். 304 00:29:56,255 --> 00:29:59,925 மிகவும் தாழ்வான உணர்வால் சோர்வடைந்த மனிதனின் பொறுப்பற்ற வார்த்தைகள் அவை. 305 00:30:00,008 --> 00:30:01,552 உனக்குப் புரிகிறது தானே? 306 00:30:02,594 --> 00:30:03,929 இல்லை. 307 00:30:04,012 --> 00:30:07,641 நான் ஜப்பானியரின் மண்டையை உடைக்க விரும்பவில்லை. 308 00:30:08,892 --> 00:30:11,562 அதோடு நான் என் அம்மாவையும் அப்பாவையும் இழக்க விரும்பவில்லை. 309 00:30:11,645 --> 00:30:13,188 தனியாக இருக்க… 310 00:30:13,981 --> 00:30:15,482 அதற்கு பதில் நான் இறந்துவிடுவேன். 311 00:30:21,280 --> 00:30:23,615 சுன்ஜா, நன்றாகக் கேள். 312 00:30:23,699 --> 00:30:28,287 நான் சொன்னதை மறந்துவிடு. 313 00:30:29,079 --> 00:30:33,166 இனி இந்த உலகில் வாழ வழி தெரியாத மனிதன் நான். 314 00:30:35,419 --> 00:30:36,587 புரிந்ததா? 315 00:30:39,631 --> 00:30:40,716 நல்லது. 316 00:31:19,338 --> 00:31:22,090 மீனவர் சாங்கை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? 317 00:31:23,342 --> 00:31:24,885 சில நாட்களாகிறது. 318 00:31:25,511 --> 00:31:29,473 அவன் எங்கே போயிருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? 319 00:31:30,641 --> 00:31:33,435 மன்னிக்கவும். அவரைப் பற்றி எனக்குத் தெரியாது. 320 00:31:42,986 --> 00:31:44,112 அப்பா! 321 00:31:44,821 --> 00:31:46,198 அப்பா! 322 00:31:48,367 --> 00:31:49,576 அப்பா! 323 00:31:52,162 --> 00:31:53,497 அப்பா! 324 00:31:56,166 --> 00:31:57,668 அப்பா! 325 00:31:59,169 --> 00:32:00,420 அப்பா! 326 00:32:13,350 --> 00:32:16,979 துரோகத்தின் அறிகுறிகளை இதற்கு முன்பு அவனிடம் பார்த்ததில்லை. 327 00:32:18,564 --> 00:32:20,274 ஆனால் தனது எல்லா பொருட்களையும் விட்டு சென்றுவிட்டான். 328 00:32:21,859 --> 00:32:23,944 அவன் எங்களுக்கு இன்னும் இரண்டு மாத வாடகை கொடுக்க வேண்டும். 329 00:32:31,159 --> 00:32:33,704 கேள்விக்குரிய இரவு பற்றி? 330 00:32:35,831 --> 00:32:37,624 அவன் அதிகமாக குடித்திருந்தான். 331 00:32:38,125 --> 00:32:40,294 அதனால் அவனை மன்னிக்கலாம் என நம்புகிறீர்களா? 332 00:32:46,091 --> 00:32:49,553 இல்லை, இல்லவே இல்லை. 333 00:32:49,636 --> 00:32:54,183 அவனுடைய வார்த்தைகளால் நாங்கள் எல்லோரும் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். 334 00:32:55,726 --> 00:32:57,603 ஆனால் நீங்கள் அவனைப் பற்றி புகாரளிக்கவில்லை. 335 00:33:01,815 --> 00:33:04,860 இப்படிப்பட்ட துரோகியை பார்த்தால், 336 00:33:04,943 --> 00:33:07,237 அவனைப் பற்றி புகாரளிப்பது உங்கள் கடமை. 337 00:33:09,281 --> 00:33:12,576 -சார்… -குறுக்கிட எவ்வளவு தைரியம்? 338 00:33:19,166 --> 00:33:25,172 நம் முன்னேற்றத்தையும், கல்வியையும் இந்த முட்டாள்களுக்கு கொடுக்கிறோம், 339 00:33:25,839 --> 00:33:28,717 நம் முகத்துக்கு நேராக பொய் சொல்வதற்கு மட்டுமே. 340 00:33:28,800 --> 00:33:30,135 அமைதியாக இரு. 341 00:33:30,219 --> 00:33:33,597 இதை ஒரு எச்சரிக்கையுடன் முடித்துக் கொள்வோம். 342 00:33:33,680 --> 00:33:36,600 நாம் அவர்களிடம் மிகவும் மென்மையாக நடந்துகொள்கிறோம். 343 00:33:36,683 --> 00:33:37,851 நமக்கு வேறு வழியில்லை. 344 00:33:37,935 --> 00:33:39,937 அவர்களிடம் மிகவும் கடுமை காட்டினால், புரட்சி வெடிக்கும். 345 00:33:44,525 --> 00:33:46,401 உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது. 346 00:33:48,654 --> 00:33:51,657 அவன் எங்கிருக்கிறான் என்று கேள்விப்பட்டால் சொல்லுங்கள். 347 00:34:00,123 --> 00:34:02,960 பெண்ணே, உங்கள் சமையலைப் பற்றி நிறையப் பாராட்டி கேட்டிருக்கிறேன். 348 00:34:03,627 --> 00:34:08,422 எல்லோரும் சொல்வது உண்மையா என்று பார்க்க ஒருமுறை வர வேண்டும். 349 00:34:11,385 --> 00:34:12,719 எப்போது வேண்டுமானாலும், நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். 350 00:34:14,179 --> 00:34:15,222 போகலாம். 351 00:34:41,831 --> 00:34:43,583 எப்படி அவனுக்கு ஓடிப்போக வேண்டும் என தெரிந்தது? 352 00:34:44,710 --> 00:34:45,918 யாராவது அவனை எச்சரித்தார்களா? 353 00:34:47,629 --> 00:34:48,839 நான் ஒன்றும் சொல்லவில்லை. 354 00:35:04,688 --> 00:35:08,150 இதையெல்லாம் நாம் சாப்பிட வழியில்லை. அதிகமாக சமைக்கிறீர்கள். 355 00:35:08,233 --> 00:35:10,027 நீ சாப்பிட வேண்டும். 356 00:35:10,110 --> 00:35:11,570 உன்னை கண்ணாடியில் பார்! 357 00:35:12,404 --> 00:35:15,073 எலும்பும் தோலுமாக. 358 00:35:15,157 --> 00:35:16,617 பச்சை வெங்காயங்களை போடு. 359 00:35:19,578 --> 00:35:22,873 குளிர்ந்த நீரில் கையை வை. 360 00:35:23,457 --> 00:35:27,419 உன் அப்பாவைப் போலவே நீயும் சமைக்காமல் வேலையாக இருக்கிறாய். 361 00:35:27,503 --> 00:35:29,421 நீங்கள் இருவரும் அதிகமாக வேலை செய்கிறீர்கள். 362 00:35:30,005 --> 00:35:31,798 பச்சிங்கோ பார்லரை விற்கச் சொன்னேன். 363 00:35:31,882 --> 00:35:35,928 ரியல் எஸ்டேட் வளர்கிறது, எனவே அவர் கடைகள், குடியிருப்புகளில் முதலீடு செய்ய வேண்டும். 364 00:35:36,011 --> 00:35:38,597 -அப்படியானால் அவன் சொல்லவில்லையா? -என்ன? 365 00:35:38,680 --> 00:35:40,849 இரண்டாவது பார்லரைத் திறக்கவிருக்கிறான். 366 00:35:42,684 --> 00:35:44,061 ஆச்சரியப்படுவது போல நடிக்காதே. 367 00:35:44,144 --> 00:35:46,396 அவன் அதைப் பற்றி சிந்திப்பது உனக்குத் தெரியும். 368 00:35:48,315 --> 00:35:49,733 அவருக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது? 369 00:35:49,816 --> 00:35:51,527 வங்கியிலிருந்து. 370 00:35:51,610 --> 00:35:53,820 எல்லோரும் இப்போது அதைத்தான் செய்கிறார்கள். 371 00:35:55,405 --> 00:35:59,201 அவன் கட்டமைத்ததைப் பற்றி அவன் பெருமைப்படுகிறான். 372 00:35:59,284 --> 00:36:02,246 அவன் உன் தலைகுனிவை கேட்க வேண்டிய அவசியமில்லை. 373 00:36:02,955 --> 00:36:04,540 தலைகுனிவு பற்றி யார் சொன்னது? 374 00:36:04,623 --> 00:36:06,625 அதை நீ சொல்ல வேண்டியதில்லை. 375 00:36:06,708 --> 00:36:12,381 அதைப் பற்றி அறிய என் வாழ்க்கையில் நான் போதுமான அளவு அனுபவித்துவிட்டேன். 376 00:36:15,342 --> 00:36:16,885 ஒரு முட்டையை எடு. 377 00:36:26,728 --> 00:36:28,021 நேர்மையாக சொல். 378 00:36:28,730 --> 00:36:31,400 நீ திரும்பிச் செல்கிறாய் தானே? நீ தங்கவில்லை தானே? 379 00:36:33,068 --> 00:36:34,236 என்ன இது? 380 00:36:34,945 --> 00:36:39,533 கொரியர்களாகிய நமக்கு இங்கே நிலைமை மாறிவிட்டது என உன் அப்பா நினைக்கலாம், 381 00:36:39,616 --> 00:36:41,159 ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும். 382 00:36:42,870 --> 00:36:44,663 நீ அமெரிக்காவில் பாதுகாப்பாக இருப்பாய். 383 00:36:45,789 --> 00:36:47,457 சரியாக எதிலிருந்து பாதுகாப்பாக? 384 00:36:49,668 --> 00:36:50,711 சாலமன்? 385 00:36:50,794 --> 00:36:52,504 -சாலமன்! -திரு. எட்சுகோ! 386 00:36:53,839 --> 00:36:57,384 மன்னிக்கவும் உணவகம் மிகவும் பிஸியாக இருந்தது. முன்னதாக வெளியேற முடியவில்லை. 387 00:36:58,135 --> 00:36:59,428 வாரம் முழுவதும் பணியாளர்கள் குறைவாகவே இருந்தார்கள். 388 00:37:00,012 --> 00:37:03,473 உன் அப்பா வேலையாக இருப்பதால் என்னை அழைத்து வர இயலாது என்றார். 389 00:37:05,100 --> 00:37:08,687 ஆனால் உன்னைப் பார். நீ மிகவும் அழகாகிவிட்டாய். 390 00:37:09,646 --> 00:37:12,107 வாழ்க்கை எவ்வளவு நியாயமற்றது. 391 00:37:12,191 --> 00:37:14,276 எனக்கு இன்னும் சுருக்கங்கள் தோன்றும்போது, நீ மட்டும் 392 00:37:14,359 --> 00:37:16,320 அழகாகிக்கொண்டே போகக்கூடாது, சாலமன். 393 00:37:16,403 --> 00:37:18,197 என்ன சொல்கிறீர்கள், திரு. எட்சுகோ? 394 00:37:18,280 --> 00:37:19,740 உங்களுக்குப் பெரிதாக வயதாகவில்லை. 395 00:37:20,365 --> 00:37:21,700 பார்த்தாயா? இதுதான். 396 00:37:21,783 --> 00:37:24,203 இதற்காகத்தான் அந்த அமெரிக்க பெண்கள் உன்னை காதலிக்க வேண்டும். 397 00:37:24,286 --> 00:37:25,621 எனக்குத் தெரியும். 398 00:37:26,371 --> 00:37:27,623 ஹேய்! பஜியோன்! 399 00:37:32,044 --> 00:37:34,671 உனக்கு பைத்தியமா? நல்ல உணவை தூக்கி எறிகிறாய்! 400 00:37:34,755 --> 00:37:35,839 இங்கே வை. 401 00:38:35,732 --> 00:38:37,067 "நான் ரிகிடோசன்!" 402 00:38:50,581 --> 00:38:53,417 ஹாய்-ச்யூ 403 00:39:03,177 --> 00:39:06,555 இவை ஹனாவிற்கு பிடித்தவை, இல்லையா? 404 00:39:08,098 --> 00:39:09,391 ஆம். 405 00:39:14,229 --> 00:39:16,148 நீ இன்னும் ஏன் இவற்றை வைத்திருக்கிறாய்? 406 00:39:16,899 --> 00:39:19,401 உணர்வுபூர்வமான காரணங்களுக்காக என நினைக்கிறேன். 407 00:39:26,408 --> 00:39:28,744 ஹனா உங்களை தொடர்பு கொண்டாளா? 408 00:39:30,829 --> 00:39:32,039 இல்லை. 409 00:39:34,917 --> 00:39:38,462 ஆனால் நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்ட புதிய துப்பறிவாளர் ஒருவரை பணியமர்த்தினோம். 410 00:39:39,671 --> 00:39:41,048 நம்பிக்கையானதாக தெரிகிறது. 411 00:39:53,727 --> 00:39:55,187 அவளுடைய கை… 412 00:39:56,980 --> 00:39:59,399 இப்போது என்னுடையதை விட பெரியதாக இருக்குமோ? 413 00:40:00,734 --> 00:40:02,444 அல்லது அதே அளவுதானா? 414 00:40:05,155 --> 00:40:08,617 அவள் இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்? 415 00:40:11,954 --> 00:40:14,248 உனக்கு குழந்தைகள் இருக்கும்போது, நீ புரிந்துகொள்வாய். 416 00:40:17,501 --> 00:40:19,878 அவளுக்கு ஏதாவது நேர்ந்தால்… 417 00:40:22,422 --> 00:40:24,550 எனக்கு ஏதாவது தோன்றும். 418 00:40:27,344 --> 00:40:31,557 உனக்கும்தான், நீயும் அவளை நேசித்தாய், இல்லையா? 419 00:40:36,019 --> 00:40:40,774 நீ திரும்பி வந்ததில் இருந்து உன் அப்பா முகத்தில் ஒரே சிரிப்புதான். 420 00:40:40,858 --> 00:40:44,236 அவரை அப்படி சிரிக்க வைக்க என்னால் மட்டுமே முடியும் என்று நினைத்தேன்! 421 00:40:46,238 --> 00:40:48,490 அதோடு உன் அம்மா… 422 00:40:49,408 --> 00:40:50,909 அவள் பெருமைப்படுவாள். 423 00:40:52,828 --> 00:40:53,912 எனக்குத் தெரியும். 424 00:41:24,484 --> 00:41:27,196 அப்பா, ஏதோ நடக்கிறது. 425 00:41:28,864 --> 00:41:29,865 சுன்ஜா! 426 00:41:57,476 --> 00:41:59,186 சீக்கிரம். நட! 427 00:42:08,070 --> 00:42:09,530 இங்கே வா. 428 00:42:27,089 --> 00:42:31,426 -ஏனோயா யானோயா! -என்ன செய்கிறாய்? 429 00:42:32,052 --> 00:42:37,099 எயானோ யானோ யூகி-இ யேச்சா! 430 00:42:37,182 --> 00:42:40,060 நாம் கடலுக்குச் செல்வோம் 431 00:42:40,143 --> 00:42:41,144 அமைதி! 432 00:42:44,189 --> 00:42:48,235 மேலே பறப்போம் 433 00:42:48,318 --> 00:42:52,030 -எல்லைகள் அற்ற வானத்தில் -போதும்! 434 00:42:54,032 --> 00:42:55,242 கேடுகெட்டவனே! 435 00:42:57,202 --> 00:43:00,330 தனித்த கடல்பறவையோடு நட்பு கொள்ளுங்கள் 436 00:43:00,414 --> 00:43:02,416 நாம் போராடலாம் 437 00:43:05,294 --> 00:43:08,046 தனித்த கடல்பறவையோடு நட்பு கொள்ளுங்கள் நாம் போராடலாம் 438 00:43:10,674 --> 00:43:14,678 எனோயா யானோயா! 439 00:43:14,761 --> 00:43:19,600 எயானோ யானோ யூகி-இ யேச்சா! 440 00:43:19,683 --> 00:43:23,896 நாம் கடலுக்குச் செல்வோம் 441 00:44:02,559 --> 00:44:06,688 டோக்கியோ 442 00:44:41,640 --> 00:44:43,350 ஷிஃப்லிஸ் 443 00:44:44,726 --> 00:44:45,811 காலை வணக்கம். 444 00:44:52,442 --> 00:44:55,153 வந்ததற்கு நன்றி, திரு. யோஷி. 445 00:45:00,075 --> 00:45:02,369 நான் அவரை தொலைக்காட்சியில் பார்த்தேன். 446 00:45:02,452 --> 00:45:05,080 ஆம், அவர் அலுவலகத்தின் புகழ்பெற்ற வாடிக்கையாளர். 447 00:45:08,041 --> 00:45:11,795 வரவேற்கிறோம், திரு. பேக். நான் உங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். 448 00:45:11,879 --> 00:45:16,592 …முதலில், நாம் உள்நாட்டில் கையாளக்கூடியது. 449 00:45:16,675 --> 00:45:18,093 எனவே, கோடை காலத்தில்… 450 00:45:21,680 --> 00:45:22,681 தயவுசெய்து, இந்த வழியாக வாருங்கள். 451 00:45:37,529 --> 00:45:38,864 ஷிஃப்லிஸ் சாலமன் பேக் 452 00:45:53,420 --> 00:45:55,923 -சாலமன் பேக். -திரு. ஆண்ட்ரூஸ். 453 00:45:56,924 --> 00:45:59,009 -டாம். -உன்னைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். 454 00:45:59,927 --> 00:46:00,969 என்னிடம் உண்மையைச் சொல். 455 00:46:02,012 --> 00:46:04,640 நான் உன்னிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமா? இது அப்படிப்பட்டதா? 456 00:46:05,349 --> 00:46:07,768 என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் இங்கே தங்க வரவில்லை. 457 00:46:09,186 --> 00:46:11,688 சரி. வரவேற்கிறேன். 458 00:46:13,524 --> 00:46:16,443 மன்னியுங்கள்! தயவுசெய்து கவனிக்கிறீர்களா? 459 00:46:24,201 --> 00:46:25,202 என்ன நடக்கிறது? 460 00:46:29,998 --> 00:46:32,709 ஜப்பானின் பேரரசர் ஹிரோஹிட்டோ காலமானார். 461 00:46:32,793 --> 00:46:35,712 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பேரரசர் புற்றுநோயால் இறந்தார். 462 00:46:35,796 --> 00:46:37,089 அவருக்கு வயது 87… 463 00:46:46,473 --> 00:46:51,103 இன்று, தேசம் ஒரு மாமனிதருக்கு இரங்கல் தெரிவிக்கிறது… 464 00:46:51,186 --> 00:46:53,355 கொரியாவை ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது அவர் ஆட்சி செய்தார். 465 00:46:53,438 --> 00:46:55,023 கடந்த காலத்தில் கடவுளாக கருதப்பட்டவர்… 466 00:46:55,107 --> 00:46:58,735 கொரியாவை ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது அவர் ஆட்சி செய்தார், 467 00:46:58,819 --> 00:47:03,156 அப்போது பல குடும்பங்கள் பிரிந்து, அன்புக்குரியவர்களை இழந்தனர். 468 00:47:29,850 --> 00:47:31,643 சுன்ஜா. 469 00:48:01,215 --> 00:48:02,257 அப்பா. 470 00:48:07,012 --> 00:48:08,013 அப்பா. 471 00:48:13,227 --> 00:48:14,394 அப்பா. 472 00:48:28,033 --> 00:48:29,618 நீண்ட காலத்திற்கு முன்பு, 473 00:48:30,744 --> 00:48:34,206 ஏன் எனக்கு மட்டும் அதிர்ஷ்டம் இல்லை என்று நான் ஆச்சரியப்பட்டேன், 474 00:48:35,958 --> 00:48:42,381 மற்றவர்கள் அனுபவிக்கும் அன்றாட சந்தோஷங்கள் எனக்கு ஏன் சாத்தியமில்லை என்று தோன்றியது. 475 00:48:44,466 --> 00:48:47,970 அப்போதுதான், உன் அம்மா வந்தாள், 476 00:48:49,304 --> 00:48:50,597 பிறகு நீ… 477 00:48:52,349 --> 00:48:57,688 அதிர்ஷ்டத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணர்ந்தேன். 478 00:48:59,523 --> 00:49:04,862 உனக்கு தகுதியானவன் என்று நான் நிரூபிக்க வேண்டியிருந்தது, சுன்ஜா. 479 00:49:07,239 --> 00:49:09,449 அதோடு இந்த உலகின் 480 00:49:10,617 --> 00:49:14,955 தீங்குகளில் இருந்து உன்னை பாதுகாக்க வலுவாக வளர வேண்டும். 481 00:49:18,041 --> 00:49:20,127 விரைவில் நீயும் பலமானவளாக இருப்பாய். 482 00:49:22,045 --> 00:49:25,132 உனக்கும் குழந்தைகள் பிறப்பார்கள். 483 00:49:26,925 --> 00:49:31,805 அதோடு நீயும் தகுதியானவள் என்று நிரூபிக்க வேண்டும். 484 00:49:34,474 --> 00:49:36,310 உன்னால் முடியும் சுன்ஜா. 485 00:49:39,313 --> 00:49:40,898 நான் உன்னை நம்புகிறேன். 486 00:50:10,886 --> 00:50:16,058 ஒன்பது வருடங்களுக்கு பிறகு 487 00:50:34,952 --> 00:50:36,745 சார், 488 00:50:36,828 --> 00:50:38,997 புதிய மாவட்ட மீன் தரகர் தனது மரியாதை 489 00:50:39,081 --> 00:50:40,791 செலுத்துவது வழக்கம். 490 00:50:42,793 --> 00:50:44,253 ஆம், அவன் ஒரு முட்டாள், 491 00:50:44,336 --> 00:50:46,421 ஆனாலும் அவன் அவர்களில் ஒருவன். 492 00:50:50,050 --> 00:50:52,344 நிச்சயமாக நான் எனது மரியாதையை செலுத்துவேன். 493 00:50:52,427 --> 00:50:53,887 ஒவ்வொரு வாரமும் ஒரு உறையில். 494 00:50:57,349 --> 00:51:00,978 ஆனால் அவன் வேறு ஏதாவது விரும்பினால்… 495 00:51:01,061 --> 00:51:03,856 இல்லை, அவர் அதை விரும்ப மாட்டார். 496 00:51:03,939 --> 00:51:07,484 நீங்கள் எங்கள் வழிகளுக்கு புதியவர், எங்கள் பழக்கவழக்கங்களுக்குப் பழக்கமில்லாதவர்… 497 00:51:07,568 --> 00:51:09,611 அது எப்படி என்று நீ சொல்ல வேண்டியதில்லை. 498 00:51:13,448 --> 00:51:14,616 சுன்ஜா… 499 00:51:55,616 --> 00:51:57,326 அந்த பெண், யார் அவள்? 500 00:51:58,368 --> 00:51:59,912 எந்த பெண்? 501 00:52:02,664 --> 00:52:03,916 அவள். 502 00:52:04,583 --> 00:52:09,463 சுன்ஜா. பார். உனக்காக மிகப்பெரியதை எடுத்து வைத்திருக்கிறேன்! 503 00:52:12,007 --> 00:52:13,717 அவள் யாரும் இல்லை. 504 00:52:16,845 --> 00:52:22,267 அவளுடைய அம்மா யோங்டோவில் வீட்டை வாடகைக்கு விடுகிறார் என நம்புகிறேன். 505 00:52:23,101 --> 00:52:24,394 அவர் ஒரு விதவை. 506 00:54:22,721 --> 00:54:24,723 வசனத் தமிழாக்கம் அருண்குமார்